ஹெல்த்
தொடர்
Published:Updated:

ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!

ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!

அதிரா - தமிழ்க்கனி சித்த மருத்துவர்ஹெல்த்

`தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் கொழுப்பு சேரும்’, ‘மாரடைப்பு வரும்’ என்றெல்லாம் நம்மிடையே நிறைய  மூடநம்பிக்கைகள் உள்ளன... தவறு. உண்மையில், தேங்காய் எண்ணெயில் பல்வேறு நன்மைகளும் இருக்கின்றன. 

ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!

* கொப்பரைத் தேங்காயை செக்கில் ஆட்டி எடுப்பது, தேங்காயில் பாலெடுத்துக் காய்ச்சி எண்ணெய் எடுப்பது என இரண்டு முறைகளில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம். செக்கில் ஆட்டி எடுக்கும் எண்ணெய்தான் இப்போது அதிகமாகப் பயன்பாட்டிலிருக்கிறது.

ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!* இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் உடலின் வெளிப்புறம் பூசுவதற்கும், சமையலுக்கும் உகந்ததல்ல.

* `சமையலில் தாளிப்பதற்காக மட்டும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்’ என்று சித்த மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எந்த எண்ணெயாக இருந்தாலும் உணவுகளைப் பொரித்துச் சாப்பிடுவது ஆரோக்கியமல்ல. 

ஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே!

* தேங்காய் எண்ணெயிலுள்ள `லாரிக் ஆசிட்’ உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். அதனால் மாரடைப்பு, கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

* ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் (30 மி.லி) தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவு மட்டும் பயன்படுத்தினால் தசைகள் வலுவாகும்.

* காயங்களை குணப்படுத்தும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. எனவே, உடலில் ஏற்படும் சிறிய காயங்கள், சிராய்ப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

* எளிதாக ஊடுருவும் தன்மை உள்ளதால் உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்தால் மயிர்க்கால்கள்வரை எளிதாகச் செல்லும். இதனால் தேங்காய் எண்ணெயிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் எளிதாக முடியின் வேர்வரை செல்லும். முடி உதிர்வு, பொடுகு, முடியின் நுனியில் வெடிப்பு போன்றவை ஏற்படாது.

* தரமான தேங்காய் எண்ணெய் என்றால் குளிர் காலத்தில் உறைய வேண்டும்.