Published:Updated:

``தலைமுடியை தானம் கொடுத்தேன்!”- செய்தி சேகரித்தபோது விழிப்பு உணர்வை ஏற்படுத்திய செய்தியாளர்

``தலைமுடியை தானம் கொடுத்தேன்!”- செய்தி சேகரித்தபோது விழிப்பு உணர்வை ஏற்படுத்திய செய்தியாளர்
``தலைமுடியை தானம் கொடுத்தேன்!”- செய்தி சேகரித்தபோது விழிப்பு உணர்வை ஏற்படுத்திய செய்தியாளர்

லக புற்றுநோய் தினம் கடந்த 4-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்களும் கல்லூரி மாணவர்களும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது வடபழனிக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் தன் தலைமுடியைத் தானமாக வழங்கியிருக்கிறார் நியூஸ் 18 செய்தியாளர் தனஸ்ரீ. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று முழுவதும் இணையதளத்தை வைரலாக்கிக் கொண்டிருந்தது. அதுபற்றி அவரிடமே தொலைபேசியில் பேசினோம். 

``முதல்ல கேன்சருக்காக விழிப்பு உணர்வு புரோகிராம் நடக்கிறது பற்றிக் கேள்விப்பட்டு நியூஸ் கவரேஜூக்காகதான் அங்கே போயிருந்தேன். அங்க போனதுக்கு அப்பறம்தான் எனக்கும் முடியை தானமாகக் கொடுக்கலாம்னு தோணுச்சு. ஏன்னா, நான் காலேஜ் படிக்கும்போது இதேபோல ஒரு கேன்சர் டே அன்னிக்கு ஹேர் டொனேட் பண்றதா இருந்தேன். ஆனா, என் வீட்டுல உள்ளவங்க, `பொம்பளைப் பிள்ளைகளுக்கு முடிதான் அழகு. உன் முடியில ஒரு இன்ச் கழிஞ்சாலும் அப்பறம் நடக்கிறதே வேற' ன்னு சொல்லிட்டாங்க. அப்போ பண்ண முடியாம போனதால இப்போ கிடைச்சிருக்கிற வாய்ப்பை நாம மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைச்சேன். நியூஸுக்காக வந்திருக்கிற இடத்துல இப்படிப் பண்றது சரியான்னு முதல்ல யோசிச்சேன். ஆனா, அங்கே இருந்தவங்க கொஞ்சம் மோட்டிவேட் பண்ணினதும் உற்சாகமாகிட்டேன். மொத்தம் ஆறு இன்ச் அளவுதான் முடி எடுத்திருப்பாங்க. ஆனாலும், எனக்கு அது ரொம்ப பெரிய திருப்தியைக் கொடுத்தது.  

அதுமட்டுமில்ல, அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைச்சவங்கள்ல சிலர் நான் ரிப்போட்டருன்னு தெரிஞ்சபிறகு நீங்க சின்னப் பொண்ணா இருந்தாலும் வேலையைத் தாண்டி நீங்க செய்த இந்த விஷயம் எல்லோருக்குமே ஒரு முன்னுதாரணமா இருக்கும்னு சொன்னாங்க. அந்த நிமிஷம் நான் ரொம்பவே பெருமையா உணர்ந்தேன். அதோடு, ஹேர் டொனேட் பண்ணினதுக்கு அப்பறம் இன்னொருத்தர் லைஃப்ல நாம கலர்ஃபுல்லான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கோம்னு நினைச்சு கொஞ்சம் கான்ஃபிடன்ட்டாவே ஃபீல் பண்றேன்” என்றவாறே பூரிக்கிறார் தனஸ்ரீ.

செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் தானும் முடியைத் தானமாக வழங்கி  விழிப்பு உணர்வை விதைத்திருக்கும் தனஸ்ரீக்கு வாழ்த்துகள் குவிகின்றன.