Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

Published:Updated:
அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

ஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவக் குணத்தில் இஞ்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் `சுகந்த அஸ்திரம்’ அரத்தை. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி  உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.

அரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் சீன அரத்தை ஆகியன உள்ளன. சிற்றரத்தையைவிட, பேரரத்தையின் வீரியம் சற்று குறைவே. உணவுக்குத் தேவைப்படும் நெடி மற்றும் மணத்துக்கேற்ப சமையலில் அரத்தையின் பிரிவுகளை சமயோசிதமாகப் பயன்படுத்துவது அவசியம். சமையலில் இஞ்சியைப் போலவும், இஞ்சிக்கு மாற்றாகவும் அரத்தை ரகங்கள் நம்மிடையே பயன்பாட்டில் இருந்தன. தற்காலத்தில், சமையலில் பயன்படுவதைவிட மருந்தாகவே அதிக புழக்கத்தில் இருக்கின்றன. மருத்துவக் கூறுகள் நிறைந்த அஞ்சறைப் பெட்டிப் பொருளை, மீண்டும் சமையலுக்குள் அழைத்தால் பலன்கள் நமக்குத்தானே!

மஞ்சளுக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் தாய்லாந்து மக்கள் சிற்றரத்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தாய்லாந்து நாட்டின் சிவப்பு மற்றும் பச்சை மசாலா பசைகள், புகழ்பெற்ற `தேங்காய் சிக்கன் சூப்'பில் (Tom-kha-gai) சிற்றரத்தை தவிர்க்கமுடியாத உறுப்பினர். இந்தோனேசியாவின் பண்டிகைக் காலத்தில், பிரசித்திபெற்ற `ரெண்டங்’ (Rendang) எனப்படும் குழம்பு வகையை வாசனையின் உச்சத்தில் நிறுத்துவது சிற்றரத்தைதான்.

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

17-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரஷ்ய கேக் ரகங்கள் தேன், உணவு வகைகள் என பலவற்றுக்கும் தனித்துவம் அளித்திருக்கிறது சிற்றரத்தை. அக்காலத்தில் சிற்றரத்தையை ‘ரஷ்ய வேர்’ என்று அழைக்கும் அளவுக்கு அந்நாட்டுச் சமையலில் பின்னிப்பிணைந்திருந்தது. ஆனாலும், சீனாதான் சிற்றரத்தையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாக சிற்றரத்தையின் சமையல் பயணம் தொடர்கிறது. நொதிக்கவைத்த பானங்களில் சிற்றரத்தையைச் சேர்த்து, பானத்தின் மதிப்பைக் கூட்டும் யுக்தி சில நாடுகளில் பாரம்பர்யமாகப் பின்பற்றப்படுகிறது.

கார்ப்புச் சுவையுடன் எச்சில் ஊறவைக்கும் சிற்றரத்தை, செரிமானத்தைப் பாதிக்கும் காரணிகளுக்கு முக்கிய எதிரி. மூட்டுவாத நோய்களில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் உள்காரணிகளைத் தடுக்கும் வன்மை, சிற்றரத்தையின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் சாரத்தைக் கொடுத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், எலும்புகளின் உறுதியான கட்டமைப்புக்குத் தேவைப்படும் வேதிக்கூறுகளைச் சுரக்கச்செய்வது தெரிய வந்துள்ளது. வயிற்றுப் புண்களுக்குக் காரணமான `ஹெலிகோபேக்டர் பைலோரி’யின் செயல்பாடுகளை அழிக்கும் திறமையும் சிற்றரத்தைக்கு உண்டு.

புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசயக் கூறுகளை சிற்றரத்தை கொண்டிருப்பதாக `நேச்சுரல் மெடிசின்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. இதிலுள்ள `அசிடாக்ஸிகவிக்கால் அசிட்டேட்’ என்னும் பொருள், புற்றுநோய் மரபணுக்களைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. `இரட்டைக் குழல்’ துப்பாக்கியாகச் செயல்பட்டு புற்று செல்களை அழிப்பதுடன், ஆரோக்கியமான செல்களின் வீரியத்தையும் அதிகரித்து, புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தனித்துவம் சிற்றரத்தைக்கு இருப்பதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவு சுட்டிக்காட்டுகிறது.

காரக்குழம்பு தயாரிக்கிறீர்களா? சிற்றரத்தையைச் சேர்த்து மருத்துவக்குணமிக்க உணவாகும் மருந்தை உருவாக்குங்கள். நலிந்த உடலுக்கு ஊட்டமளிக்க, கஞ்சி ரகங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள். தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கி, அதைத் தேனில் குழைத்து, அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால், கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

சிற்றரத்தையை விளக்கில் சுட்டு வெளிவரும் புகையை சுவாசிக்க, ஜலதோஷம் மறையும். இந்த மூலிகையைப் பொடியாக்கி தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறலாம். ஒற்றைத் தலைவலி அல்லது தலைபாரமாக உணரும்போது, சிற்றரத்தையை மிதமான வெந்நீரில் குழைத்து நெற்றிப் பகுதியில் பற்று போடலாம்.

சிற்றரத்தையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, நீரில் நீண்டநேரம் ஊறவைத்து, ஊறல் நீர் தயாரிக்கலாம். அதைக் கொதிக்கவைத்து ரசம், குழம்பில் சேர்த்தால், உணவுகளின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்.

கோழையை அகற்றி மற்றும் பசியைத் தூண்டும் செய்கையுடைய சிற்றரத்தை பற்றிய அகத்தியர் குணவாகடப் பாடல், ‘தொண்டையிற் கட்டுங் கபத்தைத் தூரத் துரத்திவிடும்…’ என நெஞ்சுக் கோழை, சளி போன்ற கப நோய்களை அரத்தை விரட்டும் என்பதைப் பதிவிடுகிறது. இதன் பொடியைச் சிறிதளவு எடுத்து, மிளகு ரசத்தில் சேர்த்து சுவைத்துப் பாருங்கள். ரசத்தின் மணம் மற்றும் காரம் உடலைச் சுறுசுறுப்பாக்கும். பயணங்களின்போது உண்டாகும் வாந்தி, குமட்டலைத் தடுக்க சிற்றரத்தையை நுகர்ந்து கொள்ளலாம்.

சிற்றரத்தையுடன் மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, குளிர்காலங்களின் மாலை வேளையில் பானமாகப் பருகலாம். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்து, நோய்கள் உடலுக்குள் எட்டிப்பார்க்காமல் பார்த்துக்கொள்ளும். சுக்கு காபி தயாரிப்பதைப் போலவே ஏலக்காயுடன் இதைச் சேர்த்து  தட்டிப் போட்டு, ‘சிற்றரத்தைப் பால்’ தயாரிக்கலாம்.

கிழங்காகவோ, உலரவைத்து அரைத்த பொடியாகவோ, ஊறுகாயாகவோ சிற்றரத்தைச் சேர்க்கப்படுகிறது. இஞ்சியைவிட நார்த்தன்மை நிறைந்ததாகவும் சற்று திடமானதாகவும் இருக்கும். கிழங்குகளில் தோல் சுருக்கம் இல்லாமல் மென்மையாக இருக்கிறதா, உள்சதை திடமாக இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். இளம் கிழங்குகளைப் பார்ப்பதற்கு மஞ்சள் கலந்த காபி நிறத் தோலில் சிவப்பு வரிகள் கூடியதாக, நல்ல மணம் கொண்டிருக்கும்.

தோட்டங்களில் வளர்க்கப்படும் இளம் சிற்றரத்தைக் கிழங்கை இரண்டு வாரங்கள்வரை வைத்து, சமையலில் பயன்படுத்தலாம். காய்ந்த சிற்றரத்தையை நீரில் அரை மணிநேரம் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு அரத்தை கடினத் தன்மையுடன் இருக்கும். இதன் உலர்ந்த பொடிக்கு நெடி அதிகம் என்பதால், இஞ்சியைப் பயன்படுத்தும் அளவில் பாதி அளவே பயன்படுத்த வேண்டும் என்பது சமையல் நுணுக்கம்.

சிற்றரத்தை… பூமிக்குள் மறைந்திருக்கும் பெரும் மருத்துவப் புதையல்!

-டாக்டர் வி.விக்ரம்குமார்

தாய்லாந்து கறி பேஸ்ட்: ஐந்து மிளகாய், ஐந்து பூண்டுப் பற்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லிப் பொடி, சிற்றரத்தை சிறு துண்டு, சிறிது எலுமிச்சைப்புல், அரை கப் துளசி இலைகள், கால் கப் கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை நன்றாக அரைத்து, இறைச்சிகளின் மீதோ காய்களின் மீதோ மசாலா போன்று தடவி பயன்படுத்தலாம்.

சிற்றரத்தை - சிக்கன் சூப்: ஒரு கப் தேங்காய்ப்பாலுடன் சீவலாக நறுக்கிய சிற்றரத்தை, சிறிது எலுமிச்சைப் புல் மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து அடுப்பை சிறு தீயில் எரியவிட வேண்டும். அதில் நாட்டுக்கோழித் துண்டுகள், இரண்டு டீஸ்பூன் நறுக்கிய சிவப்பு மிளகாய், அரை டீஸ்பூன் பேரரத்தைப் பொடி சேர்க்க வேண்டும். அத்துடன் கால் கப் தக்காளிச் சாறு, சுவைக்குச் சர்க்கரை சேர்த்து நாட்டுக்கோழி வேகும்வரை மெல்லிய தீயில் கொதிக்கவிட வேண்டும். கடைசியில் அரை கப் எலுமிச்சைச்சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அதன்மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால், மணம் மிக்க கபம் அறுக்கும் சூப் ரகமாகப் பரிமாறலாம். குறிப்பாக, குளிர்காலங்களில் அனைவரது இல்லங்களிலும் தயாராக வேண்டிய அத்தியாவசிய பானம் இது.

சிற்றரத்தைக் குடிநீர்: சிற்றரத்தை அல்லது பேரரத்தை, மிளகு, அதிமதுரம், அக்கரகாரம், வெற்றிலை ஆகியவற்றை அரைத்து நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். சுவைக்குத் தேன் கூட்டி மழைக்காலத்துக்கான பானமாகப் பருகலாம். இது, நெஞ்சில் கட்டிய கோழை, இருமல், தலைப்பாரம் ஆகியவற்றைப் போக்கும் அற்புதமான மருந்து.

இருமல் பொடி: சிற்றரத்தையைப் பொடியாக்கி, அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அஞ்சறைப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு சளி, இருமல் வரும்போது, இந்தப் பொடியை தேன் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து கொடுத்தால், உடனடியாக மாற்றங்கள் நிகழும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism