தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வியர்வை வாடை விரட்டுவோம்!

வியர்வை வாடை விரட்டுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வியர்வை வாடை விரட்டுவோம்!

வியர்வை வாடை விரட்டுவோம்!

வியர்வை.... உடல் தன்னைக் குளிர்வித்துக்கொள்ள இயற்கை அமைத்துக்கொடுத்த வழி. அது உடலுக்கு அரணாக இருப்பதோடு, பல தருணங்களில் அசௌகர்யத்தையும் தருவதுண்டு. குறிப்பாக, வியர்வை வாடை. உடலில் ரோமங்கள் உள்ள பகுதிகளில் அதிகம் வியர்க்கும். அந்தப் பகுதிகளில் `அபோக்ரைன்' என்கிற சுரப்பி இருக்கும். அது 'பெரோமோன்ஸ்' என்கிற ரசாயனத்தை உற்பத்தி செய்யும். அந்த ரசாயனத்துக்கென பிரத்யேகமான வாடை ஒன்று உண்டு. அதுதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.

வியர்வை வாடை விரட்டுவோம்!

வியர்வை வாடையைக் கட்டுப்படுத்த உடலை `டீடாக்ஸ்' செய்ய வேண்டியது அவசியம். அதாவது உடலின் உள்ளுறுப்புகளைச் சுத்தம்செய்வது. உடலை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்வதற்கான சில வழிகள்...

* தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது உடலிலுள்ள அனைத்து அசுத்தங்களையும் வெளியேற்றிவிடும்.

வியர்வை வாடை விரட்டுவோம்!

* ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கிர்ணி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடலாம். இதிலுள்ள வைட்டமின் சி, குடல் சுத்திகரிப்புக்கு உதவும். 
 
* பசலைக்கீரை, முட்டைகோஸ், குடமிளகாய் போன்ற பச்சைக் காய்கறிகள், கீரைகள் அன்றாட மெனுவில் இடம்பெறுவது நல்லது. அவற்றிலுள்ள நார்ச்சத்து உடலிலுள்ள நச்சுகளை நீக்கும்.

* உடலில் உள்ள நச்சுகளை நீக்க கிரீன் டீ குடிப்பதும் உதவும். 

* பசுமையான மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்த சூழலில் தினமும் சிறிது நேரம் நடக்கலாம். உடலுக்குள் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் ஆக்ஸிஜனுக்கு உண்டு.

வியர்வை வாடை விரட்டுவோம்!