கிருமிகள், கழிவறைகளில் மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை உடையவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வேலை செய்யும் ஆபீஸ் டெஸ்க்குகளில் வெவ்வேறு வகையான 40 மில்லியன் பாக்டீரியா இருப்பது உங்களுக்குத் தெரியுமா? டாய்லெட் இருக்கைகளில் காணப்படும் கிருமிகளைவிட 400 மடங்கு அதிகமான கிருமிகள் உங்கள் ஆபீஸ் டெஸ்க்கில் இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேலை செய்யும் இடத்தில் கிருமிகள் பரவுவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

* உங்கள் ஆபீஸ் டெஸ்க்கில் எப்போதும் ஒரு ஹேண்ட் சானிடைசரை வைத்திருங்கள். ஆபீஸ் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து ஃபைல், பேப்பர் போன்றவற்றை வாங்குவதற்கு முன்னரும் பின்னரும் மறக்காமல் ஹேண்ட் சானிடைசரை பயன்படுத்துங்கள்.

* உங்கள் ஆபீஸ் டெஸ்க்கிலேயே சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிட்ட பிறகும் கிருமிநாசினி சேர்க்கப்பட்ட ‘Disinfecting Wipe’ எனப்படும் வெள்ளை நிற டிஷ்யூவைக் கொண்டு சாப்பிட்ட இடத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள்.

* நீங்கள் வேலை செய்யும் இடத்தை அசுத்தமாக வைத்திருந்தால், கிருமிகளும், பாக்டீரியாவும் ராஜ்ஜியம் நடத்தத் தொடங்கிவிடும். எனவே, எப்போதும் நீங்கள் வேலை செய்யும் இடத்தைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருங்கள்.

* அலுவலகத்தில் நீங்கள் அடிக்கடி குடிக்கப் பயன்படுத்தும் காபிக் கோப்பையை கொஞ்சம் மெனக்கெட்டு, பாத்திரம் கழுவப் பயன்படும் லிக்விட் அல்லது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால், கிருமிகள் காபிக் கோப்பையின் வழியாக உங்கள் உடலுக்குள் புகுந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடும்.

கவிதா