Published:Updated:

மொட்டைத்தலை, ஆடையில்லா முதுகு! - இயக்குநர் தஹிராவின் அந்தப் படம் #WorldCancerDay

மொட்டைத்தலை, ஆடையில்லா முதுகு! - இயக்குநர் தஹிராவின் அந்தப் படம் #WorldCancerDay
மொட்டைத்தலை, ஆடையில்லா முதுகு! - இயக்குநர் தஹிராவின் அந்தப் படம் #WorldCancerDay

மொட்டையடிக்கப்பட்ட தலை, திறந்த முதுகு, அதில் ஆழமான அறுவைசிகிச்சை செய்த  தடத்துடன், தஹிரா காஷ்யப்பின் படத்தை ட்விட்டரில் பார்க்கையில், மனம் ஒரு நிமிடம் பயத்தில் பதறுகிறது. மும்பையைச் சேர்ந்த தஹிரா, எழுத்தாளர், பட இயக்குநர், முன்னாள் புரொஃபசர் என்று பன்முகத் திறமையாளர். நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி, இரண்டு சிறு குழந்தைகளின் அம்மா. 

PC: www.bollywoodshaadis.com

சென்ற வருடத்தின் இறுதியில், ரெகுலர் ஹெல்த் செக்கப்புக்காகச் சென்றபோதுதான் தஹிராவுக்கு மார்பகப் புற்றுநோயின் '0' ஸ்டேஜ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  '0' ஸ்டேஜ் என்பது மார்பகப் புற்றுநோயின் அபூர்வமான ஒரு வகை. மார்பகங்களின் நுனிப்பகுதியில் மட்டுமே வருகிற புற்று இது. உடனடியாக, அறுவைசிகிச்சைசெய்து தனது வலதுபக்க மார்பை நீக்கிக் கொண்டார் தஹிரா.  

இந்த நிலையில், உலக புற்றுநோய் தினமான இன்று, அறுவைசிகிச்சை செய்த அடையாளத்துடன்கூடிய, தன் முதுகுப்பக்க படத்தை  ட்விட்டரில் போஸ்ட் செய்த தஹிரா, எல்லோருக்கும் புற்றுநோய் தின வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, தன் வாழ்த்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ''இன்று என்னுடைய நாள். இந்த நாளை அவரவர்க்குப் பிடித்த வழியில் கொண்டாடிக் கொள்வதுதான் புற்றுநோய்குறித்த விழிப்புணர்வை நமக்கெல்லாம் வழங்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய இந்தத் தழும்பை என் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நினைக்கிறேன். அதனால், இந்தத் தழும்பை தழுவிக் கொள்ள விரும்புகிறேன். மகிழ்ச்சி என்பது உங்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான். இந்தப் படத்தை என் ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, வியாதியாகக் கொண்டாட விரும்பவில்லை. என் தன்னம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கும் வல்லமை படைத்தது என்று காட்டவே விரும்புகிறேன்'' என்று பாசிட்டிவ் போஸ்ட் போட்டிருக்கிறார். 

உங்கள் தழும்புகளுக்கும் தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துகள் தஹிரா!