Published:Updated:

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

"விவசாய வேலைகளை ஆர்வமா செஞ்சேன். ஃபோட்டோகிராபி கிளாஸுக்குப் போனேன். புதுசா நண்பர்கள் கிடைச்சாங்க; அதனால சினிமா வாய்ப்பும் கிடைச்சது. குறிப்பா, தமிழ்ப் படங்கள்ல கிடைச்ச வாய்ப்புகள் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு."

'விவசாயம்போல மன அழுத்தத்தைப் போக்குற ஒரு விஷயம் வேற எதுவுமில்லை..." என்கிறார் நடிகர் கிஷோர். வில்லன், குணச்சித்திரம் என எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பாந்தமாகப் பொருந்திப்போகிறவர். அலட்டல் இல்லாமல் அழுத்தமாக முத்திரைப் பதிப்பவர். இயற்கை விவசாயம் செய்துவரும் நடிகர் கிஷோர் பெங்களூரில் இயற்கை விளைபொருள் விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரிடம், "மன அழுத்தம், மன இறுக்கம் தந்த தருணங்களை எப்படிக் கடந்தீர்கள்?" எனக் கேட்டோம். 

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

''ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா, டென்ஷனா இருந்த காலங்கள்னா, அது என்னோட பள்ளிக்கூட நாள்கள்தான். அப்பா பெங்களூரில் உள்ள கவர்ன்மென்ட் காலேஜ்ல லெக்சரர்; ரொம்ப ஹானஸ்ட். அவர் எப்பவுமே சிஸ்டமேட்டிக்கா, டிசிப்பிளினா இருக்கணும்னு நினைப்பார். ஆனா, ஆணாதிக்கச் சிந்தனை அதிகம் உள்ளவர். இப்போகூட பழைய ஸ்டூடன்ஸ் அப்பாவைப் பார்த்தா அவ்வளவு பயப்படுவாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.

சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட ரொம்பவே கோபப்படுவார். காலேஜ், வீடுனு ரெண்டு இடங்கள்லயுமே ஒரேமாதிரிதான் இருப்பார். தினமும் ராத்திரி 7 மணிக்குத்தான்  வீட்டுக்கு வருவார். அவர் வர்றதுக்குள்ள ஹோம் வொர்க்கை முடிச்சிருக்கணும். இல்லைன்னா, அடி உதைதான். அதனால சாயந்தரம் 6.45 ஆனதும் பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

அந்த நேரத்துல பசங்க கிரிக்கெட் விளையாடறதுல ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. எனக்கும் கிரிக்கெட், ஃபுட் பால் அவ்வளவு இஷ்டம். படிக்கிற காலத்துல தப்புப் பண்ணிட்டு, அடிக்கடி அவர்கிட்ட அடி வாங்குவேன். அம்மாதான் மத்தியஸ்தரா இருந்து சமாதானம் பண்ணி வைப்பாங்க. அவங்களுக்கும் நாலு டோஸ் விழும். சிலசமயம் இதனால அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். எனக்கு அது பெரிய மன அழுத்தத்தைத் தரும்.   

'இந்த அப்பா ஏன் இப்படியிருக்கார். நாம ஒரு ஸ்போர்ட்ஸ்மேனா வர்றது இவருக்கு ஏன் பிடிக்கலை'னு கோபம் கோபமா வரும். அந்தக் கோபம் ரெண்டு மூணுநாளைக்கு நீடிக்கும். சிலசமயம், வாழ்க்கை மேல வெறுப்பாயிருக்கும். ஆனா, அம்மா எனக்கு எல்லாத்தையும் புரிய வச்சு, வாழ்க்கைனா இப்படியும் அப்படியும்தான் இருக்கும்னு சொல்லித் தருவாங்க. 

பி.யு.சி முடிச்சேன். அது முடிஞ்சதும் நான் டாக்டராகணும்னு சயின்ஸ் குரூப்ல சேர்த்துவிட்டாங்க. பி.யு.சி படிக்கும்போதே முரட்டுசுபாவம் வர ஆரம்பிச்சிடுச்சு. யாராவது ஏதாவது சொன்னா, 'நாம ஏன் அதைக் கேக்கணும், நமக்கு புத்தியில்லையா, அறிவில்லையா'னு கேட்கத் தோணும். 

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

சுதந்தரமா இருக்க ஆரம்பிச்சேன். பசங்களோட சேர்ந்து கூத்தடிச்சேன். பரீட்சை பெரிய பூதம் மாதிரி கண் முன்னாடி வந்துபோகும். அதனால பரீட்சை ஒழுங்காவே எழுதலை. வீட்டுல உள்ளவங்ககிட்ட சொல்லாம என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் தங்கிட்டேன். அப்புறம், அம்மா போன் பண்ணி சத்தம்போட்டு வீட்டுக்கு வரச் சொன்னாங்க.

'நான் வீட்டுக்கு வர்றேன். ஆனா, நம்ம வீட்டுல இருக்க மாட்டேன். பாட்டி வீட்டுலதான் இருப்பேன்'னு சொன்னேன். அம்மா 'சரி'னு சொன்னாங்க. பெங்களூருலருந்து கொஞ்சம் தள்ளி இருக்குற அழகான கிராமம். அங்க எங்க மாமாவும் இருந்தார். அங்க இருந்தப்போதான் என்னை நானே மறுபரிசீலனை பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சேன். 

வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டமாவும் துன்பமாவும் இருக்குன்னு நினைச்சேன். என்னோட வாழ்க்கையையும் வாழாம, அப்பா, அம்மா கனவுகண்ட வாழ்க்கையையும் வாழாம குழப்பத்தோட இருக்கிறதுதான் காரணம்னு தெரிஞ்சது. அதனால இவ்வளவு நாளா நம்ம மனசுக்குப் பிடிச்சதையே செஞ்சுப் பழகிட்டோம். அதனால இனிமேலும் அதையே செய்வோம்னு முடிவு பண்ணினேன். ஆனா, அது பயனளிக்கிறதா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்போதான் மாமாவோட சேர்ந்து வயல் வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதுல ஒரு சந்தோஷம் கிடைச்சது. அந்த சந்தோஷம் புதுசா இருந்துச்சு.

விவசாய வேலைகளை ஆர்வமா செஞ்சேன். ஃபோட்டோகிராபி கிளாஸுக்குப் போனேன். புதுசா நண்பர்கள் கிடைச்சாங்க; அதனால சினிமா வாய்ப்பும் கிடைச்சது. குறிப்பா, தமிழ்ப் படங்கள்ல கிடைச்ச வாய்ப்புகள் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. இப்போ கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்குனு எல்லா மொழிப் படங்கள்லயும் நடிச்சிட்டிருக்கேன். இது வேறு ஒரு வகையான டென்ஷனான வாழ்க்கைதான். ஆனா, என் தோட்டத்துக்குப் போயிட்டா எல்லா டென்ஷனும் பறந்துபோயிடும்.

"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்!"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress

ஃபுகோகா தொடங்கி, நம்மாழ்வார், பாலேக்கர்னு இயற்கை விவசாயம் சார்ந்த பலபேரோட புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பிச்சேன். நாம வளர்க்குற மரம் செடி, கொடிக்கிட்டப் பேசும்போது ரொம்பவும் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன். என்னோட வொய்ஃப் காலேஜ்ல எனக்கு ஜூனியரா இருந்தவங்க. எனக்குப் பிடிச்சதெல்லாம் அவங்களுக்கும் ஓரளவு பிடிக்கும். 

குறிப்பா, இயற்கை விவசாயத்துல அவங்களுக்கும் ரொம்ப இன்ட்ரஸ்ட். வெளியிடங்கள்ல இருக்கும்போது ஏற்படுற டென்ஷன் வீட்டுக்கு வந்தா காணாமப் போயிடும். வீடு, வேலை பார்க்கிற இடம் இந்த இரண்டு இடமும் டென்ஷன் இல்லாம இருக்கணும்னா, வீட்டுல உள்ளவங்களால நமக்கு டென்ஷன் ஏற்படாம பார்த்துக்கணும். இதைச் சரிசெஞ்சாலே வெளி உலகத்துல ஏற்படுற டென்ஷனை ஈஸியா சரிபண்ணிடலாம்'' என்கிறார் நடிகர் கிஷோர் பெருமிதமாக.