Published:Updated:

பயமே விஷம் ஆகலாமா?

பயமே விஷம் ஆகலாமா?

பயமே விஷம் ஆகலாமா?

பயமே விஷம் ஆகலாமா?

Published:Updated:
##~##

'ஒரு விஷயம் தெரியுமா? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம். 

ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல் உதவி அளிக்கப்படாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. பாம்பு கடித்தவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய முதல் உதவிகள்பற்றி பொது மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

பயமே விஷம் ஆகலாமா?

''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் டாக்டர்?''

''கடிபட்ட இடத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம், ரத்தம் வடிதல், எரிச்சல், பேதியாகுதல், அதிக

பயமே விஷம் ஆகலாமா?

அளவில் வியர்ப்பது, கண் பார்வை மங்குவது, கை - கால்கள் மரத்துப்போவது, தாகம், வாந்தி, காய்ச்சல், தசைகள் கட்டுப்பாட்டை இழப்பது, வலிப்பு, நாடித் துடிப்பு தாறுமாறாக எகிறுவது, சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.''

''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்குச் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?'

''கடிபட்டவரைச் சுற்றிக் கூட்டம் போட்டுக் காற்றோட்டத்தைத் தடுக்கக் கூடாது. கடிபட்டவர் சுய நினைவோடு இருக்கும்பட்சத்தில், அவருக்கு ஆறுதல் மற்றும் தைரியம் அளிக்கும் வகையில் பேச்சு கொடுக்கலாம்.

பாம்பு கடித்த இடத்தில் அதனுடைய பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்தப் பகுதியைச் சுத்தமான தண்ணீரினால் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும். காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணியைக்கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள் போன்ற பொருட்களைப் பூசக் கூடாது. கடிபட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதைவிடுத்து, சினிமாக்களில் காட்டப்படுவதைப் போலக் கடிவாயில் வாயை வைத்து விஷத்தை உறியக்கூடாது. கூரிய ஆயுதங்கள் மூலம் கடிபட்ட இடத்தைக் கீறவும் கூடாது. ஏனென்றால், காயத்தை வைத்துதான் எந்த வகை பாம்பு கடித்துள்ளது, கடி ஆழமாக இருக்கிறதா, கீறலா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்'' என்று விவரித்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்.

''பொதுவாக காடுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் ட்ரெக்கிங் செல்பவர்களும் பாம்புக் கடிக்கு அதிகமாக ஆளாகிறார்கள். பாம்புக் கடியைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது எப்படி?' என்று தமிழ்நாடு வனப் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பெருமாளிடம் கேட்டோம்.

''ட்ரெக்கிங் போகும் சமயத்தில், குழிகளுக்குள்ளோ மரப் பொந்துகளுக்குள்ளோ கை கால்களை விடக்

பயமே விஷம் ஆகலாமா?

கூடாது. உயரமான புற்களுக்கிடையில் நடப்பதைத் தவிர்க்கலாம். பாறைகளுக்கிடையிலும் பாம்புகள் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. இரவில் நடமாடும்போது கையில் டார்ச் விளக்குடன் செல்வது நல்லது' என்றார்.

நாட்டு வைத்தியர்கள், பாம்புக்கடிக்கு முதல் உதவியாகச் 'சர்ப்ப கந்தி’ என்னும் மூலிகையின் வேரைப் பொடி செய்து உட்கொள்ளக் கொடுப்பார்கள். ''பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆழியாறு வன மரபியல் பூங்காவில், இந்தச் செடிகள் விலைக்குக் கிடைக்கின்றன. விலை 3 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்குள்தான். வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். சர்ப்ப கந்திச் செடியின் வேரை வால்மிளகுடன் சேர்த்துப் பொடி செய்து கடிவாயின் மேல் தடவுவதோடு, உட்கொள்ளவும் கொடுக்கலாம்'' என்கிறார் மூலிகை வளர்ப்பில் அனுபவம் மிக்கவரான ஷாஜஹான்.

வீடு மற்றும் தோட்டங்களில் இருக்கும் பல விதமான பாம்புகளையும் பிடித்து வனப் பகுதியில் விடுவதில், ஊட்டியைச் சேர்ந்த சாதிக் வல்லுநர். 'ஸ்னேக் சாதிக்’ என்றால், ஊட்டியில் எல்லோருக்கும் தெரியும். அவருடைய அனுபவம் இது:

''நான் பாம்புகளைப் பிடிக்கப் போகும்போது ஹோமியோபதி மருந்து ஒன்றையும் கையில் வைத்திருப்பேன். யாரையாவது பாம்பு கடித்திருந்தால், கடித்த இடத்தில் இந்த மருந்தின் சில துளிகளை வைப்பதோடு, அரை டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டுக்கள் இந்த மருந்தைவிட்டு மணிக்கு ஒரு முறை குடிக்கவும் கொடுப்பேன். விஷத்தின் பாதிப்புக்குச் செய்யப்படும் இந்த முதலுதவி மிகவும் பலன் தரும். அனுபவம் இல்லாமல் பாம்பு பிடிக்கப் போகாதீர்கள். பாம்பிடம் இருந்து குறைந்தது 15 அடி தூரத்தில் இருங்கள். சாக்குப் பைக்குள் இருந்தபடியேகூடச் சில பாம்புகள் கடிக்கும் என்பதை மறக்காதீர்கள்'' என எச்சரிக்கிறார் சாதிக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism