Published:Updated:

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது
"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருநங்கை என்றால் கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள்' என்றிருந்த சமூக அவலநிலை இப்போது மாறிவருகிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் உணவகம், தையல் கடை என சுயமாகத் தொழில் செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். இவையெல்லாம் உடனடியாக நிகழ்ந்த மாற்றங்கள் இல்லை. பல அவப் பெயர்களைச் சொல்லி சமூகம் அவர்களை அழைத்துக்கொண்டிருந்தபோது, `திருநங்கை' என்னும் அழகிய தமிழ்ப் பெயரை 2008 -ல் அறிவித்தார் கருணாநிதி. அத்துடன் திருநங்கைகளுக்கெனத் தனி நலவாரியம் அமைத்த கருணாநிதி, நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை `திருநங்கையர் தின’மாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தார். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. இப்படியாகப் பல்வேறு நிலைகளில் திருநங்கைகளின் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

குறும்படம், திரைப்படங்களில் திருநங்கைகளின் வாழ்க்கை நிலை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. `தர்மதுரை’ திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்த திருநங்கை ஜீவா, திரைப்படம் வெளியான பிறகு தன் குடும்பத்துடன் இணைந்துகொண்டார். இயக்குநர் ராம், தனது `பேரன்பு' படத்தில் திருநங்கை ஒருவரைக் கௌரவமான வேடத்தில், படத்தின் நாயகி அந்தஸ்தில் நடிக்க வைத்தார்.  தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி என கல்வி, வேலைவாய்ப்புகளிலும் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு தற்போது அவர்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரித்து வருகிறது. இத்தனை விழிப்புணர்வு உள்ள நாள்களிலும் திருநங்கைகள் பலர் சில இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்றால், 20 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்! தங்கள் இளமைக் காலத்தில் சந்தித்த அவமதிப்புகள், அனுபவங்கள் அவற்றைக் கடந்து வந்த பாதை ஆகியவை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டனர் 40 வயதைக் கடந்த திருநங்கைகள் இருவர்.

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

திருநங்கை நூரி, சமூக சேவகி (56 வயது)

``என் இளமைக் காலத்தில் சாலையில் நடந்துபோகவே கஷ்டமாக இருந்தது. கால்வாய் ஓரம், குடிசைப் பகுதியில்தான் எங்களுக்கு வீடு கிடைக்கும். அங்குதான் வாடகையும் குறைவு. அந்த இடத்துல உள்ள ரவுடிகள் எங்களை ரொம்ப கேவலமாக நடத்துவாங்க. போலீஸ்காரங்க சம்மந்தம் இல்லாம எங்களை அடிப்பாங்க. சில நேரங்கள்ல தவறாகவும் நடந்துக்கிடுவாங்க. அந்த நேரத்துல எங்களுக்கு யாரும் சப்போர்ட் கிடையாது. பயந்து வாழ வேண்டிய சூழல். இப்படி நிறைய கஷ்டங்களை அனுபவிச்ச நாங்க, இப்போ ஓரளவு முன்னேறியிருக்கிறோம். அரசு அலுவலகங்கள்ல வேலை செய்ற அளவுக்கு திருநங்கைகள் வளர்ந்திருக்கிறாங்க. காவல்துறை, மருத்துவத்துறைகள்லகூட திருநங்கைகள் நுழையறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போ வளர்ந்து வர்ற திருநங்கைகள்கிட்ட, நாங்க பட்ட கஷ்டத்தைச் சொல்லி முடிஞ்சவரைக்கும் அவங்களை குடும்பத்தோட சேர்த்து வைக்கணும். குடும்பத்துல உள்ளவங்க எங்களை அரவணைச்சா அவமானப்படவேண்டிய அவசியம் இல்லை. 

நாம கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கணும். அடுத்த தலைமுறைக்கு அதைச் சொல்லிப் புரிய வைக்கணும். ஒரு திருநங்கை தப்பு செஞ்சா எல்லோரையும் தப்பா நினைக்கிறாங்க. தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்கணும். ஒரு பொண்ணுகிட்ட ஒருத்தர் தப்பா நடந்தா தட்டிக் கேட்கிறாங்க. ஆனா, ஒரு திருநங்கைகிட்ட தப்பா நடந்தா யாரும் தட்டிக்கேட்கிறதில்லை. எல்லோரும் வேடிக்கைதான் பார்க்கிறாங்க. காவல்துறை நல்லா செயல்படுது. எங்களுக்கு காவல்துறை நிறைய உதவி செய்யுது. இப்போ எங்களுக்கு கிடைச்சிருக்கிற அங்கீகாரத்தைக் காப்பாத்த வேண்டியது எங்களோட கடமை" என்றார்.

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

திருநங்கை பாரதி கண்ணம்மா, சமூகச் செயற்பாட்டாளர் (55 வயதைத் தாண்டியவர்)

``எனக்கு மதுரை சொந்த ஊரு. என்னோட உண்மையான பேரு அழகுராஜ். வீட்டுக்கு நான் ஒரே பையன். பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே எனக்குள்ள உடல்ரீதியா மாற்றம் தெரிஞ்சிச்சு. `நீங்க ஏதோ பாவம் பண்ணியிருக்கீங்க. அதனாலதான் உங்க பையன் இப்படி பொம்பளப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறான்'னு எல்லோரும் சொன்னாங்க. `என்னோட உடம்புக்குள்ள என்ன நடக்குது. எதுக்கு எல்லாரும் என்னைக் கிண்டல் பண்றாங்க. அது எப்போ சரியாகும்'னு நினைச்சுப் பலநாள் அழுதிருக்கேன். ஸ்கூல் முடிச்சு, காலேஜுக்குப் போகும்போது நான் முழு பெண்ணாக உணர்ந்தேன். அப்போ, `பாம்பே போய் ஆபரேஷன் எதுவும் பண்ணிடாதடா. அம்மா உயிரோட இருக்குறவரைக்கும் நீ இப்படியே இரு'ன்னு அம்மா சொன்னதுக்காக ஆண் உடை உடுத்தித்தான் காலேஜுக்குப் போய்ட்டு வந்தேன்.

காலேஜ் படிக்கும்போதுதான் ஆண்களோட பாலியல் சீண்டல் அதிகமாச்சு. அதுமட்டுமல்ல ஊரையும், என்னையும் ஏமாத்திக்கிட்டு வாழப் பிடிக்கல. அதனால, 2004-ல அம்மா இறந்ததும் சுடிதார், சேலை அணிஞ்சி திருநங்கையா மாறினேன். அதுக்குப் பிறகுதான் தோளைத்தட்டுறது, இடுப்பைக் கிள்ளுறதுன்னு பாலியல் தொல்லைகள் அதிகமாச்சு. போன் வந்தா நான், `ஹலோ' சொன்னதுமே எடுத்த எடுப்புலயே தப்பாத்தான் பேசுவாங்க. ஒருமுறை மதுரை ரிசர்வ்லைன் பகுதியில உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியில நான் கலந்துக்கிட்டேன். அப்போ அஞ்சு பேரு என்னோட வாயப் பொத்தி தூக்கிட்டுப் போனாங்க; கத்தியைக் காட்டி மிரட்டி ரொம்ப தொந்தரவு பண்ணுனாங்க. என்னோட வாழ்க்கையில மறக்கமுடியாத சம்பவம் அது.

"எங்ககிட்ட தப்பா நடக்கிறவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை"- போராட்ட வாழ்விலிருந்து மீண்ட திருநங்கைகள்! #LifeStartsAt40 #நலம்நல்லது

அந்த நேரத்துல என்னை முழுசாப் புரிஞ்சுக்கிட்ட நண்பர்கள்தான் எனக்குப் பக்கபலமா இருந்தாங்க. தொடர்ந்து சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டினேன். என்னைப்போல உள்ள திருநங்கைகளை அரவணைச்சு அவங்களுக்கு சுயமா தொழில் நடத்த வழிகாட்டத் தொடங்கினேன். திருநங்கைகள் பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பல கருத்தரங்குகள்ல பேசிட்டு வர்றேன். `கண்ணம்மா'ன்னு மாத்தி வச்ச என்னோட பேரை, விழுப்புரத்துல `மிஸ் கூவாகம்’ பட்டம் வாங்கினதும் பாரதி கண்ணம்மான்னு மாத்தி வெச்சுக்கிட்டேன். இந்தியாவில் மக்கள் நீதிமன்றத்தில் முதல் திருநங்கை நீதிபதியாக இருக்கேன்.

2013-ம் வருஷம் நடந்த மேயர் தேர்தல்ல போட்டியிடுறதுக்காக நான் தாக்கல் செஞ்ச என்னோட வேட்புமனுவை நிராகரிச்சிட்டாங்க. திருநங்கைகளோட ஓட்டு மட்டும் வேணும். ஆனா, நாங்க வேட்பாளரா போட்டி போடக்கூடாதான்னு கோர்ட்டுல வழக்கு போட்டேன். அதுல எனக்கு சாதகமா தீர்ப்பு கிடைச்சது. 2014-ம் வருஷம் சட்டமன்றத் தேர்தல்ல மதுரை மத்திய தொகுதி வேட்பாளரா போட்டியிட்ட 31 பேர்ல மக்கள் ஆதரவோட 15-வது இடம் பிடிச்சேன். போன எம்.பி தேர்தல்லயும் வேட்புமனுத் தாக்கல் செஞ்சேன். ஆனா ரத்து செஞ்சுட்டாங்க. இதுவரைக்கும் பொதுமக்கள், திருநங்கைகள் பிரச்னைகள் தொடர்பா நீதிமன்றத்துல 396 பொதுநல வழக்குகள் போட்டிருக்கேன். அதுல பல வழக்குகள்ல வெற்றியும், நியாயமும் கிடைச்சிருக்கு. திருநங்கைகளைப் பற்றி மக்கள் மத்தியில ஒரு தெளிவும், புரிதலும் இருக்கு. ஆனாலும் திருநங்கைகள் மீதான பாலியல் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யுது” என்றார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு