Published:Updated:

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

ற்பனையைவிட நிஜம் பல நேரங்களில் சுவாரஸ்யமானது; சில நேரங்களில் பயங்கரமானதும்கூட. 

80 வயதான அந்த முதியவருக்கு ஞாபக மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டே 'எங்கே என் மூக்குக் கண்ணாடி?’ என்று தேடுவதில் தொடங்கி... வந்த பாதையை மறந்து திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து ஒரு கட்டத்தில் 'தான் யார்?’ என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.

திடீரென ஒரு நாள், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மறுபடி வீடு திரும்பவில்லை. பல நாட்களுக்குப் பிறகு, அவரைக் கண்டுபிடித்தார்கள். முகத்தையே மறைத்துவிட்ட தாடி, மெல்லிசான தேகம், ஒட்டிப்போன வயிறு என்று ஒட்டுமொத்தமாக உருமாறிப்போயிருந்தவரை அந்தக் குடும்பமே சென்று அழைத்தது. ஆனல், அவருக்கு ஒருவரைக்கூட ஞாபகத்தில் இல்லை.

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?

பைக் சாவியையோ, செல்போனையோ எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவது இயல்பானதுதான். ஆனால், மறதி என்பது இத்தனை ஆபத்தான நோயா?

நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் இதுபற்றி விளக்குகிறார்.

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?

''வைத்த இடம் தெரியாமல் தேடுவது, புதிதாகச் சென்ற பாதையில் குழப்பம் அடைவது போன்றவை இயல்புதான். இவை கவனச் சிதறலால் வருபவை. ஆனால், இந்தப் பெரியவருக்கு ஏற்பட்டிருந்தது அல்ஸைமர் எனும் ஞாபக மறதி நோய் (கிறீக்ஷ்லீமீவீனீமீக்ஷீ’s பீவீsமீணீsமீ). வைத்த பொருளைத் தேடுவது சாதாரண மறதி. அல்ஸைமர் பாதிப்பில் காணாமல் போன பொருள் பற்றிய பிரக்ஞையே இருக்காது. அந்தப் பொருள் கையில் இருந்தாலும் அதை என்ன செய்வது என்று தெரியாது.

வயது ஆக ஆக மூளையில் உள்ள நியூரான்கள் அழிந்துபோய் நினைவிழப்பு ஏற்படும். இந்த நினைவிழப்பின் தீவிரமான ஒரு கட்டம்தான் அல்ஸைமர்.''

அல்ஸைமர் நோயின் அறிகுறிகள் என்ன?

''அல்ஸைமர் பாதிப்பில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படும். எந்தத் தொழிலில் இருக்கிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு மழுங்கிப்போகும். உதாரணத்துக்கு, ஒரு மருத்துவருக்கு இந்தப் பிரச்னை வந்தால், எந்த மருந்தை எழுதுவது என்று தெரியாது. ஒரு நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது; சிகிச்சை அளிப்பதில் குழப்பம் வரும். ஆனால், இது வெளியில் உடனே தெரியாது. இரண்டாவது கட்டத்தில் பாதைகள், முகங்கள், பெயர்கள் தெரியாமல் போகும். நிகழ்காலம் நினைவில் இருக்காது. ஆனால், சின்ன வயதில் நடந்த சம்பவங்கள் ஞாபகத்தில் இருக்கும். மூன்றாவது கட்டத்தில், ஞாபகங்கள் கட்டோடு அழிந்துபோய்விடும். 50 வருடங்கள் குடும்பம் நடத்திய வாழ்க்கைத் துணையையே யார் என்று கேட்பார்கள். வாயில் உணவைப் போட்டுக்கொண்டால், விழுங்க வேண்டும் என்பதுகூட தெரியாது. அப்படியே வைத்திருந்துவிட்டுத் துப்பிவிடுவார்கள். நடப்பதில் தள்ளாட்டம் வரும், படுத்தப் படுக்கையாகிவிடுவார்கள். தான் யார் என்பதையே முழுவதுமாக மறந்துவிடுவார்கள்.''

அல்ஸைமர் வர என்ன காரணம்? யாருக்கு வரும்?

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?

''பொதுவாக, வாஸ்குலர் டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி-12 குறைபாடு உள்ளவர்களுக்கும் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் மறதிநோய் வர சாத்தியங்கள் அதிகம். ஆனால், அல்ஸைமர் வருவதற்கான பிரத்யேகமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வயதாவதை ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம். 60 முதல் 70 வயதில் உள்ளவர்களுக்கு, ஐம்பதில் ஒருவருக்கு அல்ஸைமர் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. 80 வயதுக்கு மேல் ஐந்தில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு வரலாம்.''

இதைத் தடுக்க என்ன வழிகள் இருக்கின்றன?

''வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நினைவாற்றலில் தடுமாறினால், அதை மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நல்லது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளிப்படையாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நோய் முற்றிய பிறகுதான் வெளியில் தெரியும். அதனால் மது, புகையிலை போன்றவற்றைத் தவிர்ப்பதும், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகியவை வராத அளவுக்கு உடல் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்வதும் அல்ஸைமர் வாய்ப்புகளைக் குறைக்கும்.''

பாதிக்கப்பட்டவர்கள் என்ன சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

''பாதிக்கப்பட்டவர்களின் ஐம்புலன்களைத் தூண்டும் வகையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மசாஜ், நினைவாற்றல் பயிற்சிகள் போன்றவைகளை மேற்கொள்ள வைப்பது பாதிப்பை ஓரளவு குறைக்க உதவும். எல்லாவற்றையும்விட  அல்ஸைமர் நோயாளிகளை  அக்கறையோடு பார்த்துக்கொள்வதுதான் முக்கிய சிகிச்சை!''

நினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு