Published:Updated:

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

Published:Updated:

காக்க... காக்க >> காப்பீடு காக்க!

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் அமைய இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் இருக்குமாம் இந்த வார்டுகள். இதன் மூலம் வசூலிக்கப்படும் காப்பீடுத் தொகை, வார்டுகளைப் பராமரிக்கவும், மருத்துவமனையின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும். எஞ்சிய தொகை மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுமாம்.

நல்ல கனவுகள் நனவாகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேஷன் ஷோ  >> குழந்தைகள் ஸ்பெஷல்!

துளித் துளியாய்..

சென்னையில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது என்றால் அதில் ஆச்சரியம்  இல்லை. ஆனால், நடைபெற்றது பேஸன் ஷோ (றிணீssவீஷீஸீ sலீஷீஷ்). இதில் கலந்துகொண்ட அத்தனை பேருமே குழந்தைகள். அதுவும் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகள். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையும் ஐஸ்வர்யா டிரஸ்ட்டும் இணைந்து ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிகக் குறைந்த செலவில் இதய அறுவைச் சிகிச்சை செய்து வருகின்றன. இதுவரை 400 குழந்தைகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து இருக்கிறார்களாம். இந்த வெற்றியைக் கொண்டாடவே 'இதயங்களின் வெற்றி’ என்ற ஒயில் நடை நிகழ்ச்சி நடைபெற்றது.

'இதய’பூர்வமான வாழ்த்துக்கள்!

  டாட்டூஸ் >> டாட்டா!

துளித் துளியாய்..

ஃபேஷன் விஷயத்தில் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறோம். உடல் எங்கும் விதவிதமான ஓவியங்களைப் பச்சை குத்திக்கொள்ளும் கலாசாரம்  பரவிவருகிறது. இப்படி டாட்டூஸ் வரைந்து கொள்வதால் 'ஹெபடைடிஸ் சி’ வருகிறது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். டாட்டூஸ் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசியையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். அதேபோல, தொழில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளிடம் டாட்டூஸ் குத்திக்கொண்டாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

அங்கத்துக்கு பங்கம் வராம பாத்துக்கங்கப்பா!

இந்தியன் என்றால்    இளக்காரமா?

புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் எந்த அளவுக்கு வீரியமாக வேலை செய்கின்றன, எந்த அளவுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிய, மனிதர்களுக்கு அந்த மருந்துகளைக் கொடுத்து ஆராய்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இந்தச் சோதனைகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களால் முறைகேடான வழிகளில் நடத்தப்படுகின்றன என்பது நீண்ட காலக் குற்றச்சாட்டு. இதுபோன்ற பரிசோதனைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், 2007 முதல் 2010  வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் சுமார் 1,700 பேர் இதுபோன்ற பரிசோதனைகளுக்கு ஆளாகி உயிர் இழந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைக் கொடுத்திருக்கிறது. இதை அடுத்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையாளரிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்கும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்,  '200-க்கும் மேற்பட்ட நாடுகள் நம்முடைய நாட்டில் உற்பத்திசெய்யப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன. இங்கே இருந்து அனுப் பப்படும் மருந்துகளின் பாது காப்பை உறுதிசெய்யவே இத் தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அவை நோயாளிகளுக்கு பாதகம் இல்லாததாக - நோயாளிகள் தாமாக முன்வந்து பங்கேற்பதாக - இருக்க வேண்டும்’ என்று இந்த ஆராய்ச்சிகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசி இருக்கிறார்.

மருந்து அவசியம்தான். அதற்காக  இந்தியன் உயிர் என்றால் இளக்காரமா என்ன?

எழுத்தாளர் >> யானா குப்தா!

துளித் துளியாய்..

ஆடல், பாடல், மாடல் எனப் பன்முகம் காட்டும் யானா குப்தா இப்போது எழுத்தாளரும்கூட! உடல் எடை கூடாமல், கட்டுக்கோப்பாக வைத்திருக்க தனக்குக் கிடைத்த அறிவுரைகள், கற்றுக்கொண்ட விஷயங்கள், எடுக்கும் முயற்சிகள்... எனத் தனது சொந்த அனுபவங்களையே 'ஹவ் டு லவ் யுவர் பாடி அண்ட் கெட் தி பாடி யு லவ்’(How to love your Body and Get the Body you love)  என்ற தனது புத்தகத்துக்கு கருப்பொருள் ஆக்கி இருக்கிறார் யானா.

நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன சாப்பிடலாம்; டயட் உணவையும் எப்படி வித்தியாசமாகச் சாப்பிடுவது; வெயிட் போடாத தீனி வகைகள் என்று விதவிதமாக எழுதி இருக்கும் யானா குப்தா, 'கண்ணாடியில் முகம் பார்த்து ரசிப்பதுபோல், நம் உடலையும் ரசிக்கப் பழக வேண்டும். நமது உடலை நாம் ரசித்தால்தான் அதைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் என்று ஏராளமான டிப்ஸ்களும் கொடுத்து இருக்கிறார்.  

யானா சொன்னா சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism