Published:Updated:

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

Published:Updated:
சம்மர் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சம்மர் டிப்ஸ்!

வெயிலில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, உடனே குளிப்பதை வழக்கப்படுத்த வேண்டும். வியர்வை மற்றும் மாசினால் படியும் அழுக்குகள் சருமத்தில் தொற்றுகளை ஏற்படுத்தலாம். வெயிலில் விளையாடச் செல்கிற குழந்தைகளுக்கு வைட்டமின்-சி சத்துள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொடுக்கலாம். உணவில் பறங்கிக்காய், நெல்லிக் காய், கேரட், தக்காளி, புரோக்கோலி போன்றவை அடிக்கடி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெயிலினால் உண்டாகும் பாதிப்புகளை இந்த உணவுகள் விரட்டும்.

சம்மர் டிப்ஸ்!

வெதுவெதுப்பான நீரில், சிறிதளவு எலுமிச்சைச்சாறு, உப்பு கலந்துகொள்ளவும். இந்தத் தண்ணீரில், பாதங்களை 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இது, வெயிலால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்மர் டிப்ஸ்!

தினமும் குளியலை முடித்தவுடன், காய்ச்சிய வெதுவெதுப்பான பால் 2 டீஸ்பூனுடன் பொடித்த கஸ்தூரி மஞ்சள்தூள் 2 டீஸ்பூன் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தேய்த்துக் குளிக்கவும். வெயிலினால் கறுத்து கன்றிப்போன சருமத்தை இது மீட்கும். தினசரி உபயோகிக்க, சரும நிறம் வெளுக்கும்.

சம்மர் டிப்ஸ்!

வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமை நீங்க, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை தலா ஒன்றை வெந்நீரில் போட்டு, நாள் முழுக்க ஊறவைத்து அரைத்து, இந்தக் கலவையோடு பப்பாளிப் பழத்தைச் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism