பிரீமியம் ஸ்டோரி
தேவை திருக்குரல்!
##~##

பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் நீண்ட நேரம் பேசக்கூடிய வேலை மல்லிகாவுக்கு. கடந்த மாதம் திடீரென வேலையே பறிபோகும் நிலையில், பதறியபடி சிகிச்சைக்காக என்னிடம் வந்தார். ''வாயைத் திறந்தாலே தொண்டையில் ஏதோ அடைச்ச மாதிரி இருக்கு. சரியாப் பேச முடியலை... இதனால் எதிர் முனையில் பேசறவங்களுக்கு கோபமும் எரிச்சலும் வருது. சில சமயம் என் வாய் மட்டும்தான் அசையும். பேச்சே வராது. இதனால என் வேலையே போயிடுமோன்னு பயமா இருக்கு. ரொம்ப மன உளைச்சல்ல இருக்கேன் டாக்டர்!'' என்றார் வருத்தமான குரலில். 

குரல் உருவாவதற்கு அவசியமான 'குரல்வளை’யில் இரு கயிறுகள்போலக் காணப்படுவதுதான் குரல்

தேவை திருக்குரல்!

குழாய். இந்தக் குழாயில் ஏற்பட்டுள்ள கட்டியைத்தான் குரல்வளைக் கட்டிகள் என்கிறோம். குரல் வராமல் போவதற்கு 'குரல்வளைக் கட்டிகள்’ பிரச்னைதான் பிரதான காரணம். நீண்ட நேரம் கத்துதல், உரக்கப் பேசுதல், குரலை சரியாகப் பயன்படுத்தாமை போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படும்.

பாடகர்கள், ஆசிரியர்கள், பி.பி.ஓ. ஊழியர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்.

குரலில் கரகரப்பு, குரல் மாற்றம், மூச்சிரைப்பு, மெலிதான குரல், விட்டுவிட்டு குரல் ஒலித்தல், குறைந்த அளவு குரல் ஒலி, பேசும்போது இடையில் குரல் வராமல் போதல், குரல்வளையில் வலி, தொண்டையை அடிக்கடி செருமுவது போன்றவை குரல்வளைக் கட்டிகளின் அறிகுறிகள்.

இந்தக் கட்டிகள் பெரிதானால், அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவர் புகைபிடிப்பவராக இருந்தால், புகைத்தலை நிறுத்திவிட வேண்டும். அலர்ஜி ஏதேனும் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. முதலாவது, குரல் பாதுகாப்புக்கான நடவடிக்கை. குரல்வளைக் கட்டிகளின் ஆரம்ப நிலையை அறிந்து, குரல் பயிற்சி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிகிச்சையை பேச்சுப்பயிற்சி மருத்துவர் (Speech therapist ) அளிப்பார். இந்தப் பயிற்சியினால் குரல்வளைக் கட்டிகள் மென்மைப்படுத்தப்பட்டு, குரல் எளிதாகச் சீரடையும்.

இரண்டாவது வழி - அறுவைச் சிகிச்சை. நீண்ட நாட்களாக குரல்வளைக் கட்டிகளில் பாதிப்பு இருந்து அவை தொந்தரவாகிவிட்டால், அதை அறுவைச் சிகிச்சை செய்துதான் சரி செய்ய முடியும். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் முற்றிலும் பேசாமல் குரலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

நம் குரல்தான் நமக்கான அடையாளம். கத்திப் பேசாமல், அளவாய், அழகாய், அமைதியாய்ப் பேசுவதன் மூலமே குரல் வளத்தைப் பேண முடியும். குரல் நலனின் அவசியத்துக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

சந்திப்பு: பா.பிரவீன்குமார்

 குரல்... கூக்குரல்!

தேவை திருக்குரல்!

தொண்டை எரிச்சல், தொற்று, நீண்ட நாள் சளி, மூக்கு அடைப்புப் பிரச்னை இருந்தால் உடனடியாக ஈ.என்.டி. நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

தேவை திருக்குரல்!

சத்தமாகப் பேசுதல், நீண்ட நேரம் தொடர்ந்து பேசுதல், குரல் மாற்றிப் பேசுதல் என்று உங்கள் குரல் வளத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். நீண்ட நேரம் பேச வேண்டும் என்றால், 45 நிமிடங்களுக்கு மேல் சற்று நேரம் நிறுத்தி, குரலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு பின்னர் தொடருங்கள்.

தேவை திருக்குரல்!

ஒரே நேரத்தில் சூடான, குளிர்ச்சியான உணவை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளாதீர்கள்.

தேவை திருக்குரல்!

அதிகக் காரம் - மசாலா - புளிப்புப் பொருட்களைச் சாப்பிடாதீர்கள்.

தேவை திருக்குரல்!

புகை - மதுப் பழக்கத்தை நிறுத்துங்கள். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.

தேவை திருக்குரல்!

தொண்டை வறண்டுபோகும் அளவுக்குப் பேசாதீர்கள். அவ்வப்போது தண்ணீர் குடித்து தொண்டையை ஈரமாக்கிக்கொள்ளுங்கள்.

தேவை திருக்குரல்!

நெஞ்சு எரிச்சல் பிரச்னை காரணமாக சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் மேலே வரும். அப்படி வரும் அமிலம் குரல்வளையைப் பாதிக்கச் செய்துவிடும். அத்தகைய பாதிப்பு இருந்தால், வயிறு - குடல் நோய்ச் சிகிச்சை நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

தேவை திருக்குரல்!

சில மருந்துகள் தொண்டைப் புண்ணை ஏற்படுத்தலாம். அவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தவிர்க்கப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு