பொதுவாக, காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்வது இயல்பு. ஆனால், `இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்’ என்றொரு நம்பிக்கை பரவிவருகிறது. இது குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் டாப்னி.

“சாப்பிட்ட உணவு வயிற்றினுள் செல்லும்போதே செரிமானத்துக்கான திரவங்கள் சுரக்கத் தொடங்கி, ஜீரணத் தசைகளும் செயல்படத் தொடங்கிவிடும். சாப்பிட்டதும் உறங்கச் செல்வது, அசைவின்றி உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் வயிற்றுப்பகுதியில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டால் செரிமானம் எளிதாகும். `இதைப் பழக்கப்படுத்திக்கொண்டால், உடல் எடை குறையும்; உடல் எடையைச் சரியாக நிர்வகிக்கவும் முடியும்’ என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இரவில் சாப்பிட்ட பிறகு 10 - 15 நிமிடங்கள் நடக்கலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைப் பின்பற்றலாம். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் காலை, மதியம், இரவு உணவுக்குப் பின்னர் என தலா 10 நிமிடங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள், சாப்பிட்டவுடன் எதுக்களித்தல் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.”

ஜெனி ஃப்ரீடா