ஹெல்த்
தொடர்
Published:Updated:

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

தேவராஜன் பொது மருத்துவர்ஹெல்த்

ப்படி உடல் எழுப்பும் சத்தங்கள் ஏராளம். பெரும்பாலும் இவற்றைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. ``நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். எனவே, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது’’ என்று சொல்கிற பொது மருத்துவர் தேவராஜன், சத்தங்களுக்கான காரணங்கள் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்தும் விளக்குகிறார்.

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* மார்புப் பகுதியில் விசில் ஒலிப்பது போன்ற சத்தம் கேட்கும். மூச்சுக்குழாயில் தற்காலிகமாகத் தசைச் சுருக்கம் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுவதே இதற்குக் காரணம். அதில் கிரேடு 1 முதல் 4 வரை பல நிலைகள் இருக்கின்றன. கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய இரண்டு நிலைகளில், மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது மட்டுமே சத்தம் கேட்கும். கிரேடு 3-ல் அமைதியான புறச்சூழல் இருந்தால் சத்தம் கேட்கும். கிரேடு 4 நிலையில் நன்றாகச் சத்தம் கேட்கும். சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளால் இது ஏற்படும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். எண்ணெயில் சமைத்த உணவுகள், வறுத்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் வயிற்றின் மேற்பகுதியில் வாய்வு உண்டாகி ஏப்பம் உண்டாகும். சில நேரங்களில் அதிகச் சத்தத்தோடும் தொடர்ச்சியாகவும் ஏப்பம் வரும். எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். 

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்பட்டு வயிற்றுக்குள் ‘கடமுட’ சத்தம் கேட்கும். வாய்வு அடிக்கடி வெளியேறும். இதைத் தவிர்க்க நட்ஸ் வகைகளை எப்போதும் அளவாக உட்கொள்வது நல்லது. 

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* வயதானவர்களில் சிலருக்குக் கால்களை மடக்கி, நீட்டும்போது மூட்டுகளில், ‘க்ளிக் க்ளிக்’ எனச் சத்தம் கேட்கும். எலும்புகள் வலுவிழந்து, மூட்டுகளிலிருக்கும் சைனோவியல் திரவம் (Synovial Fluid) குறைந்து எலும்புகள் உரசுவதால் இப்படிக் கேட்கும். முறையான உடற்பயிற்சிகளின் மூலம் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால் சைனோவியல் திரவத்தை செயற்கையாகச் செலுத்தியும் சரிசெய்யலாம்.

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?* கழுத்து வீக்கம் இருப்பவர்களுக்கும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் தூங்கும்போது மூச்சுக்குழாய் சுருங்கிவிடும். அதனால், நுரையீரலுக்கு போதிய ஆக்ஸிஜன் செல்லாது. சற்று அழுத்தமாக மூச்சுவிடுவார்கள். அதுவே குறட்டைச் சத்தமாக வெளியேவரும். போதையூட்டும் பாக்குகளை மெல்லுபவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். எனவே, பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதற்கென பிரத்யேகமாக `பைபேப்’ (BiPAP) என்ற கருவி இருக்கிறது. தூங்கும்போது அந்தக் கருவியை வாயில் பொருத்திக்கொண்டால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்; குறட்டைச் சத்தம் வராது. தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்து இந்த பாதிப்பைச் சரிசெய்யலாம். 

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* சிலருக்குக் காதில் வித்தியாசமான ஒலிகளில் சத்தம் கேட்கும். இதற்கு ‘டினிட்டஸ்’ (Tinnitus) என்று பெயர். அதிகச் சத்தமான ஒலிகளை காதின் அருகே தொடர்ந்து கேட்பதால் காதுகளின் பின்புறமுள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு இது போன்ற பிரச்னை வரலாம். செல்போனை அதிகச் சத்தமாகப் பயன்படுத்துவது, ஹெட்போனில் அதிக சத்தமாகப் பாடல் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்வது நல்லது. யாரோ பேசுவதுபோலவோ, கூப்பிடுவதுபோலவோ காதில் சத்தம் கேட்டால் அது மனநலம் சார்ந்த பாதிப்பாக இருக்கும். அதற்கு, மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டியது அவசியம்.

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

* தூங்கும்போது சிலர் ‘நற நற’வெனப் பற்களைக் கடிப்பார்கள். மற்ற நேரங்களில்கூட இந்தப் பழக்கம் அவர்களுக்கு இருக்கும். மூளை தொடர்பான பாதிப்புகள் இருந்தால், இந்தப் பிரச்னை வரலாம். ‘எலெக்ட்ரோ என்செபலோகிராம்’ (Electroencephalogram) செய்து இந்த பாதிப்பைக் கண்டறியலாம். தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பு சரியாகும். மனநல பாதிப்புகளாலும் ஒரு சிலருக்கு பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதிலிருந்து விடுபடலாம்.

இரா.செந்தில் குமார்

மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?
மார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன?

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் உறவுமுறைச் சிக்கலில் இருப்பவர்கள் அல்லது இணையரைப் பிரிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.