Published:Updated:

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

Published:Updated:
நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!
##~##

அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல் வால், ஹிரண்யா எனப்படும் குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்கு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஒரு வாரம் வரை தங்கி இருக்க வேண்டிய நிலை இருந்த ஒரு காலம் உண்டு. ஏன், இன்னமும்கூட பல மருத்துவமனைகளில் இதுதான் நிலை. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சை செய்தால், நோயாளி சகஜ நிலைக்குத் திரும்புவதற்கே வாரக்கணக்கில் ஆகும். அறுவைசிகிச்சையின்போது ரத்த இழப்பு, சிகிச்சைக்குப் பிறகு வலி மற்றும் தழும்பு போன்ற இதர பிரச்னைகளும் தொடரும். மேலும், நோய்த்தொற்றுக்கான வாய்ப்பும் அதிகம். ஆனால், வளர்ந்துவரும் நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தால், இந்த மாதிரி பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.  அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளும் 24 மணி நேரத்துக்குள் வீடு திரும்பும் அளவுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம். பணச் செலவும் குறைவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயம்புத்தூர் 'கேட் வே கிளினிக்’கைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல் நோய் - லேப்ராஸ்கோபி அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.செந்தில்குமார் இது குறித்து விளக்குகிறார்...

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

''மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில் உடலில் செலுத்தப்படும் மயக்க மருந்துகள் முதற்கொண்டு மருத்துவ உபகரணங்கள் வரையிலும் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட ஒரு சில மணி நேரங்களிலேயே நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிடும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது.

கண் நல அறுவைச்சிகிச்சைகள் நவீனத் தொழில்நுட்பத்தால் மிகச் சுலபமாக செய்யப்படுவதால்,

நம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்!

அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே நோயாளிகள் வீடு திரும்பிவிடுகின்றனர். இதனை 'ஆஃபீஸ் சர்ஜரி’ என்போம். அதே போல, காலையில் அட்மிட் ஆகி மாலையில் வீடு திரும்புவதை 'ஏம்புலேட்டரி சர்ஜரி’ என்போம். பயாப்சி போன்ற சில பரிசோதனைகளும் இந்த முறையில்தான் செய்யப்படுகின்றன. 24 மணி நேரத்துக்கும் குறைவாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை 'டே கேர் சர்ஜரி’ என்கிறோம்.

அமெரிக்காவில், 70 சதவீதத்துக்கு மேலான சிகிச்சைகள் 'டே கேர்’ அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அங்கு மருந்துவச் செலவுகள் அதிகம் என்பதால், 'டே கேர் சிகிச்சை’ பிரபலமாக உள்ளது. எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்ற மருத்துவ உபகரண முன்னேற்றத்தாலும் பல சிகிச்சை முறைகள் எளிமையான விஷயமாகிவிட்டன. வயிறு - குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் 'டே கேர் அறுவைச்சிகிச்சை’ அதிக அளவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதுகுத் தண்டுவட டிஸ்க் அறுவைச்சிகிச்சைகள் உள்பட கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் 'டே கேர்’ முறையில் செய்யப்படுகின்றன. குடல் வால், குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள், மூல நோய் மற்றும் கர்ப்பப் பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு 'டே கேர் சர்ஜரி’ வரப்பிரசாதம்!

இதற்கு முக்கியக் காரணம் அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும் நவீன கருவிகளின் வருகையும்தான். ஒரு காலத்தில் அறுவைச்சிகிச்சையின்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலை மாறி, இன்று மிகவும் பாதுகாப்பான, கட்டுப்பாடான அளவில் மட்டுமே நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. வலியை மறக்க, நினைவாற்றலைத் தற்காலிகமாக செயல் இழக்கச் செய்ய, தசைத் தளர்வுக்கு என்று புதுப்புது மருந்துகள் வந்துவிட்டன. மயக்கம் தெளிவிக்க மருந்து கொடுத்த சில நிமிடங்களிலேயே நோயாளி நினைவு திரும்பி, சகஜ நிலைக்கு வந்துவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 'டே கேர்’ சிகிச்சையில் வலி என்பது மிக மிகக் குறைவு.''

 வயிற்றுப் பகுதியில் ஓப்பன் சர்ஜரிக்கு மாற்றாக வந்ததுதான் லேப்ராஸ்கோபி சிகிச்சை. இந்த லேப்ராஸ்கோபியை மேம்படுத்தும் வகையிலும், நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கும் நோக்கத்திலும் இப்போது சில உபகரணங்கள் வந்துள்ளன.

ஹார்மோனிக் ஸ்கேல்பல்

(Harmonic Scalpel)

கத்தி - கத்தரிக்கு மாற்றாக வந்திருப்பதுதான் இந்த ஹார்மோனிக் ஸ்கேல்பல். இதைக்கொண்டு ஒரு ரத்தக் குழாயை வெட்டினாலும் கொஞ்சம்கூட ரத்தம் வீணாகாது.

வெசல் சீலிங் டிவைஸ்

வெசல் சீலிங் டிவைஸ் என்பதைக் கொண்டு 7 மில்லி மீட்டர் டயா மீட்டர் அளவு உள்ள ரத்தக் குழாயை சீல் செய்து ரத்தம் சேதாரம் இன்றி அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.  

மார்சலேட்டர்

கர்ப்பப் பையில் உருவாகும் ஃபைப்ராய்ட் கட்டிகளை மார்சலேட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி லேப்ராஸ்கோபி கருவி வழியாக வெளியே எடுத்துவிட முடியும்.

  ஸ்டேப்ளர்

மலக்குடலின் கடைசி 2 செ.மீ. நீளம் அதிக வலி உணர்வு கொண்ட பகுதி ஆகும். தற்போது செய்யப்படும் மூலநோய் சிகிச்சைகள் அனைத்தும் இந்தப் பகுதியிலேயே செய்யப்படுவதால் அறுவைச் சிகிச்சை முடிந்தபின்பு நோயாளிக்கு மிகுந்த வலி உண்டாகும்.  ஆசனவாயில் சுருக்கம்கூட உண்டாக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்டேப்ளர் அறுவைச் சிகிச்சையானது ஆசனவாயில் இருந்து 2 செ.மீ. தாண்டி மியூகோசா எனப்படும் பகுதியில் சிகிச்சை மேற்கொள்வதால், நோயாளிக்கு சுத்தமாக வலி இருக்காது. இந்த மியூகோசா பகுதியில் கத்தி வைத்து வெட்டினாலும் வலி இருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism