Published:Updated:

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள். நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள். நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.

Published:Updated:
பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

யணங்கள் கொடுக்கும் அனுபவங்கள், அதி அற்புதமானவை. பேருந்தில் ஜன்னலோர இருக்கை, இசைஞானியின் பாடல், மெல்லிய சாரல், மண்வாசனை அனைத்தும் ஒருசேர வாய்ப்பது வரம். உடல் நோய் முதல் உளநோய் வரை குணப்படுத்தும் சக்தி பயணங்களுக்கு உண்டு. பல்வேறு நாடுகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவையும், பல்வேறு கலாசாரங்களை உள்வாங்க வழிகாட்டியாக இருப்பவையும் பயணங்களே. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் எனப் பலரும் புதிய இடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தப் பயணங்களே உதவின. நாடோடியாகத் திரிந்த மனித சமுதாயம், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றதற்குக் காரணமும் பயணங்களே!

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

பல்லாயிரம் மைல்தூரம் பயணித்துதான், அதன் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றில்லை. மனம் சோர்வுற்றிருக்கும்போது சில கிலோ மீட்டர் பயணம்கூட, மனதை உற்சாகப்படுத்தும். விமானம் ஏறி உலகைச் சுற்றிப்பார்ப்பது மட்டுமே பயணம் என்றில்லை. வெளிக்காற்றை உள்வாங்கும் சிறிது தூரப் பேருந்து பயணம்; பல்வேறு சூழலை தனது பிரத்தியேக ஒலியுடன் அறிமுகப்படுத்தும் ரயில் பயணம்; உற்சாகமளிக்கும் இரு சக்கர வாகன/கார் பயணம்; நெருங்கிய உறவுகளுடன் உரையாடிக்கொண்டே நகரும் நடைப்பயணம்… இவை அனைத்துமே ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`விடிந்தால் அலுவலகம், முடிந்தால் வீடு’ என்ற சூழலில் சிக்கித் தவிக்கும் நாம், மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சிறிய பயணம் மேற்கொள்வது அவசியம். பயணங்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். நீண்டதூரம் சுற்றுலா சென்று அங்கிருக்கும் சூழலை ரசிக்க, வருடத்தில் ஒருமுறை அல்லது இரு முறை திட்டமிடலாம். மற்றொன்று நமக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிறுபயணம் மேற்கொள்வது. இரண்டுக்கும் ஏறக்குறைய பலன்கள் ஒன்றுதான். 

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

புதிய சிந்தனைகள் துளிர்விடவும், மூளையின் நரம்பிழைகள் தனது பணியைச் சிறப்பாகச் செய்யவும், அதன் செயல்திறனை அதிகரிக்கவும் பயணங்கள் உதவுகின்றன. பயணம் செய்யும்போது, சில நேரங்களில் நமக்குக் கிடைக்கும் தனிமை, நமது எண்ணங்களைச் செப்பனிட உதவும். அத்துடன் குணநலன்களை நிலைநிறுத்தவும் பயன்படும். நினைவுத்திறனை அதிகரிக்க, சிந்தனையை விரிவாக்க, கடுமையான சூழலை எளிதாக எதிர்கொள்ள ‘பிரெய்ன் கேம்ஸ்’ (Brain games) பயிற்சி எடுத்துக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. இந்த விளையாட்டுகள் கொடுக்கும் அனைத்துப் பலன்களையும் பயணங்களும் கொடுக்கும் என்கிறது இப்போதைய ஆய்வு. பயணிக்கும்போது நாம் பார்க்கும் சூழல், மூளையின் நரம்பு செல்களை விவேகமாகச் செயல்பட வைக்கும். நுண்புலத் திறன் அதிகரிக்கவும் பயணங்கள் உதவும். 

ரசித்து பயணம் செய்பவர்களுக்குப் பதற்றம் (Anxiety), மனச்சோர்வு (Depression) போன்ற மனம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கின்றன ஆய்வுகள். இதய நோய் வராமல் தடுக்க அடிக்கடி பயணம் மேற்கொள்ளலாம். அவ்வப்போது பயணம் செய்து, மனதைக் குதூகலத்துடன் வைத்திருப்பவர்களுக்கு, ஏற்கெனவே இருக்கும் நோயின் தீவிரம் வெகுவாக குறைகிறதாம். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவைக் குறைக்க, பயணம் எனும் மருந்தை முயன்று பாருங்கள். 

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

அடிக்கடி பயணம் செய்யும் மாணவர்கள், கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள். விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பி, மாணவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காமல், வாய்ப்பிருக்கும் இயற்கைச் சூழலுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பிள்ளை படிப்பில் சுட்டியாக மாறப் பயணங்கள் நிச்சயம் துணை நிற்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த, மெதுவான ஒரு நடைப்பயணம் போதும். வாக்குவாதங்கள் தவிர்க்கப்படுவதுடன், மிகப்பெரிய பிரச்னைகளும் தடுக்கப்படும். பயணம் மேற்கொள்பவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும் என்கிறது உளவியல் ஆய்வு ஒன்று. 

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

வரலாற்றைத் தேடிச் செல்லும் குழுப் பயணம், நமது மரபை ஆராயும் பயணம், சூழல் சுற்றுலா, பாதுகாப்பான மலையேற்றப் பயிற்சி, காட்டு உலா எனப் பல்வேறு வகையான பயணங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமுதாயத்துடன் புரிந்துணர்வுடன் செயல்பட, இவ்வகையான பயணங்கள் பெருமளவில் உதவும். சகமனிதர்களுடன் பழகும் வாய்ப்பு குறைந்துவரும் இன்றைய சூழலில், பயணங்கள் பல புதிய மனிதர்களை அறிமுகப்படுத்தும். 

புதுப்புது இடங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள், வாழ்க்கைச் சக்கரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த, ஒரு உந்துவிசையைக் கொடுக்கும். பயணங்களின் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் விதவிதமான உணவுகள். வெவ்வேறு பகுதிகளில் உள்ள உணவுக் கலாசாரத்தை உள்வாங்கி, மூளை அணுக்களுக்குள் புதுமையைப் புகுத்திட பயணங்கள் உதவும். 

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

`தினமும் சுமார் ஒரு மணி நேரம் பயணம் சென்றால்தான் அலுவலகத்தை அடைய முடியும்’ என அங்கலாய்ப்பவர்கள், பயணம் செய்யும் நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்கும் நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள். சகமனிதர்களின் குணாதிசயங்களைக் கவனியுங்கள். சூழலை ரசிக்கப் பழகுங்கள், பயணம் இனிமையாகும். பல நாடுகளில் நோய்களைக் குணமாக்க பயணங்களை ஊக்கப்படுத்தும் வாழ்வியல்முறை அறிவுறுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

`உலகம் ஒரு புத்தகம்… தினமும் நீங்கள் பயணிக்கவில்லை என்றால், புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்' எனும் அறிஞர் ஒருவரின் பொன்மொழி ஒன்று உண்டு. பயணம் எனும் புத்தகத்தை அவ்வப்போதாவது புரட்டுவோம். மனம் பாரத்துடன் இருக்கிறதா, எங்கே பயணம் செய்யலாம், எவ்வளவு செலவாகும் என யோசிக்கிறீர்களா. இருக்கவே இருக்கிறது தாத்தா-பாட்டி வீடு, அப்பத்தா வீடு. குடும்பத்துடன் அங்கே பயணம் செய்யுங்கள். மனதிலிருக்கும் பாரம் காற்றாகப் பறந்துபோகும்.

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள். நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும். நினைத்தாலே இனிப்பவை பயணங்கள். பல நோய்களுக்கு மனமே ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. எனவே, மனதை மகிழ்ச்சியுடன் வைக்கச் செய்து, நோய்களைத் தடுக்க உதவும் பயணங்கள் காலத்தின் கட்டாயம். 

பயணங்கள் என்றும் முடிவதில்லை; ஜன்னலோர இருக்கையும் நமக்காகக் காத்துக்கிடக்கின்றன... தொடர்ந்து பயணிப்போம். 

பயணம், ஓர் உளவியல் மருத்துவம்... பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

கவனம்: சில நேரங்களில் பயணங்களும் அழுத்தத்தைக் கொடுக்கும். நெரிசல்மிக்க பெருநகரங்களில் பயணம் செய்வது மனதுக்குச் சுமை தரக்கூடியதுதான். பணிச்சூழல் காரணமாகத் தினமும் 100 கிலோமீட்டர் தூரம் பயணிப்பவர்களுக்கு, காலப்போக்கில் இடுப்பு வலி, கழுத்து வலி, மலக்கட்டு, மூலம் போன்ற தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது நீண்ட தூரப் பயணம் செய்பவர்கள், பயணத்துக்கான இடத்தையும் சூழலையும் முறையாகத் திட்டமிடாமல் போனால், பயணம் கடுமையாகும். தீவிர இதய நோயாளிகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அவசியம் பயணிக்க நேர்ந்தால் தேவைப்படும் மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்வது முக்கியம். சிறிது தூரப் பயணங்கள் இவர்களுக்கு உற்சாகம் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism