ரம்ஜான் நோன்பை மேற்கொள்ளும்போது உடல் அதை ஏற்றுக்கொள்ளச் சற்று சிரமப்படும். எனவே, ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு முன்னரே சில முன் தயாரிப்புகளை மேற்கொண்டால், இடையூறுகள் எதுவும் இல்லாமல் இயல்பாக நோன்பைக் கடைப்பிடிக்கலாம். அதற்கான சில ஆலோசனைகள்...

சீக்கிரம் எழுவதே சிறந்தது!

ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள். அப்போதுதான் ரம்ஜான் மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவை (சஹர்) சீக்கிரமாக எழுந்து சாப்பிட முடியும். இந்த சஹர் உணவுதான் அன்றைய தினம் மாலைவரை உடல் நல்ல முறையில் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். எனவே, ஒருபோதும் சஹர் உணவைச் சாப்பிடாமல்விடக் கூடாது. அதற்கு அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பட்டினியைப் பழகுங்கள்!

நோன்பு இருக்கும்போது பகல் முழுவதும் பட்டினியாக இருக்க வேண்டும் என்பதால், அதற்கான பயிற்சியையும் முன்கூட்டியே தொடங்கலாம். ரம்ஜான் நோன்பு ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், வாரத்துக்கு ஒருநாள் முழுவதும் பட்டினி இருக்கலாம். அப்படிச் சாப்பிடாமல் இருக்கும்போது நமது உடல் எப்படி வினையாற்றுகிறது... அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன... அதை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலா

புகை நோன்புக்குப் பகை!

புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் நோன்பு தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே கொஞ்சம் கொஞ்சமாகப் புகைக்கும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். திடீரென்று நோன்பு நேரத்தில் புகைப்பதை நிறுத்தினால் அதை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். சிலருக்கு எரிச்சல், கோபம், பொறுமையின்மை, வேலைகளில் கவனச்சிதறல், நிதானமின்மை உண்டாகும். எனவே, ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கு முன்னரே சிகரெட் புகைக்கும் அளவை பாதியாகக் குறைத்துவிட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் புகைக்கும் அளவைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

நோன்பு காலத்தில் போதுமான தூக்கம் அவசியம். குறிப்பாக சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். எனவே, நோன்பு காலம் தொடங்குவதற்கு முன்னரே சீக்கிரமாகத் தூங்கி, சீக்கிரமாக எழுந்து பழக வேண்டும். சூழ்நிலை காரணமாக உங்களால் சீக்கிரம் தூங்க முடியவில்லையென்றால், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடலாம். ஆனாலும், தூக்கத்தை முறைப்படுத்துவது நோன்பு காலத்தில் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மருத்துவப் பரிசோதனை அவசியம்!

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதோடு, நோன்பு காலத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனைகளையும் மருத்துவரிடம் பெற்றுவிடுவது நல்லது.

சு.கவிதா