மனிதகுலத்தைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்குபவை பால்வினைத் தொற்றுநோய்கள். `பால்வினைநோய்’ என்றால், நமக்கு ஹெச்.ஐ.வி மட்டுமே நினைவுக்கு வரும். அதையும் தாண்டி நிறைய பால்வினை நோய்கள் இருக்கின்றன. சில நோய்கள் தாமே குணமாகிவிடும். சில நோய்கள் உயிரைப் பறித்துவிடும். வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்தத் தொற்றுநோய்கள் குறித்து எல்லோரும் அறிந்துவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பால்வினை நோய்கள் குறித்து பொதுவெளியில் பேச, விவாதிக்க எவரும் விரும்புவதில்லை. நோய்கள் பாதித்தாலும், எவரும் அவ்வளவு எளிதில் வெளியில் சொல்வதில்லை. மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதுமில்லை. நோய் முற்றி எதிர்பாராத பாதிப்புகள் ஏற்பட்ட பிறகுதான் அது குறித்து பேசவே ஆரம்பிக்கிறார்கள். நம் சமூகத்தில் சில மரபுகளை நம் முன்னோர் வரையறுத்துவைத்திருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது. இது காரண காரியமில்லாமல் நிர்ணயிக்கப்படவில்லை. ஓர் ஆணும் பெண்ணும் நம்பிக்கைகொண்டு, சுக துக்கங்களில் பங்கேற்று, ஒருவரையொருவர் நீக்கமறப் புரிந்துகொண்டு, முழு ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு பாலியல் உறவில் ஈடுபட்டு சந்ததிகளை உருவாக்குவதென்பதுதான் நம் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடு. பல காரணங்களால் இந்தக் கோட்பாடு நழுவும்போது பிரச்னை உருவாகிறது.

பாலியல்நோய் என்பது இன்றோ, நேற்றோ மனிதர்களுக்கு வந்தது அல்ல. ஆதிகாலம்தொட்டே மனிதகுல அழிவுக்குப் பாலியல் நோய் ஒரு காரணியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. பாலியல்நோய்களைப் பொறுத்தவரை, ரத்தம் மூலமாகப் பரவலாம். பாலியல் உறவு, பாலியல் நடவடிக்கைகள் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவலாம். எச்சில், வியர்வை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுறவின்போது சுரக்கும் நீர்மங்கள் மூலமாகவும் பரவக்கூடும். ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி (Hepatitis B), சிபிலிஸ் (Syphilis)... இவையெல்லாம் ரத்தத்தால் பரவுபவை. பாலியல் உறவு மூலமாகவும் இவை பரவக்கூடும். ஹெபடைட்டிஸ் சி-யும்கூட பாலியல் தொடர்புகள் மூலமாகப் பரவலாம் என்று சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனாலும், அவை பெரிய அளவில் மெய்ப்பிக்கப்படவில்லை.

இரண்டாவது வகை, பாலியல் தொடர்புகள் மூலமாக மட்டும் பரவும் நோய்கள். ஹெர்பிஸ் (Herpes) இந்த வகை நோய். ஷாங்க்ராய்டு (Chancroid),எல்.ஜி.வி (Lymphogranuloma Venereum -LGV), கொனோரியா (Gonorrhea), கிளமிடியா (Chlamydia) போன்றவையும் பால்வினை நோய்கள்தாம். கொனோரியாவைப் பொறுத்தவரை, பிறப்புறுப்பில் சீழ் வரும். கிளமிடியா வந்தால், பிறப்புறுப்பில் சிறிது சிறிதாக நீர்க்கசியும். இரண்டுமே சிறுநீர்க்குழாயில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை தவிர, ஒருவிதமான சொறிநோயும் பாலியல் தொடர்புகளால் வரலாம். தலையில் பேன் இருப்பதைப்போல பிறப்புறுப்புப் பகுதியில் ஒருவகைப் பேன்கள் இருக்கும். அதற்கும் பால்வினைத் தொடர்புகளே காரணம்.

99 சதவிகிதம் பால்வினைநோய்கள், ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண் பால்வினைத் தொடர்புகளால்தாம் ஏற்படுகின்றன. பாலியல் உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே இந்த நோய்கள் பரவும் என்றில்லை. தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல் மூலமாகக்கூடப் பரவலாம். ஹெர்பிஸ் நோய் இருப்பவர்கள், பாதித்த பகுதியைத் தொட்ட கையால் உடலின் வேறு பகுதியைத் தொட்டால், அந்த இடத்தில் தாக்கம் உருவாகிவிடும். வாய்வழி உறவுகொண்டால், உதட்டில் பாதிப்பு ஏற்படலாம். கொனோரியாநோய் வந்தால் உடனே தெரிந்துவிடும். காரணம், பிறப்புறுப்பில் சீழ் வரத் தொடங்கும். இது மூன்று இடங்களில் பாதிப்பை உருவாக்கலாம். பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை. ஹெர்பிஸ் நோயையும்கூட வலியைவைத்துக் கண்டுபிடித்துவிட முடியும். இது, அதிவேகமாகப் பரவும். சிபிலிஸ் போன்ற நோய்களை அவ்வளவு எளிதில் உணர முடியாது.

தொற்றால் பரவும் பாலியல்நோய்கள் இவ்வளவுதான். இந்த நோய்கள் எப்படிப் பரவுகின்றன, அறிகுறிகள் என்னென்ன, அவற்றின் தன்மைகள் என்னென்ன, பாதிப்புகள் என்னென்ன... அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகப் பார்ப்போம்!

- களைவோம்...