Published:Updated:

கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?

கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?
கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?

விருப்பப்பட்டதெல்லாம், விரும்பிய நொடியே வாங்கிக் கொடுத்துவிட்டு அந்தப் பொருள்களுக்கும் பழக்கத்துக்கும் அவர்களை நன்கு பழக்கியபிறகு, திடீரென ஒருநாள் பொருளாதாரத்தையோ சூழலையோ காரணம் காட்டி அதை நிராகரிக்கின்றனர் சில பெற்றோர். இந்த திடீர் மாற்றத்தை, குழந்தையால் புரிந்துகொள்ள முடியாது.

அவசரமாக வெளியில் கிளம்பிக்கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து குழந்தை வேகமாக ஓடிவந்து, `நானும் வரேன்' என அடம்பிடிக்கும். `வேண்டாம்' என்றால், உடனே அழத்தொடங்கிவிடும். `சரி, ரொம்ப அழுகிறதே, கூட்டிட்டுப் போகலாம்' என்று உடன் அழைத்தும் செல்வோம். `வர்ற இடத்துல அமைதியா இருக்கணும். சேட்டை பண்ணக் கூடாது, அடம் பிடிக்கக் கூடாது. முக்கியமா, அப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாது. அதைவிட முக்கியமா மத்தவங்க முன்னாடி அழவோ, கத்தவோ கூடாது' என அறிவுரை சொல்லித்தான் அழைத்துச் செல்வோம். ஆனால், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே மேற்சொன்ன அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கிவிடும். தொண்ணூறு சதவிகித குழந்தைகள் இப்படித்தான். வீட்டுக்குள் இருக்கும்போது அமைதியாகவும், கடைகளுக்குப் போகும் நேரத்தில் பிடிவாதக்காரர்களாகவும் மாறிவிடுகின்றனர். இது பெற்றோரை பல தருணங்களில் தர்மசங்கடத்திலும் சில நேரங்களிலும் பதற்றத்திலும் ஆழ்த்துகிறது. 

கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?

``உண்மையில், பொது இடங்களில் குழந்தைகள் அடம்பிடிக்கத் தொடங்கினால், அவர்களை எப்படிக் கையாள வேண்டுமெனப்

கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?

பெருவாரியான பெற்றோருக்குத் தெரிவதில்லை. குழந்தை அழத்தொடங்கியவுடன் அவர்களும் பதற்றமாகிவிடுகின்றனர். `எப்படியாவது, அழுகையைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்றுதான் பல பெற்றோர் நினைக்கின்றனர். ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்பதை அறிய முயலாமல் அழுகையை `இன்ஸ்டென்ட்'டாக நிறுத்த அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கிறார்கள். இது, `அழுதால் எதையும் சாத்தியப்படுத்தலாம்' என்ற எண்ணத்தைக் குழந்தைக்குக் கொடுத்துவிடும்..." என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. 

``கொஞ்ச நாள்களுக்கு முன், 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவர் குழந்தையைப் பற்றிய சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். `வர வரக் குழந்தையை வெளியே அழைச்சுட்டு போறதுக்கே பயமாயிருக்கு டாக்டர். எங்க போனாலும், ஏதாச்சும் ஒன்னு கேட்டு அடம்பிடிக்க ஆரம்பிச்சுடறான். மாலுக்குப் போனா ரிமோட் கார், பீச் போனா, பபுள்ஸ், லைட் எரியுற பலூன், ஸ்பின்னர்... தியேட்டர் போனா, பெரிய சைஸ் பார்ப்கார்ன் டப்பா, கூல்ட்ரிங்க்ஸ்னு  எதைப் பார்க்குறானோ அதை அப்படியே கேட்பான். சரி, வாங்குற பொருள்களை உபயோகப்படுத்துவானானு கேட்டா, எல்லாமே அஞ்சு நிமிஷம்தான். அவனுக்கு என்ன வேணும்னே அவனுக்குத் தெரிய மாட்டேங்குது. கண்ணுக்கு பிடிச்சிருந்தா போதும்னு நினைக்கிறான். ஒருமுறை பீச் போயிருந்தப்போ, புல்லாங்குழல் கேட்டான்.  சரி, உபயோகப்படுத்துவான்னு வாங்கிகொடுத்தால் சரியா, ரெண்டே நாள்... புல்லாங்குழல் ரெண்டா உடைஞ்சிருச்சு. 

ஒருமுறை உறவினருடைய வீட்டு விசேஷத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அங்கபோய் பதினைஞ்சு நிமிஷம்கூட ஆகியிருக்காது... `இங்க போர் அடிக்குதுப்பா, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்'னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டான். அடுத்த அஞ்சு நிமிஷத்துல, கண்ணுல தண்ணி வந்துடுச்சு. இவனை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல டாக்டர். இன்னொரு குழந்தை பெத்துக்கோன்னு எங்க அம்மா - அப்பா எங்கிட்ட சமீபத்துல சொன்னாங்க. ஆனா, ஒரு குழந்தைக்கே இந்த நிலைமைன்னு பயமாயிருக்கு...' என்றார்.

குழந்தைகள் பிஹேவியர் தொடர்பான சில கருத்துகளில், எனக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன. முதல் விஷயம், உலகில் எந்தக் குழந்தையும் தேர்ந்தெடுக்கும் திறனின்றி இருப்பதில்லை. அவர்களுக்கு என்ன வேண்டுமென அவர்களே தேர்வுசெய்தால் மட்டுமே அவர்களின் திறன் நமக்குத் தெரியத் தொடங்கும். குழந்தைகளைக் குறை சொல்லும் பெற்றோர் யாரும், தேர்ந்தெடுக்கும் திறனையும் சூழலையும் தங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தித் தருவதில்லை. அடுத்தது, அநாவசியமான பொருளை கேட்கிறது என்ற எண்ணம் தவறு. அவர்களுக்கு எது அவசியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல் போனதன் விளைவுதான், பார்ப்பதையெல்லாம் அவர்கள் கேட்பதென்பது. 

கண்ணில்படுவதை எல்லாம் கேட்கும் குழந்தையைச் சமாளிப்பது எப்படி?

எந்தவொரு பொருளின் தேவையும், அது கிடைக்காமல் போகும்போதுதான் தெரியவரும். எந்தப் பொருளை குழந்தை உதாசீனப்படுத்துகின்றதோ, அதை அடுத்தமுறை அவர்களுக்கு வாங்கித்தர வேண்டாம். அழுதாலும் பரவாயில்லை என விட்டுவிடுங்கள்.
வெற்றிடத்தில்தான் இருப்பின் முக்கியத்துவத்தை உணரமுடியும் என்பதால், அவர்களுக்குத் தேவையான பொருளைக்கூடக் கொஞ்சம் காலம் தாழ்த்தி வாங்கிக்கொடுக்கலாம். தவறெதுவும் இல்லை. இடைப்பட்ட காலத்தில், பொருளின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரட்டும். காத்திருந்து கிடைக்கும் அத்தியாவசியப் பொருளை, எந்தக் குழந்தையும் உடைக்காது. தொலைக்கவும் செய்யாது. சொல்லப்போனால், கண்ணும் கருத்துமாக பத்திரப்படுத்திக் கொள்ளும்.

விருப்பப்பட்டதெல்லாம், விரும்பிய நொடியே வாங்கிக் கொடுத்துவிட்டு அந்தப் பொருள்களுக்கும் பழக்கத்துக்கும் அவர்களை நன்கு பழக்கியபிறகு, திடீரென ஒருநாள் பொருளாதாரத்தையோ சூழலையோ காரணம் காட்டி அதை நிராகரிக்கின்றனர் சில பெற்றோர். இந்த திடீர் மாற்றத்தை, குழந்தையால் புரிந்துகொள்ள முடியாது. அழத்தொடங்கிவிடுவார்கள். இது ஒருவகை ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எல்லாக் குழந்தையும், ஏமாற்றத்தின் வலியை உணரத்தான் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் கொஞ்சமேனும் அவர்கள் பக்குவப்படுவார்கள். குழந்தை அடம்பிடிக்கும் பொருள்களுக்கு, பெற்றோர் கட்டாயம் `நோ' சொல்ல வேண்டும். `குழந்தை அழவே கூடாது, வருத்தப்படவே கூடாது, நினைத்தெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிட வேண்டும்' என நினைத்தால், பின்னாள்களில் இழப்பைத் தாங்கும் மன வலிமையே இல்லாமல் குழந்தை வளரும். இது, அவர்களுடைய எதிர்காலத்துக்குப் பாதகமாக அமையலாம். எனவே, பெற்றோர் விழிப்புணர்வுடன், புத்திசாலித்தனமாகச் செயல்படுவது அவசியம்" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு