Published:Updated:

காமமும் கற்று மற 3 - தடு... நிறுத்து... இயங்கு!

காமமும் கற்று மற!
காமமும் கற்று மற!

கூடற்கலை - 3

விடுமுறையில் வந்திருந்த
மனைவியும் மகளும் வீடு திரும்பிட.....

மறதியாய் வாங்கிவந்த
மல்லிச்சரம்
வீடு பூராவும் நிறைந்திருக்கிறது
மௌனமாய் என்னோடு.

- அன்பாதவன்

ரு விவாகரத்து நடக்க என்னவெல்லாம் காரணம் இருக்க முடியும்? வரதட்சணை, மாமியார் கொடுமை, கணவனின் டார்ச்சர்... இப்படிச் சொன்னால், நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்று அர்த்தம். இப்போதெல்லாம் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆண்மைக் குறைவு. ஆண்மைக் குறைவு என்பதற்கு ஓர் ஆண் `அதற்குக் கையாலாகாதவன்’ என்று அர்த்தமல்ல. குழந்தை பெறும் அளவுக்கு வீரியம்கொண்டவனாக இருந்தாலும், ஆணின் ஆண்மை அதைக்கொண்டு உறுதி செய்யப்படாது. ஒரு பெண்ணை முழுமையாகத் திருப்திப்படுத்துவதற்கும், கர்ப்பம் தரிக்கச் செய்வதற்கும் வேறுபாடு உண்டு.

காமமும் கற்று மற 3 - தடு... நிறுத்து... இயங்கு!

சென்னையில் மிகப் பிரபல தொழிலதிபர் அவர். இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே ஒரு பெரிய நிறுவனத்தின் எம்.டி., ஹைதராபாத்திலுள்ள ஓர் ஐ.டி கம்பெனி அதிபரின் மகளுடன் திருமணம்... எனப் பதவிகளும் வாழ்க்கைப் பொறுப்பும் பெற்றவர்.

தொழிலும் குடும்பமும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தன. அவர்களின் குழந்தைக்கு மூன்று வயதானபோது வெடித்தது பூகம்பம். அவருடைய மனைவிக்கு, வீட்டில் வேலை பார்க்கும் டிரைவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மனைவியைக் கண்டித்தார்; அரட்டி, மிரட்டினார். அவள் அப்போதைக்கு டிரைவரிடமிருந்து ஒதுங்கிக்கொள்வதாகச் சொன்னாள். ஆனால், டிரைவரை வேலையைவிட்டுத் துரத்திய பின்னரும் அந்த உறவு தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், விவாகரத்துக்குத் தயாரானார். வழக்கறிஞரின் அறிவுரையின்படி குடும்பநல ஆலோசகரைச் சந்திக்கச் சென்றார்கள் தம்பதியர். அவர்களுக்கிடையே உளச்சிக்கல் ஏதும் இல்லை, உடல் சிக்கல்தான் என்பது அவருக்குப் புரிந்தது. அவரது ஆலோசனையின் பேரில் இருவரும் என்னிடம் வந்தார்கள். வழக்கமான ‘டெம்ப்ளேட்’ கேள்விகளிலேயே பிரச்னையை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அவரின் மனைவியை அனுப்பிவிட்டு, அவரிடம் உண்மையைப் போட்டு உடைத்தேன். ``இந்தப் பிரச்னைக்கு நீங்கள்தான் காரணம்.’’

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், விவாகரத்துக்குத் தயாரானார். வழக்கறிஞரின் அறிவுரையின்படி குடும்பநல ஆலோசகரைச் சந்திக்கச் சென்றார்கள் தம்பதியர். அவர்களுக்கிடையே உளச்சிக்கல் ஏதும் இல்லை, உடல் சிக்கல்தான் என்பது அவருக்குப் புரிந்தது. அவரது ஆலோசனையின் பேரில் இருவரும் என்னிடம் வந்தார்கள். வழக்கமான ‘டெம்ப்ளேட்’ கேள்விகளிலேயே பிரச்னையை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அவரின் மனைவியை அனுப்பிவிட்டு, அவரிடம் உண்மையைப் போட்டு உடைத்தேன். ``இந்தப் பிரச்னைக்கு நீங்கள்தான் காரணம்.’’

காமமும் கற்று மற 3 - தடு... நிறுத்து... இயங்கு!

"டாக்டர்... என்ன சொல்றீங்க? நான் ‘அதுக்கு’ கையாலாகாதவன்கிறதை என்னால ஏத்துக்க முடியாது. அச்சு அசலாக என்னோட மினியேச்சர் மாதிரியே எனக்கு மகள் பிறந்திருக்காளே... எப்படி?’’ என்றார் ஆக்ரோஷமாக. அவரை ஆற்றுப்படுத்தினேன். அவருக்கு இருந்தது ‘விந்து முந்துதல்’ பிரச்னை. அது, எளிதில் குணப்படுத்தக்கூடியது என்பதையும் அதற்கான சில பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் சொன்னேன். இப்போது அவர்களைப்போல ஆதர்ச தம்பதி இல்லை என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்துவருகிறார்கள்.

தனது கட்டுப்பாடின்றி, விந்தணுக்கள் விரைவாக வெளியேறுதல்தான் `விந்து முந்துதல்’ எனப்படும். இந்தப் பிரச்னை எளிதாக குணப்படுத்தக்கூடியது. பூமிக்குக் கீழே 50 அடி ஆழத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், அதே ஊரில் மற்றோர் இடத்தில் 150 அடி ஆழத்திலிருந்துதான் வெளியேறும். இதைப்போலத்தான் ஆணின் விந்தணுக்கள் வெளியேற்றமும்.

செக்ஸின்போது தொடக்கத்திலேயோ அல்லது வெகு சீக்கிரத்திலோ சில ஆண்களின் விந்தணுக்கள் வெளியேறிவிடும். இவர்களை ‘நிமிட ஆண்’ (Minute Man) என்போம். ஒவ்வோர் ஆணும் தன் தாம்பத்ய வாழ்க்கையை நிர்வாகம் செய்யத் தெரிந்த ‘நல்ல அட்மினாக’ இருந்தால்தான் விரும்பும் நேரம்வரை தாம்பத்யத்தின் ருசியைச் சுகிக்க முடியும்; பாட்னருக்கு அந்தச் சுவையைக் குறையின்றி பரிமாறவும் முடியும். சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் இதை எளிதாகச் சரிசெய்யலாம்.

தடு - நிறுத்து - இயங்கு (Pause - Stop - Start)

சுய இன்பம் செய்து விந்தணுக்கள் வெளியேறும் கட்டத்தில், அவை வெளியேறாமல் நிறுத்திவிட வேண்டும். அப்போது, விந்து வெளியேறாதபடி ஆணுறுப்பின் தலைப்பகுதியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். 5-10 விநாடிகள்வரை அப்படியே இருந்தால், வெளியேறவேண்டிய விந்தணுக்கள் தடுக்கப்பட்டு, உள்ளே திரும்பிவிடும். இப்படி, குறிப்பிட்ட இடைவெளியில் சில முறை செய்யலாம்.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

சிந்தனையை மாற்றுங்கள்!

உறவுகொள்ளும்போது சிந்தனையை முழுமையாக இன்பத்தில் வைக்காமல், வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். சாப்பாடு, பைக், கார், சினிமா, விளையாட்டு... என எதன் மீதும் இருக்கலாம். இதனால், உணர்வு நரம்புத் தொகுப்பு விரைவாகத் தூண்டப்படுவது தடுக்கப்படும்.

தாம்பத்யத்துக்கு முன்னர் சுய இன்பம்


தாம்பத்யத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்து விந்தணுக்களை வெளியேற்றிவிடலாம். இதனால் தாம்பத்தியத்தின்போது விந்தணுக்கள் வெளியேறுவது சற்று தாமதப்படும். விந்து முந்துதலுக்கு இந்த மூன்றிலும் குணமாகாதவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெற்று, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

- கற்போம்...

அடுத்த கட்டுரைக்கு