Published:Updated:

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

Published:Updated:
பெண்களுக்கு கண்ணீர் குறைவு

வி.கே.லதா, கோயம்புத்தூர்.

வண்டி ஓட்டும்போது என் வலது கண்ணில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது. அதுவும் அடர்த்தியான கண்ணீராக இருக்கிறது. பார்ப்பவர்கள் நான் ஏதோ அழுதுகொண்டே வண்டி ஓட்டுவதாக நினைக்கின்றனர். தற்போது பவர் டெஸ்ட் செய்து கண்ணாடி அணிந்து இருக்கிறேன். டாக்டர், 'ரெஃப்ரெஷ் டியர்ஸ்’ போடும்படி சொன்னார். அப்படியும் பிரச்னை தீரவில்லை. என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

அருள்மொழிவர்மன், கண் மருத்துவர், சென்னை.

கண்ணீர் வருவதை எண்ணி நீங்கள் கண்ணீர்விடும் வேதனையை உணர முடிகிறது. உலகிலேயே கண்களில் அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்னை என்ன என்றால், கண்ணீர் வற்றி கண்கள் வறண்டுவிடுவதுதான். இதைத்தான் ஆங்கிலத்தில் 'டிரை ஐஸ்’ என்கிறோம். பொதுவாக, 50 வயதுக்கு மேல் கண்களில் கண்ணீரின் அளவு குறைந்துவிடும். அதுவும் ஆண்களைவிட, பெண்களுக்குக் கண்ணீரின் அளவு வெகுவாகக் குறையும். கண்களில் நீர் வற்றிப்போவதற்கு கண் இமைகளைச் சிமிட்டாமல் இருப்பதுதான் காரணம். வண்டி ஓட்டும்போது மட்டும் அல்ல... தொடர்ச்சியாக ஏ.சி-யில் இருப்பது, இடைவேளையே இல்லாமல் பல மணி நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது என இருந்தால் இந்தப் பிரச்னை வரும். காரணம் இதுபோன்ற நேரங்களில் கண்களை இமைப்பது மிகவும் குறைந்துவிடும். இதனால் கண்கள் அதிகமாக வறட்சி அடையும். கண்கள் திடீரென வறண்டுபோகும்போது, உறுத்தல் ஏற்பட்டு, மேலும் அதிகமாகக் கண்ணீர் வழியும். கண்ணில் தூசு பட்டும் கண்ணீர் வரலாம். இவை எல்லாம் கண்களில் ஏற்படக் கூடிய பிரச்னைகள்தானே தவிர, நோய் அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெற்று 'ரெஃப்ரெஷ் டியர்ஸ்’ பயன்படுத்தினாலே, இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

பெண்களுக்கு கண்ணீர் குறைவு
##~##

கண்களில் கண்ணீர் சுரப்பியின் உற்பத்தியே குறையும்போதுதான், அது கண் நோயாக மாறுகிறது. நீங்கள் சொல்லி இருப்பதுபோல் ஒரு கண்ணில் மட்டும் கண்ணீர் அதிகமாகவும், அடர்த்தியாகவும் வருகிறது என்றால், அந்த ஒரு கண்ணில் மட்டும் சைனஸ் பிரச்னை இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது, 'டஸ்ட் அலர்ஜி’யால் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. சைனஸுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே, கண்களையும் பரிசோதித்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைக்கு சுலபமான தீர்வும் இருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு 6 முதல் 10 முறை இமைகளைத் திறந்து மூட வேண்டும். அவ்வப்போது வேலையின் கவனத்தில் இருந்து கண்களை விலக்கி தொலைதூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது போன்ற பயிற்சிகள், கண்களுக்கு ஓய்வு தரும். மூக்குக் கண்ணாடியை நன்றாக சுத்தம் செய்து அணிவதும் பலன் தரும்.

எஸ்.சரண்யா, மதுரை. 

செந்தமிழ்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை.  

நான் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறேன். கிராமத்தில் கடைப்பிடித்த அதே வழக்கப்படி, குளிக்கும்போது தேங்காய் நார், பீர்க்கங்காய் நார் பயன்படுத்தி வருகிறேன். இதனால் சருமம் கருத்துவிடும் என்று தோழிகள் பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?  

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

தேங்காய் நார் மற்றும் பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதால் சருமம் கருக்காது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் விதம்தான் சருமம் கருப்பதற்கு முக்கியக் காரணம். இதற்கு ஃப்ரிக்ஷனல் மெலனோசிஸ் (Frictional Melanosis)என்று பெயர். ஒரே இடம் அடிக்கடி அழுத்தப்படும்போது, தோலின் மேல் பகுதி ஒருவிதத் தூண்டுதலுக்கு ஆளாகி, நிறம் கருக்கத் தொடங்கும். ஆரம்ப நிலையில் இதைச் சரிசெய்துவிடலாம். ஆனால், தொடர்ந்து இந்தப் பாதிப்பு இருந்து, அதனைக் கவனிக்காமல்விட்டால், இதன் பாதிப்பு அடித்தோல் வரை ஊடுருவும். அந்தப் பகுதி தேய்மானம் அடைந்து செல்களும் உதிர்ந்துவிடும். இதனால், அந்த இடமே நிரந்தரமாகக் கருத்துவிடும். இந்த நிலைக்கு ஃப்ரிக்ஷனல் அமிலோய்டோசிஸ் (Frictional Amyloidosis) என்று பெயர். இப்படிக் கருத்துப்போன தோல் பகுதியைத் திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு அதிக நாட்கள் நீடிக்கும். நிச்சயம் சரியாகும் என்றும் சொல்ல முடியாது. அதனால், அழுந்தத் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தோல் ஓர் இடத்தில் கருக்கத் தொடங்கினால், அதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அந்த இடத்தை அழுந்தத் தேய்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

வசந்தா மாரிமுத்து, சென்னை.

எம்.எஸ்.ரவி, இம்பிளாண்ட் மற்றும் செயற்கை பல் கட்டும் நிபுணர், சென்னை.

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

என் அக்காவுக்கு வயது 58. மேல் தாடையின் இரண்டு பக்கமும் கடைவாய்ப் பற்கள் விழுந்துவிட்டன. மீதம் உள்ள பற்கள் நன்றாக உள்ளன. தற்போது மேல்தாடைப் பற்கள் இருந்த இடத்தில் ஈறு தேய்ந்துவிட்டது. இதனால், மற்ற பற்கள் விழுந்த பிறகுதான் பல் செட் கட்ட முடியும் என்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த மேல்தாடை எலும்பு தேய்ந்துபோய் இருந்தாலும் ஈறு தேய்ந்து விட்டது என்று தவறுதலாகப் புரிந்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. முதலில் ஓ.பி.ஜி. என்ற எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். அந்த எக்ஸ்ரேவில்தான் மேல்தாடைக்கும்- சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு என்பது தெரியவரும். 8-10 மில்லிமீட்டர் அளவுக்கு இந்த எலும்பின் தடிமன் இருந்தால், இம்பிளான்ட் செய்துகொள்ள முடியும். 5-6 மில்லிமீட்டர் அளவுக்கு எலும்பு இருந்தால், சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறைப்படி இம்பிளான்ட் செய்யலாம். அதுவே இந்த எலும்பின் தடிமன் 4 மில்லிமீட்டருக்கும் குறைவாக இருந்தால், கிராஃப்ட்டிங் முறையில் உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அங்கே பொருத்திய பின் இம்பிளான்ட் செய்யலாம். 'ஆல் ஆன் 4’ என்ற முறையில், தாடையில் நான்கு இடங்களில் இம்பிளான்ட் மூலம் தூண் உருவாக்கி, அதன் மேல் பல் செட் கட்டும் தொழில்நுட்பம் இப்போது வந்துவிட்டது. கடைவாய்ப் பற்கள் இல்லாததால் உணவை மெல்ல மற்ற பற்களைப் பயன்படுத்துவார்கள். இதனால், 10 ஆண்டுகளில் விழ வேண்டிய பற்கள் இரண்டு ஆண்டுகளில் விழலாம். எனவே, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, அதன் அடிப்படையில் என்ன மாதிரி சிகிச்சை மேற்கொள்வது என்று முடிவு செய்ய டாக்டருக்கு ஏதுவாக இருக்கும்.

வைஷ்ணவி, பெங்களூரு.

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

மகாதேவன், பொது நல மருத்துவர், திருச்சி.

நான் ஒரு கல்லூரி மாணவி. 'காலையில் எழுந்ததும் பால், பூஸ்ட், போர்ன்விட்டா ஏதேனும் குடித்தால், புரதச்சத்து நிறைய கிடைக்கும்’ என்கிறார் என் அப்பா. ஆனால், 'மோர் அல்லது நீராகாரம் குடித்தால் உடல் குளிர்ச்சியாவதோடு தெம்பாகவும் இருக்கும்’ என்கிறார்

பெண்களுக்கு கண்ணீர் குறைவு

அம்மா. காலையில் வெறும் வயிற்றில், குடிப்பதற்கு உகந்த பானம் எது டாக்டர்?

பால், நீராகாரம் போன்றவை இயற்கையான உணவுப் பொருட்கள். போர்ன்விட்டா, பூஸ்ட் போன்றவை செறிவூட்டப்பட்ட சத்து பானங்கள். ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் பால், மோர், நீராகாரம் குடித்தால், உடலுக்கு நல்ல தெம்பு கிடைக்கும். ஆனால், உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு நிறைய ஊட்டச் சத்து தேவைப்படும். அதனால், அவர்கள் செறிவூட்டப்பட்ட சத்து பானங்களை அருந்துவதே நல்லது. ஒருவர் எந்த மாதிரியான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்பதை அவரது உடல் எடை, வயது, ரத்தத்தில் உள்ள உப்பு - சர்க்கரை - கொழுப்பின் அளவு ஆகியவற்றை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் செறிவூட்டப்பட்ட பானங்களைக் குடிக்காமல் இருப்பதே நல்லது. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் காலையில் எழுந்தவுடன் செறிவூட்டப்பட்ட பானங்களை அருந் தலாம். உடல் பருமனானவர்கள் 'கிரீன் டீ’ குடிப்பது நல்லது.

பழங்களிலும் அதிக அளவு சத்துக்கள் இருப்பதால், பழங்களைப் பிழிந்து சாறாக்கி குடிப்பதைவிட, அவற்றை நறுக்கி கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள நார்ச் சத்துக்கள் சிதைவடையாமல் உடலில் சேரும். பழங்களைக் கடித்துச் சாப்பிட முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் பழச் சாறாக அருந்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism