Published:Updated:

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

பிரீமியம் ஸ்டோரி
பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?
##~##

'கலைஞர் காப்பீடுத் திட்டத்தை’ ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகப் புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. 

இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு வருடம்

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

ஒரு லட்சம் வீதம், நான்கு வருடங்களுக்கு

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

நான்கு லட்சம் வழங்கப்பட இருக்கிறது. தவிர, சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்துக்கு

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

1,50,000 வரை காப்பீடு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் மருத்துவச் சிகிச்சைகளுக்கும் மற்றும் 23 நோய் அறிதல் பரிசோதனைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அரசு இதை ஒரு சேவையாகவோ, கடமையாகவோ நினைத்துச் செய்தாலும், காப்பீடு நிறுவனங்கள் இது லாபம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகத்தான் பார்க்கின்றன. ஒரே ஆறுதல், முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் காப்பீடு நிறுவனம் இருந்தது. தற்போது பொதுத் துறைக் காப்பீடு நிறுவனம் இருக்கிறது.

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

''இந்தக் காப்பீடுத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும்

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

750 கோடி வீதம், நான்கு ஆண்டுகளுக்கு காப்பீடு நிறுவனத்துக்கு சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. அரசு செலுத்தும் இந்தத் தொகையைக் காப்பீடுத் திட்டத்தில் செலவழிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தப் பயன்படுத்த முடியும். ஆனால், அரசு ஏன் அதில் கவனம்

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

செலுத்தவில்லை?''  என்று  கேள்வி எழுப்புகிறார் 'மக்கள் நலவாழ்வு இயக்க’த்தின் மாநில இணை அமைப்பாளரான அமீர்கான்.

'கலைஞர் காப்பீடுத் திட்டம்’ - 'விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம்’ - ஒற்றுமை, வேற்றுமை என்ன? என்ற கேள்விக்கு பொருளாதாரத் துறை முன்னாள் பேராசிரியரான சண்முக வேலாயுதம் பதில் அளித்தார். இவர், கலைஞர் காப்பீடுத் திட்டம்பற்றி ஆய்வு மேற்கொண்டவர்.

''முந்தைய காப்பீடுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்ட காப்பீடுத் தொகை

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

ஒரு லட்சம் மட்டும்தான். புதிய காப்பீடுத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு வருடம் ஒரு லட்சம் வீதம் நான்கு வருடங்களுக்கு

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

நான்கு லட்சம் வழங்கப்படுகிறது.

அதேபோல, முந்தைய திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த முழுக் காப்பீடுத் தொகையையும் ஒருவர் பயன்படுத்தி விட்டால், அதற்குப் பிறகு அவரோ அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களோ திட்டம் நடைமுறையில் உள்ள நான்கு ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பயனையும் பெற முடியாது. ஆனால், புதிய காப்பீடுத் திட்டத்திலோ

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

நான்கு லட்சம் வழங்கப்படுவதால், அந்தக் கவலை இல்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், முந்தைய திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காப்பீடுத் தொகையான

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

ஒரு லட்சம், உயிர் காக்கும் பெரிய அறுவைச் சிகிச்சைகளுக்குப் போதுமானதாக இல்லை.

புதிய திட்டத்திலோ, சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்துக்கு

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?

1,50,000 வழங்கப்படுகிறது. தவிர, முந்தைய திட்டத்தில் மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை வழங்கவும் வழிவகை செய்யப்படவில்லை.

ஆனால், புதிய திட்டத்திலோ மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளும் அடங்கும்'' என்றார்.

காப்பீடுத் திட்டங்கள் மக்களைக் காப்பாற்றும் திட்டங்களாக அமலாக வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும்!

பழைய காப்பீடு... புதிய காப்பீடு என்ன வித்தியாசம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு