Published:Updated:

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

Published:Updated:
நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

வாழ்க்கை ஒரு வகுப்பறை போன்றது. வகுப்பறையில் பாடங்கள் மாறுகின்றன; வாழ்க்கையில் பருவங்கள் மாறுகின்றன. பால்யம், இளமை, முதுமை என நாம் கடக்கும் பருவங்களில் மிக முக்கியமானது மெனோபாஸ் (Menopause)  பருவம். மனரீதியான பக்குவத்தை உண்டாக்கும் பருவம் இது.

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

மகப்பேறு மருத்துவர் உமா செல்வம், ''42 வயதில் தொடங்கி 50 வயதை நெருங்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். இது ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் வருகிறது. அதாவது இனப் பெருக்கச் சுழற்சி நிறுத்தப்படுகிறது. பூப்பெய்தியது முதல் தொடர்ந்து சரியாகச் சுழற்சியில் வரும் மாதவிடாயில் திடீரென மாற்றங்கள் ஏற்படத் தொடங்குவதுதான் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி. இந்தக் காலகட்டத்தில் அதிக உதிரப்போக்கு, திடீரென்று உதிரப்போக்கு நின்றுவிடுவது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உதிரப்போக்கு ஏற்படுவது என்று பல மாற்றங்கள் ஏற்படும். இந்த நிலையில் மாதவிடாய் எப்போது நிற்கும் என்று தெரியாது. 40 வயதுக்கு முன்பு வந்தால், 'முதிர் நிலைக்கு முன் வரும் மெனோபாஸ்’(Premature Menopause) என்கிறோம்.  தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஓர் ஆண்டுக்கும் மேலாக மாதவிடாய் வரவில்லை என்றால் அதுதான் மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்)'' என்கிறார் இயல்பாக.

நொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்!

''நமக்குதான் இந்த அவஸ்தை... ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா?'' என பல பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால், 'ஆண்களுக்கும் மெனோபாஸ் காலகட்டம் உண்டு’ என்கிறார் முதுமைச் சிறப்பு மருத்துவரான வி.எஸ்.நடராஜன்.

''ஆண்களின் மெனோபாஸை 'ஆன்ட்ரோபாஸ்’(Andropause) என்று சொல்வார்கள். உலக சுகாதார நிறுவனம் இதை ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளாமல், 'ஹைப்போகோனடிசம் (Andropause) தொல்லை’ என்று மட்டுமே அறிவித்து உள்ளது. பல்வேறு மருத்துவ நூல்களில் இது தொடர்பான பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

13 முதல் 18 வயதை நெருங்கும்போது ஆண்களும் பூப்பெய்துகின்றனர். 'டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) என்ற ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து தசைகள் திரண்டு பாலுணர்வு தோன்ற ஆரம்பிக்கும். 30 வயதில் இந்த ஹார்மோன் சுரப்பு உடலில் அதிகரித்து, அதன் உச்சத்தைத் தொட்டுவிடும். அதன் பிறகு 10 வருடங்களுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் இந்த ஹார்மோன் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். 50 வயதில் இன்னும் அதிகமாகக் குறைந்துவிடுகிறது. எனவே, பொதுவாக ஆண்களுக்கு மெனோபாஸ் 50 வயதில் இருந்து ஆரம்பமாகிறது.

50 வயதை அடையும் ஆண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையும்போது உடலிலும் மனதிலும் சில மாற்றங்கள் தோன்றும். அதீத உடல் சோர்வு, ஞாபக சக்தி குறைதல், தசைகளில் தளர்வு, தசையின் அளவு குறைதல், தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை, குறைவான விந்து, தாமதமாக விந்து வெளிப்படுதல், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, மனச்சோர்வு, படபடப்பு, தோலின் பளபளப்புத் தன்மை குறைந்து வறட்சி ஏற்படுதல், எலும்பு பலவீனமடைதல் போன்றவை நேரலாம்.

எல்லா ஆண்களுக்கும் இந்தத் தொல்லை ஏற்படும் என்று சொல்ல முடியாது. வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கத்தைப் பொறுத்து பிரச்னைகள் இருக்கும். ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாமே சந்தடி இல்லாமல் மெள்ள நிகழும் என்பதால் எளிதில் கண்டறிவதும் கடினம்.

ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்து, ரத்தத்தில் உள்ள 'டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்’ அளவு குறைந்து, ஆன்ட்ரோபாஸ் பிரச்னைக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டால், டாக்டர்கள் டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையைக்  கொடுப்பார்கள். இதனால், மனம் மற்றும் உடல் அளவில் நல்ல மாற்றம் இருக்கும். ஆனால், இந்த ஹார்மோனல் சிகிச்சையால் பக்க விளைவுகளும் ஏற்படலாம். கல்லீரல் நோய், இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும்  விந்துச் சுரப்பியில் பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்தச் சிகிச்சை முறையை மருத்துவர்கள் கையாள்வது இல்லை.

முடிந்த அளவுக்கு மன உளைச்சலைக் குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முயல்வதுதான் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழி. நல்ல தூக்கம் அவசியம். உடல் எடை அதிகம் இருந்தால், குறைக்க வேண்டும். குறைவான கொழுப்பு, அதிகமான நார்ச் சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மதுவைத் தவிர்க்க வேண்டும். காபி, டீயைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். திராட்சைப் பழங்களையும் தவிர்க்கலாம்; இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை மேலும் குறைத்துவிடக் கூடியது!'' என அறிவுரை வழங்குகிறார் டாக்டர் நடராஜன்.

மெனோபாஸின்போது கணவனும் ஆன்ட்ரோபாஸின்போது மனைவியும் ஒருவரை ஒருவர் அனுசரித்து அக்கறையாகக் கவனித்துக்கொண்டாலே... பிரச்னைகள் மறந்து, உடலும் உள்ளமும் சிறகடித்துப் பறக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism