ஹெல்த்
தொடர்
Published:Updated:

எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?

எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?

சாமிக்கண்ணு சர்க்கரைநோய் மருத்துவர்ஹெல்த்

``அரிசி, காய்கறிகள், பழங்கள்...  என அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. ஆனால், அது கார்போஹைட்ரேட்டுடன் அதிக கலோரியைக்கொண்டிருக்கும். இவற்றுக்கு மாற்றாக, செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட குறைந்த அளவு கலோரிகொண்ட இனிப்பை ‘சுகர் ஃப்ரீ’ என்கிறோம். சில சுகர் ஃப்ரீ சேர்க்கப்பட்ட உணவுகளில், மற்ற உணவுகளில் இருப்பதுபோலவே கலோரி, கார்போஹைட்ரேட் இருக்கின்றன. எனவே, அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக லேபிளைப் பார்க்க வேண்டும். ஆஸ்பார்ட்டேம் (Aspartame), சாக்ரீன் (Saccharin), சுக்ராலோஸ் (Sucralose), நியோடேம் (Neotame), ஏஸ்சல்ஃபேம் (Acesulfame), அட்வன்டேம் (Advantame) ஆகிய ஆறு செயற்கை இனிப்பான்கள் (Artificial Sweeteners) மட்டுமே அமெரிக்கா, `எஃப்.டி.ஏ’-வின் (The Food and Drug Administration) அனுமதியைப் பெற்றிருக்கின்றன. அதேபோல,  தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் `ஸ்டீவியா’ (Stevia) எனும் இனிப்பானும் சந்தையில் கிடைக்கிறது. 

எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?

சுகர் ஃப்ரீ உணவுகளில் குறைவான கலோரி இருப்பதால், உடல் எடை குறைக்க நினைக்கும் சர்க்கரைநோய் இல்லாதவர்களும் பயன்படுத்தலாம். சர்க்கரைநோய் இல்லாதவர்கள் சர்க்கரைக்கும் சுகர் ஃப்ரீக்கும் மாற்றாகத் தேனைப் பயன்படுத்தலாம். தேன், குறைவான கலோரி உணவு; உடல் எடையை அதிகரிக்காது. அதோடு சிறிதளவு தேனிலேயே இனிப்புச் சுவை கிடைத்துவிடுவதால் திருப்தியான உணர்வும் ஏற்படும்.

எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?
எல்லோருக்குமானதா சுகர் ஃப்ரீ?

சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாக, சுகர் ஃப்ரீ உணவுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, ‘பினைல்கீட்டோனூரியா’  (Phenylketonuria) எனும் மரபணுக் குறைபாடு நோயுள்ளவர்களுக்கு ஆஸ்பார்ட்டேம் (Aspartame) வகை சுகர் ஃப்ரீ உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அதைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்கேற்ற உணவுகள் எவை, எந்தளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் போன்றவற்றை மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையுடன் பின்பற்றுவதே பாதுகாப்பானது.’’

ஜி.லட்சுமணன்