ஹெல்த்
தொடர்
Published:Updated:

கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!

கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!

மனுலட்சுமி, மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

பெண்களுக்கு, கருத்தரித்தலுக்கும், கருவைத் தவிர்த்தலுக்கும் உதவும் பிபிடி (Basal Body Temperature - BBT) தெர்மாமீட்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.

கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!

``தூங்கும்போது நம் உடலின் வெப்பநிலை, ‘பேஸல் பாடி டெம்ப்பரேச்சர்’ நிலையில், அதாவது இயல்பான வெப்பநிலையில் இருக்கும். வாக்கிங், ரன்னிங் ஆகியவற்றைச் செய்த பிறகு இந்த டெம்ப்பரேச்சர் உயர்ந்து காணப்படும். ஒருவர், தன் உடல் வெப்பநிலையை அறிந்துகொள்ள, பிபிடி தெர்மாமீட்டரைப் பயன்படுத்தலாம். பெண்கள் தங்களின் பேஸல் பாடி டெம்ப்பரேச்சரின் அடிப்படையில், கருமுட்டை வெளியாகும் நாளைக்கூடக் கண்டறியலாம். அதாவது, பெண்களுக்கு கருமுட்டை வெளியாகும் நாளில் (ஓவுலேஷன்) ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக உடல் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்திருக்கும். பேஸல் பாடி டெம்ப்பரேச்சர் தெர்மாமீட்டர், அப்படி இயல்புக்கு அதிகமான வெப்பநிலையைக் காட்டும் நாள்களில், கருத்தரிக்கக் காத்திருக்கும் தம்பதி தாம்பத்ய உறவு மேற்கொள்ளலாம்; கருத்தரிப்பதைத் தவிர்க்க நினைக்கும் தம்பதி இந்த நாள்களில் உறவைத் தவிர்த்துவிடலாம்.

கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!உதாரணமாக, மாதவிடாயின் முதல் நாளிலிருந்து, தூங்கி எழுந்ததும் ஒரு பெண் தன் உடலின் பிபிடி-ஐ பரிசோதித்துவருகிறார் என்று வைத்துக்கொள்வோம். தினமும் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று அளவைக் காட்டும் பிபிடி தெர்மாமீட்டர், குறிப்பிட்ட நாளில்/நாள்களில் 98.8 என்ற அளவைக் காட்டினால், அது அவரின் ஓவுலேஷன் நாளாக இருக்கலாம். பொதுவாக, 28 நாள்கள் மாதவிடாய் சுழற்சிகொண்ட பெண்களுக்கு ஓவுலேஷன் 12-14வது நாள்களுக்குள் நடைபெறும். அந்த நாள்களுக்குள் பேஸல் டெம்ப்பரேச்சர் அதிகரித்துக் காணப்படுவது, ஓவுலேஷன் கணிப்புக்கு உறுதி சேர்க்கும்.

கருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்!

சீரற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை உற்பத்தியில் பிரச்னை உள்ள பெண்களுக்கு கருத்தரிப்பதில் உதவ, மகப்பேறு மருத்துவர் ஒருநாள் விட்டு ஒருநாள் ஸ்கேன் செய்து அவர்களின் கருமுட்டை நிலைகளை, ஓவுலேஷன் நாள்களைக் கண்டறிந்து சொல்வார்.’’

வெ.வித்யா காயத்ரி