Published:Updated:

ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வீட்டுப்பாடம் கொடுக்கத் தடை - சீன அரசு அதிரடி!

ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வீட்டுப்பாடம் கொடுக்கத் தடை - சீன அரசு அதிரடி!
ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வீட்டுப்பாடம் கொடுக்கத் தடை - சீன அரசு அதிரடி!

சீனாவில், பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன் ஆப்களைப் பயன்படுத்தி வீட்டுப்பாடம் செய்வதற்குத் தடைவிதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாண நிர்வாகம், இதுதொடர்பான வரைவு விதிகள் தயாரித்து, அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு வெளியிட்டுள்ளது. 

சீனாவில் 31 சதவிகிதம் பேருக்கு கிட்டப்பார்வை பிரச்னை உள்ளது. மொத்த பள்ளி மாணவர்களில் 77 சதவிகிதம் பேருக்கும், கல்லூரி மாணவர்களில் 80 சதவிகிதம் பேருக்கும் கிட்டப்பார்வை பிரச்னை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படுவதற்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளின் பயன்பாடு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.  அதிக கேட்ஜெட்டுகளின் பயன்பாட்டின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கண் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. எனவே, மாணவர்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக பள்ளியில் ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வீட்டுப்பாடம் கொடுப்பது
தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேப்பரில் கையால் வீட்டுப்பாடம் எழுதும் பழக்கத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கு எலெக்ட்ரானிக் பொருள்கள் எடுத்துவருவதுவதற்குத் தடைவிதிக்கப்படும். பள்ளிகளில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களின் அளவும் குறைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நேரத்தில்  இடைவேளை கொடுக்கவும், விளையாட்டு மற்றும் பாடத்திட்டம் சாராத பிற செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடமே கிடையாது என்பன போன்ற விதிகள் வகுக்கப்பட்டன.

புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டால், பள்ளிகளில் கேட்ஜெட்டுகளின் பயன்பாடு 30 சதவிகிதமாகக் குறையும் என்றும், இந்த விதிகள் சீக்கிரமே அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.