Published:Updated:

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!
கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

குழந்தைகளைப் போட்டி மனப்பான்மையுடன் வளர்க்கிறோம். நம் குழந்தை எல்லாவிதத்திலும் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகக் குழந்தைகளின் உலகத்தை ஒரு போட்டிக்களமாக மாற்றி வைத்திருக்கிறோம். இதன்விளைவாக, இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் மிக எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், தோல்வியைத் தாங்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

ப்பாவை விடப் பிள்ளைகளுக்கு அம்மாவிடம்தான் ஒட்டுதல் அதிகமிருக்கும். காரணம், அம்மாவின் கனிவு, கருணை. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அம்மா தன் குழந்தையைக் குழந்தையாகவே பார்ப்பாள். அந்த அன்புதான் அன்னையின் அடையாளம்.

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

சமீபகாலங்களில் வெளிவருகிற சில செய்திகள் இதயத்தை நடுங்க வைக்கின்றன. இதுவரை நாம் நம்பிவந்த உயிரியல் தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. படிக்காமல் டி.வி பார்த்துக்கொண்டிருந்த ஐந்து வயதுச் சிறுமியை, பெற்ற தாயே அடித்துக் கொன்ற சம்பவம் நாமக்கல் அருகே நடந்தது. இதேபோல, தனது செயலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது மகனை தோசைக் கரண்டியால் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார் ஒரு தாய். வலிதாங்காமல் ஓடிய சிறுவன், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 

`பெற்ற குழந்தைகளை கொலை செய்யுமளவுக்கு பெண்களின் உள்ளம் மாற காரணம் என்ன?' மனநல மருத்துவர் அரவிந்திடம் கேட்டோம். 
``குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதை `பேட் பேரன்டிங்' என்போம். சிறுவயதில் அவர்கள் எதிர்கொண்ட துயரத்தை பெற்றோரானபிறகு தங்கள் பிள்ளையிடம் பிரதிபலிப்பார்கள். ஒருவரைத் துன்புறுத்தி அதன்மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் துன்பமாகவே பார்ப்பார்கள். பிறருடன் பழகாமல் இறுக்கமாகவே இருப்பார்கள். நான்கு சுவருக்குள்ளேயே வாழ்வார்கள். அவர்களைப்போலவே தங்கள் குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

குழந்தைகள் வெளியேசென்று விளையாட வழியில்லாமல் நான்கு சுவருக்குள் இருக்கும்போது டி.வி பார்த்தால்கூட அவர்களைத் தண்டிப்பார்கள். இந்த விவகாரத்தில் குழந்தைகளை அடித்து, துன்புறுத்துவதைத் தாண்டி கொலைசெய்யும் அளவுக்குக் செல்வதென்பது தீவிர மனநோயின் வெளிப்பாடு. தீவிர மனஅழுத்தத்தின் விளைவு. 

இன்றைய சூழலில் குழந்தைகள் வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் வளர்ப்பு முறை. பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுத்து `கேம்' விளையாடச் சொல்லிப் பழக்கப்படுத்துகிறார்கள். இதை `பேட் பேரன்டிங் மாடல்’ (Bad Parenting Model) என்போம். ஒரு குழந்தையை எப்படி வளர்க்கக் கூடாது என்பதற்கான உதாரணம் இது. 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டால் தன் எதிரில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எந்த எல்லைக்கும் செல்வார்கள். இந்த பாதிப்பை `பார்டர் லைன் பர்சனாலிட்டி’ என்போம். இந்த வகையான பர்சனாலிட்டி உள்ளவர்கள் எதையும் எதிர்மறையாகவே பார்ப்பார்கள்.அவர்களின் இல்லற வாழ்க்கையும் கட்டுப்பாடின்றி போய்விடும். இவர்களுக்கு அன்பு, பாசம், கருணை எல்லாமே வற்றிப்போய்விடும். இதையே சமீபத்திய சம்பவங்களிலும் பொருத்திப் பார்க்கலாம்” என்கிறார் மருத்துவர் அரவிந்த்.

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

மாறி வரும் பொருளாதாரத் தேவைகள், நெருக்கடிகள், நகரமயமாதல் போன்றவற்றின் விளைவாக குடும்பங்களின் வடிவங்களே மாறிவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் மறைந்து வாழ்க்கை சுருங்கிவிட்டது. அதனால் குழந்தை வளர்ப்பு பெற்றோருக்கு சிக்கலான பணியாக மாறிவிட்டது. முன்பெல்லாம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் கண்காணிப்பும், மேற்பார்வையும் இருந்தன. இப்போது குழந்தை வளர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையிடம் அத்தனை பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. அதனால்தான் `பேரன்டிங்' என்பது இப்போது சிக்கலாக மாறியிருக்கிறது. 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

``பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதனால் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. கண்டிப்பாகக் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கவேண்டும். அவர்களுடன் ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். பிரச்னைகள், சிக்கல்கள், சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதைப் பொறுமையுடன் கேட்கவேண்டும். 

குழந்தைகளிடம் முடிந்தஅளவு பெற்றோர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். எத்தகைய பிரச்னைகளையும் தயக்கமின்றி வீட்டில் பேசுவதற்கான சுதந்திரத்தை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

குழந்தைகள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். அது எந்தவகையில் தவறு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று அவர்களிடம் வெளிப்படையாகப் பேசவேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது அதை உணரவைக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. 

முடிந்தவரை குழந்தைகளைத் தன்னிச்சையாக முடிவெடுக்க ஊக்குவிக்கலாம். அதற்குப் பெற்றோர் வழிகாட்டலாம்; ஆனால் வற்புறுத்தக் கூடாது. 

குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்தான் அவர்களது ரோல்மாடல். அவர்கள் நீங்கள் சொல்லித்தருவதைவிட, உங்களைக் கவனிப்பதன்மூலம் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முன்பு நீங்கள் பொறுப்பாகவும், கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடக்கவேண்டும். 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

குழந்தைகளை போட்டி மனப்பான்மையுடன் வளர்க்கிறோம். நம் குழந்தை எல்லாவிதத்திலும் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகக் குழந்தைகளின் உலகத்தை ஒரு போட்டிக்களமாக மாற்றி வைத்திருக்கிறோம். இதன் விளைவாக, இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் மிக எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், தோல்வியைத் தாங்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதை உணர்ந்து குழந்தைகள் மற்றவர்களுடன் எத்தகைய போட்டியும், வெறுப்பும் இல்லாமல் உள்ளார்ந்த பிணைப்புடன் பழகுவதை ஊக்குவிக்க வேண்டும். 

18 வயதுவரை எந்தவித டிஜிட்டல் சாதனங்களையும் அவர்களிடம் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அதையும் மீறி அவர்கள் பயன்படுத்தினால் அதை வெளிப்படத்தன்மையுடனும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும்விதமாகவும் பயன்படுத்த அனுமதிக்கலாம். நமக்குத் தெரியாமல் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள், மற்றும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்துகொள்ளச் செய்வதுடன் அவற்றின் பயன்பாட்டை நெறிமுறைப்படுத்தவேண்டும். 

கருணையே வடிவான தாய் பெற்ற பிள்ளையைக் கொல்வது ஏன்?- ஓர் உளவியல் பார்வை!

குழந்தைகளின் பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். அவர்களது நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும். அவர்களுடன் பழகும் முறை, பேச்சு, கோபம், பயம், மகிழ்ச்சி, பசி, தூக்கம், ஆர்வம் போன்ற உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது அதைப்பற்றி அவர்களுடன் விவாதிக்கவேண்டும். அவர்களின் தயக்கத்தை களைந்து அவர்களது பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்கிறார் சிவபாலன் இளங்கோவன். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு