சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, காதலோ... மனிதன் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வுக்கும் மூளை நரம்பில் நடைபெறும் ரசாயன மாற்றங்களே காரணம். அந்த உணர்வுகள் மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்வுகளும் உடல்நலமும் ஒன்றோடொன்று நெருங்கியத் தொடர்புடையவை. உணர்வுகளை நேர்மறையானவை (Positive Emotions), எதிர்மறையானவை (Negative Emotions) என இரண்டாகப் பிரிக்கலாம்.

நேர்மறை உணர்வுகள் மனதையும் உடலையும் இலகுவாக்கி, உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். எதிர்மறை உணர்வுகளோ மனஅழுத்தத்தைக் கொடுத்து, உடல்நலனையும் மனநலனையும் பாதிக்கும். எந்தெந்த உணர்வு, உடல்நலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

சிரிப்பு: ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்ற முதுமொழி சொல்லும் பொருள் உண்மையானதே. சிரிப்பு, ஹாஸ்யம் போன்ற உணர்வுகள் அதிகப்படியான நேர்மறை உணர்வுகளைக் கொடுக்கின்றன. `ஒரு நாளில் நீண்டநேரம் வாய்விட்டுச் சிரிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு அன்றைய தினம் இரவில் நிம்மதியான உறக்கம் வரும்’ என்கின்றன ஆய்வுகள். எந்த உயிரினத்திடமும் வெளிப்படாத பிரத்யேக உணர்வான சிரிப்பு, உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பதற்றம்: ஏதாவது ஒரு விஷயத்துக்காகப் பதற்றப்படும்போது, இதயத்துடிப்பு அதிகரிக்கும். வயிற்றைக் கலக்குவதுபோலத் தோன்றும்; அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தோன்றும்; வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், கண்கள் இருட்டிக்கொண்டு வருவது... எனப் பல்வேறு அறிகுறிகள் வெளிப்படும். எப்போதும் அதிகப் பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு இதயத்துடிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எதிர்மறை உணர்வுகளால் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் ‘கார்டிசால்’ (Cortisol) ஹார்மோன் அதிகம் சுரக்கும்.

சோகம்: நெருங்கிய சொந்தங்கள் இறக்க நேரிட்டால், சிலர் அழ மாட்டார்கள். அவர்களிடம், ‘சோகத்தைத் தேக்கிவைக்காமல் அழுதுவிடுங்கள்’ என்று அறிவுறுத்துவோம். சோகம் என்பது எதிர்மறை உணர்வாக இருந்தாலும்கூட அழுகையின் மூலமோ அல்லது பிறரிடம் பேசுவதன் மூலமோ அதை வெளிப்படுத்திவிட வேண்டும். அப்போது சோகம் மெள்ள மெள்ள வெளியேறி, மனதை இலகுவாக்கிவிடும். இதற்கு மாறாக அந்த உணர்வைத் தேக்கிவைத்தால், உடலுக்குள் சோகம் தேங்கி, மனஅழுத்தத்துக்கான ரசாயன மாற்றங்களை அதிகரிக்கச் செய்துவிடும். மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு `செரட்டோனின்’ (Serotonin), `டோபமைன்’ (Dopamine) போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரப்பது குறைந்துவிடும். செரட்டோனின் குறைந்து மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் பலருக்கு உடல்வலி, கழுத்துவலி, சோர்வு ஆகிய முக்கிய அறிகுறிகள் இருக்கும்.

கோபம்: கோபத்தை மிக அதிகமாக வெளிப்படுத்துவது, கோபமாக இருக்கும்போது ஆக்ரோஷமாகச் செயல்படுவது போன்ற செயல்பாடுகள் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றின் வேகத்தை அதிகரிக்கும். கோபம் வந்தால், அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

அப்படியே வெளிப்படுத்தினாலும் அதன் வேகம், அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ‘அதிகமாகக் கோபப்படுபவர்கள், தினமும் சண்டை போடுபவர்கள், அதிகமாக வாக்குவாதம் செய்பவர்களுக்கு பொதுவாக நோய் குணமாவதற்கான திறன் (Healing Capacity) உடலில் குறைவாக இருக்கும்’ என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகமாகக் கோபப்படுபவர்களுக்கு காயமோ, புண்ணோ ஏற்பட்டால் அது குணமாக வழக்கமான காலத்தைவிடக் கூடுதல் காலம் தேவைப்படும்.

காதல்: காதலை ஒருவர் உணரும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் உடலில் அதிகரிக்கத் தொடங்கும். அப்போது மூளை உள்ளிட்ட பிற உடலுறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். உடலும் மனமும் எப்போதும் விழிப்புஉணர்வுடனும் இருக்கும்.

பயம்: ஏதோ காரணத்துக்காக தீவிர பயத்துக்குள்ளானவர்களுக்கு உடலில் தானாகவே மனஅழுத்தத்துக்கான ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்துவிடும். இந்த ஹார்மோன், கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும். அதனால் அந்தந்த உறுப்புகள் சார்ந்த நோய்கள் ஏற்படவும், ஏற்கெனவே இருக்கும் நோய்கள் தீவிரமாவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு பொதுவாகவே உணர்ச்சிகள் தொடர்பான ‘மூட் டிஸ்ஆர்டர்’ (Mood Disorder), மனஅழுத்தம் போன்றவை காணப்படும். உடலில் சருமம்தான் மிகப் பெரிய உறுப்பு. உணர்வு சார்ந்த சோகம், பதற்றம், மனஅழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் சருமப் பிரச்னைகளை அதிகமாகத் தூண்டும். உதாரணமாக, சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம். மனஅழுத்தம் இருப்பதால் அந்த நோய் இன்னும் தீவிரமாகலாம்.

அழகிய நீரோடை, ரம்மியமான இயற்கைச் சூழல், பிடித்த இசை போன்றவற்றால் தானாகவே மனம் அமைதியாகும். கண், காது ஆகிய உறுப்புகளும் (Sense Organs) நமது உணர்வுகளை அமைதியாக்க உதவுகின்றன. இசை தெரபி, அரோமா தெரபி போன்றவையும் உணர்வுகளை சாந்தப்படுத்த உதவுகின்றன. அனைவரும் தங்களுக்குள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு பயப்பட்டே ஆக வேண்டும். எல்லா விஷயங்களையும் சிரித்துக்கொண்டே கடக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் இயல்பான மனிதன் இல்லை என்றே அர்த்தம்.

ஒரு நாளை எடுத்துக்கொண்டால், அன்றைக்கு முழுக்க மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்போம் என்று கூற முடியாது. காலையில் மகிழ்ச்சியாக இருக்கலாம், மதியம் சோகத்தில் மூழ்கிப்போக நேரலாம், மாலையில் பயத்தில் சிக்கித் தவிக்கலாம். இவை அனைத்தும் சாதாரணமாக நாம் எதிர்கொள்ளும் உணர்வுகளே. நேர்மறை உணர்வுகள் மட்டுமன்றி எதிர்மறை உணர்வுகளும் அவ்வப்போது வந்து போவது மனித உடலில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வே. ஆனால், எதிர்மறை உணர்வுகளின் அளவு அதிகரித்தாலோ, அவை நீடித்தாலோதான் பிரச்னைகள் தொடங்கும். எனவே, எத்தகைய எதிர்மறை உணர்வுகளையும் நீடிக்கவிட வேண்டாம்.

மாடல்: வின்ஸி

ஜெனி ஃப்ரீடா - படங்கள்: மதன்சுந்தர்

மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் வேலையை ஒரு காரணமாகக் காட்டி தூக்கத்தைத் தாமதப்படுத்துவதில்லை.