Published:Updated:

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress
`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

"வீரப்பன் முன்வைத்த சில கோரிக்கைகளை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, ராஜ்குமார் விடுதலையானது ஒரு நீண்ட வரலாறு. ஆனால், நாங்கள் அப்போது போகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது."

ழத் தமிழர்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பழ.நெடுமாறன். தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான இவர், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழீழப் போராட்டத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட போராளி. மாணவப்பருவத்திலிருந்தே பொதுவாழ்வில் பங்கெடுத்து வருவதால் தமிழகத்திலுள்ள ஓரிரு சிறைகளைத் தவிர, அனைத்துச் சிறைகளுக்கும் சென்று வந்தவர். அவரது அரசியல் பயணத்தில் நெருக்கடியான, மனஅழுத்தம் தந்த சம்பவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

``1978-ம் ஆண்டு அன்னை இந்திரா மதுரை வந்திருந்தார். அப்போது அவர் கட்சிப்பதவி, ஆட்சிப் பதவி என எதிலும் இல்லாத நேரம் அது. ஆனால், அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்த தி.மு.க முடிவு செய்திருந்தது. பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள், முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் வரும்போது எதிர்க்கட்சியினர் சில காரணங்களுக்காக கறுப்புக்கொடி காட்டுவது ஜனநாயக மரபு. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது என்பது மரபுகளுக்கு எதிரானது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்திரா காந்திக்கு எதிராக தி.மு.க கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்தியது. 

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

மதுரை விமான நிலையத்திலிருந்து அன்னை இந்திராவை திறந்த காரில் அழைத்து வந்தோம். மதுரை தெற்குவாசல் அருகே நாங்கள் வந்தபோது, தி.மு.க.வினர் அவர் வந்த காரைச் சூழ்ந்துகொண்டு கற்களாலும் கம்புகளாலும் தாக்கினர். அருகிலிருந்த நான் ஒருகணம் திகைத்துப் போனேன். ஆனாலும், உடனடியாக அவரைப் பின்புற இருக்கையில் படுக்கவைத்து அவர்மீது ஒரு தலையணையை வைத்து அதற்குமேல் நான் குனிந்துகொண்டேன். எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டேன். இதனால் தலை உட்பட பல இடங்களில் பலத்த அடிபட்டு ரத்தம் சிந்தியது. நல்லவேளையாக நாங்கள் வந்த காரின் டிரைவர் கெட்டிக்காரத்தனமாகக் காரைப் பின்நோக்கிச் செலுத்தி மிகவேகமாக முன்னோக்கிப் பாய வைத்தார். இதனால் கூட்டம் சிதறி ஓடியது. ஆனால் அன்று விழுந்த அடி இந்திராகாந்தி மீது விழுந்திருந்தால் என்னாகியிருக்கும் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் பதறுகிறது.

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

இதேபோல் 2000-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரையும் அவரது மருமகனையும் கடத்திக் காட்டுக்குள் கொண்டுபோய் பிணைக் கைதியாக வைத்துக்கொண்டான். அப்போது அவர்களை விடுவிக்க சில நிபந்தனைகளை விதித்தான் வீரப்பன். இதனால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் பதற்றம் நிலவியது. அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி என்னை அழைத்துப் பேசினார். ராஜ்குமார் விடுதலை பற்றி பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்புமாறு வீரப்பன் தெரிவித்திருப்பதாகவும், காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேசுமாறும் அவர் கூறினார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வீரப்பனை நான் முன்பின் சந்தித்ததில்லை என்பதால் யோசித்துப் பதில் சொல்வதாகக் கூறினேன். அப்போது,`நீங்கள் யோசிக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு ஆபத்து' என்றார் கருணாநிதி. ஆனாலும், எனக்கு தயக்கம். 

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

மறுநாள் காலை பெங்களூர் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் பலர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கட்டாயம் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி நானும், தோழர்கள் மணி, பேராசிரியர் கல்யாணி, சுகுமார், நக்கீரன் கோபால் ஆகியோர் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது வீரப்பன் முன்வைத்த சில கோரிக்கைகளை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, ராஜ்குமார் விடுதலையானது ஒரு நீண்ட வரலாறு. ஆனால், நாங்கள் அப்போது போகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. 

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின்கீழ் நானும், என் இயக்கத்தைச் சேர்ந்த சுப.வீரபாண்டியன், கா.பரந்தாமன், மருத்துவர் தாயப்பன், சாகுல் அமீது போன்றவர்களும் கைது செய்யப்பட்டோம். வைகோவும் அவரது தோழர்களும் பொடாச்சட்டத்தில் கைது செய்யப்பட்டபோதே இதை நான் எதிர்பார்த்திருந்தேன். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை தரவேண்டுமானால்கூட ஓராண்டு காத்திருக்கவேண்டும். அதுவும் தோழர்களிடமிருந்து என்னைப் பிரித்து கடலூர் சிறையில் தனியாக அடைத்தார்கள். எனவே, நீண்டகால சிறைவாசத்துக்குத் தயாரானேன்.

`வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமலிருந்திருந்தால்..?' - பழ.நெடுமாறன் பகிரும் பதைபதைக்கும் அனுபவம் #LetsRelieveStress

முன்னதாக என்னைக் கைது செய்வதற்காக இரவு 10 மணிக்குமேல் காவல்துறை அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தபோது சற்றுநேரம் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது நான் எழுதவேண்டிய சில நூல்களுக்கான குறிப்புகளின் தொகுப்புகளையும், சில நூல்களையும் கையில் எடுத்துக்கொண்டேன். மற்ற நூல்களை அவ்வப்போது சிறையில் கொண்டுவந்து கொடுக்கும்படி எனது மகள் உமாவிடமும், குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தபோது ஆறு நூல்களை முழுமையாக எழுதி முடித்தேன். இலவசமாக இடமும், உணவும் தந்து எழுதுவதற்கேற்ற அமைதியான சூழலையும் அளித்த அரசுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்கிறார் பழ.நெடுமாறன்.  

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு