Published:Updated:

காமமும் கற்று மற 8 - தாம்பத்ய பாதிப்பை ஏற்படுத்துமா சர்க்கரைநோய்?

காமமும் கற்று மற

கூடற்கலை - 8

காமமும் கற்று மற 8 - தாம்பத்ய பாதிப்பை ஏற்படுத்துமா சர்க்கரைநோய்?

கூடற்கலை - 8

Published:Updated:
காமமும் கற்று மற

பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
பனி மேடை போடும் பால்வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்... பருவங்கள் வாழ்க...’

- கண்ணதாசன்

``எந்தெந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்களால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாது அல்லது துணையைத் திருப்திப்படுத்தும் அளவுக்குச் செயல்பட முடியாது?’’ பாலியல் மருத்துவம் தொடர்பான ஓர் ஆய்வுக்காக, என்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். சில தயக்கங்கள், பல யோசனைகளுக்குப் பிறகு, சில நோய்களைச் சொன்னார்கள். சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் தாங்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றைச் சொன்னார்கள்.

காமமும் கற்று மற 8 - தாம்பத்ய பாதிப்பை ஏற்படுத்துமா சர்க்கரைநோய்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்கள் சொன்ன நோய்களில் அதிகமாக இடம்பெற்றவை எவை தெரியுமா? சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி ஆகியவை. அதிலும் ஓர் இளம் இயக்குநர் சொன்னது முக்கியமானது. ``டாக்டர்… என் நண்பனுக்கு 30 வயது ஆவதற்கு முன்னரே சர்க்கரைநோய் வந்துவிட்டது. அப்போதுதான் திருமணம் செய்திருந்தான். கொஞ்ச நாள்களிலேயே அவனுக்கு மனைவியிடம் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு, எங்களுடன் குடிக்க வந்துவிடுவான். காரணம் கேட்டபோது பதில் சொல்லாதவன், ஒரு கட்டத்தில் போதையில் உண்மையைச் சொன்னான். அவனுக்கு விரைப்புத் தன்மை குறைந்து வருவதால், மனைவியை நெருங்குவதில்லை என்றும், எங்கே தன் குறையைக் கண்டுபிடித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் நெருங்காமல் இருந்திருக்கிறான். இன்னும் அதற்கான சிகிச்சை என்னவென்று தெரியாமல் தடுமாறுகிறான்.’’

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, ``சமீபகாலங்களில் ஆண்களின் விரைப்புத் தன்மை குறைபாட்டுக்கு 90 சதவிகிதம், சர்க்கரைநோயே காரணமாகிறது. ரத்த அழுத்தம், வயது மூப்பு உள்ளிட்டவை வெறும் 10 சதவிதமே காரணமாகின்றன’’ என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. `சர்க்கரைநோய்’ என்பது நோய் அல்ல. ஒரு குறைபாடு. அதில், டைப் 1, டைப் 2 என இரு வகைகள் உண்டு. ‘டைப் 2’ விரைப்புத் தன்மைக் குறைபாட்டை உண்டாக்கும். இதனால், செக்ஸ் ஆர்வம் குறைவதும் உண்மை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரி… இது, எப்படி தாம்பத்ய பாதிப்பை ஏற்படுத்தும்?

செக்ஸில் ஈடுபட ஆணுறுப்பு விரைப்புத் தன்மையுடன் இருக்கவேண்டியது முக்கியம். அதில் குறைபாடு இருந்தால், சரிவரச் செயல்பட முடியாது. குழாயில் தண்ணீர் திறக்காதபோது இலகுவாக இருக்கும் டியூப், நீரைப் பாய்ச்சும்போது விரைப்பாகிவிடும். அதுபோல, ஆணுக்கு செக்ஸ் உணர்ச்சி உண்டாகும்போது, ஆணுறுப்புக்கு ரத்தம் விரைவாகப் பாய்ச்சப்படும். அதனால், அங்கு விரைப்புத் தன்மை உண்டாகும்.சர்க்கரைநோய் காரணமாக உடலிலுள்ள அளவுக்கு அதிகமான குளூக்கோஸ், புரதத்துடன் இணைந்து, வேதி வினை மாற்றம் அடையும். இது, நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெகுவாக பாதித்து, அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கும். எனவே, விரைப்புத் தன்மைக் குறைபாடு உண்டாகி, செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும்.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

இந்தியாவில் நாளுக்குநாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகிவருகிறது. 40-45 வயதைக் கடந்த மொத்த ஆண்களின் எண்ணிக்கையில், 48 சதவிகிதம் பேர் சர்க்கரைநோயால் விரைப்புத் தன்மை குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி ஆண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக `ஆல்பா ஒன்’ எனப்படும் ஆண்களுக்கான பாலியல் மருத்துவ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சராசரியாக, வயது மூப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் 50 வயதைத் தொடும் ஆண்களில் 50 சதவிகிதம் பேருக்கும், 60 ப்ளஸ் ஆண்கள் 75 சதவிகிதத்தினருக்கும் விரைப்புத் தன்மை குறைபாடு உண்டாகும். சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளான ஆண்கள், சராசரி ஆண்களைவிட 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விரைப்புக் குறைபாடு பாதிப்புக்கு ஆளாவதாகக் கண்டறிந்திருக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், `வரும் ஆண்டுகளில் உலக அளவில், சர்க்கரைநோயின் தலைநகரமாகவே இந்தியா மாறினாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை’ என்ற தகவலையும் சொல்கிறார்கள்.

இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய, முதலில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்தல், உடற்பயிற்சி, வாழ்வியல் முறையில் மாற்றம் என மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

- கற்போம்...