Published:Updated:

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

தினமும் ஷாம்பூ வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
தினமும் ஷாம்பூ வேண்டாமே!

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்ஹெல்த்

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்ஹெல்த்

Published:Updated:
தினமும் ஷாம்பூ வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
தினமும் ஷாம்பூ வேண்டாமே!
தினமும் ஷாம்பூ வேண்டாமே!
தினமும் ஷாம்பூ வேண்டாமே!

புளோ டிரை செய்யும்போது டிரையரை கோல்டு மோடில் வைத்து உபயோகிக்கவேண்டியது அவசியம். ஹாட் மோடில் வைத்து பயன்படுத்தினால் கூந்தல் இன்னும் வறண்டு போகும், மெலியும், உடையும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

நீச்சலடிக்கும்போது தலையில் தொப்பி அணிய வேண்டும். நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பே தலையை ஈரப்படுத்திக்கொள்வது சிறந்தது. கூந்தல் வறண்டிருக்கும்போது அதிக அளவிலான குளோரினேட்டடு நீரை கிரகித்துக்கொள்ளும். அதுவே ஈரமாக இருந்தால், அந்த பாதிப்பு பெரிய அளவில் குறையும்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!
தினமும் ஷாம்பூ வேண்டாமே!

தினசரி ஷாம்பூ குளியல், கூந்தலில் வறட்சியை அதிகரிக்கும். ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை. கோடைக்காலத்தில் கலரிங், ஸ்ட்ரெய்ட்டனிங் உள்ளிட்ட கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்கெனவே வறண்டிருக்கும் கூந்தலை, இந்த ரசாயனங்கள் மேலும் வறண்டுபோகச் செய்துவிடும். கூந்தல் தேங்காய் நார் மாதிரி மாறிப்போகும்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

கோடைக்காலத்தில் வெளியே செல்லும் முன் எலெக்ட்ரிக் கர்ளர்ஸ், அயர்ன், ஸ்ட்ரெய்ட்டனர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!
தினமும் ஷாம்பூ வேண்டாமே!

கோடைக்காலத்தில் கூந்தலை டீப் கண்டிஷனிங் செய்யவேண்டியது மிக அவசியம். மசித்த வாழைப்பழம், அவகேடோ பழக்கூழ், ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன், ஒரு முட்டை ஆகியவற்றை நன்றாகக் கலந்து தலையில் மண்டை முதல் முடியின் நுனிவரை தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!

முதல் நாள் இரவே கூந்தலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங்கள். கண்டிஷனிங் பொருள்கள் சேர்த்த ஹேர் ஆயில்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். மறுநாள் காலையில் மாய்ஸ்சரைசிங் ஷாம்பூ உபயோகித்து அலசி, கண்டிஷனர் பயன்படுத்தி மீண்டும் அலசலாம். அல்லது தலைக்குக் குளித்து முடித்ததும் பயன்படுத்தக்கூடிய ‘லீவ் ஆன்’ கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். இது கூந்தலின் மேல் பாதுகாப்பு கவசம்போலச் செயல்படும்.

தினமும் ஷாம்பூ வேண்டாமே!
தினமும் ஷாம்பூ வேண்டாமே!

முதல் நாள் ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் அரைத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், சில துளிகள் வைட்டமின் ஈ ஆயில், சிறிது அவகேடோ கூழ், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் துளசி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். பூந்திக்கொட்டையை ஊறவைத்த நீரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு முட்டையை அடித்துக் கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் வைத்திருந்து, மைல்டு ஷாம்பூவால் அலசவும்.

சாஹா