Published:Updated:

புன்னகை தேசம்!

புன்னகை தேசம்!

புன்னகை தேசம்!

புன்னகை தேசம்!

Published:Updated:
புன்னகை தேசம்!
##~##

'வெண்மை நிறப் பற்கள்தான் ஆரோக்கியமானவையா?’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஆனால், பற்களின் நிறத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதன் ஆரோக்கியத்தை கணக்கிட முடியாது. ஏனெனில், நாம் உட்கொள்ளும் உணவு, அருந்தும் குடிநீர் ஆகியவற்றைப் பொருத்தே நம் பற்களின் நிறமும் அமையும். இன்னும் சிலருக்கு மரபு வழியாகவே பற்கள் குறிப்பிட்ட நிறத்தில் இருப்பது உண்டு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல் வரிசை :

இயற்கையாகவே சரியான பல் வரிசை அமையப் பெறாதவர்கள் செயற்கை முறையில், க்ளிப் மாட்டிக்கொண்டு அழகான பல் வரிசை பெறலாம். இதில் இரண்டு வகைகள் உண்டு. 'க்ளிப்’பினை அவ்வப்போது எளிதாகக் கழற்றி மாட்டிக்கொள்வது ஒரு வகை. இரண்டாவது வகையில், பற்களின் மேல் பிரிக்க முடியாதபடி க்ளிப் ஒட்டுவது. மருத்துவரது உதவி இன்றி இந்த க்ளிப்பினைக் கழற்ற முடியாது. இந்த இரண்டாம் வகை க்ளிப் சிகிச்சைதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சீரற்ற பல் வரிசை, முன் பின்னாக துருத்திக்கொண்டு இருக்கும் பற்களை ஒரே வரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கு க்ளிப் மாட்டிக்கொள்வது சிறந்த முறை.

புன்னகை தேசம்!

டூத் பேஸ்ட், டூத் பிரஷ் :

டூத் பேஸ்ட், டூத் பிரஷ் குறித்து நிறைய விளம்பரங்கள் வெளிவருகின்றன. அதனாலேயே, எந்த வகை பேஸ்ட் - பிரஷ் சிறந்தது என்பதில் குழப்பங்கள் வரலாம். ஃப்ளூரைடு சேர்க்கப்பட்ட அனைத்து வகைப் பற்பசைகளுமே பற்களுக்கு உகந்த வகைதான். வயதான நபர்களுக்கு பற்களில், அதிகத் தேய்மானம் ஏற்பட்டிருக்கும். அதனால் பல் கூச்சம் இருக்கும். இவர்களுக்கு 'டிசென்சிடைசிங்’ (Desensitising) பற்பசைகள் ஏற்றவை.

டூத் பிரஷைப் பொருத்தவரையில், சாஃப்ட் அல்லது மீடியம் வகை பிரஷ்களை உபயோகிப்பது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது. பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தால், உணவுத் துகள்கள் செருகிக்கொண்டு உறுத்தல், துர்நாற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இவர்கள் 'இன்டர்டென்டல் டூத் பிரஷ்’(Inter dental tooth brush)  உபயோகித்தால் தீர்வு கிடைக்கும்.

பற்களை சரிவரப் பராமரிக்காதபோது பல் சொத்தை ஏற்படுகிறது. பொதுவாக, பல் சொத்தை என்பது ஆரம்ப நிலையில் இருக்கும்போது பெரிய அளவில் வலியோ, கூச்சமோ ஏற்படாது. அதனாலேயே 'பல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்’ என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுவது இல்லை.  பிற்பாடு சொத்தை அதிகமானால், வலியும் வேதனையும் அதிகரிக்கும். அதனால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், பல் சொத்தை உள்ளிட்ட உபாதைகளை ஆரம்ப நிலையிலேயே எளிதாகத் தவிர்த்துவிட முடியும்.

தொகுப்பு: த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism