Published:Updated:

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

போலியோ இல்லாத இந்தியா!

துளித் துளியாய்...

போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ இந்தியா கடந்திருக்கிறது. இந்தச் சாதனையை ''உலக அளவில் போலியோ நோயை ஒழிப்பதற்கான மிகப் பெரிய மைல் கல்'' என்று பாராட்டி இருக்கிறார் பில்கேட்ஸ். இந்தியாவில் ஜனவரி 13, 2011-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இந்த வருடம் ஜனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்த பெருமுயற்சியால் நிகழ்த்தப்பட்ட  சாதனை இது.

அதேநேரம், ''போலியோவை ஒழித்துவிட்டோம் என்று நமது அரசுகள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. போலியோ என்பது சுழற்சி முறையில் தோன்றக் கூடியது. இந்த வருடம் போலியோ ஒழிந்தால், அடுத்த நான்கு வருடங்களுக்கு அந்தப் பாதிப்பு தோன்றாமல் இருக்கலாம். அதற்கு அடுத்த ஆண்டு போலியோ தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், போலியோ தடுப்பு மருந்துகளும் அதற்கான பிரசாரமும் தொடர வேண்டும்!'' என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள்.

சாதனைப் பிரசாரத்தோடு சேர்த்து விழிப்பு உணர்வுப் பிரசாரத்தையும் செய்யலாமே!

துளித் துளியாய்...

பத்மஸ்ரீ மருத்துவர்கள்!

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவர் வி.மோகன் மற்றும் முதுமை சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரான வி.மோகன், டாக்டர் பி.சி.ராய் விருது உட்பட பல்வேறு விருதுகளை ஏற்கெனவே பெற்றவர். நீரிழிவு சிகிச்சை தொடர்பாக 700-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வி.எஸ்.நடராஜன், முதியோர் மருத்துவத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். முதியோருக்காக 1978-ம் ஆண்டு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தனியாகப் புற நோயாளிகள் பிரிவு, 10 படுக்கைகள்கொண்ட தனி வார்டு ஆகியவற்றைத் தொடங்கிய பெருமை இவரையே சேரும்.

மருத்துவர்களுக்கு மரியாதை!

துளித் துளியாய்...

வந்தாச்சு காம்போ லாஸிக் சூட்!

கண் பார்வைக் குறைபாடு உடையவர்கள் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலையை 'லேஸிக்’ எனும் லேஸர் ட்ரீட்மென்ட் மாற்றியது. கடந்த 1996-ம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகமான இந்தத் தொழில்நுட்பம், அதே ஆண்டில் நமது நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பயனாக நிறையப் பேர் இந்த லேஸர் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு கண்ணாடிகளைத் துறந்தார்கள். இந்த லேஸிக் கண் சிகிச்சை இப்போது அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறது. ஆம்! இளவயதுடையோர் மட்டும் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளலாம் என்றிருந்த சிகிச்சை, தற்போது காம்போ லேஸிக் சிகிச்சையாக வளர்ந்திருக்கிறது. 19 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் இந்தச் சிகிச்சை செய்துகொண்டு பயன் பெறலாம். கட்டணம்

துளித் துளியாய்...

20,000-த்தில் இருந்து,

துளித் துளியாய்...

1,25,000 வரை என்பதுதான் ஒரு சின்ன உறுத்தல்!  

இனி கண்ணாடி தேவை இல்லை எந்த வயதிலும்..!

வருத்தமான முதலிடம்!

துளித் துளியாய்...

உலக அளவில் இந்தியா முதல் இடத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால், வருத்தப்பட வேண்டிய முதல் இடம் இது. 2011-ம் ஆண்டில் 1,30,000 விபத்துகள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. சென்ற வருடத்தைவிட, இது 30 ஆயிரம் அதிகம். இதுகுறித்து விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை அப்போலோ மருத்துவமனை நடத்தியது. ஓட்டுநர்கள் தான் இதில் சிறப்பு அழைப்பாளர்கள். வாகனத்தைப் பழுதில்லாமல் வைத்திருப்பது, வாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகத்தைத் தவிர்ப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது, உடல்நலக் குறைவோடு வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, அதிவேகமாக வண்டி ஓட்டாமல் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பவை முக்கிய ஆலோசனைகள்!

அட்வைஸை ஃபாலோ பண்ணுங்க!