Published:Updated:

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

துளித் துளியாய்..

Published:Updated:
துளித் துளியாய்..

குறையில்லா பிரசவம் வேண்டும்!

'உலக அளவில், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒன்று இந்தியாவில் பிறக்கிறது’ என்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு இதழான 'லான்செட்’. 2010-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 35.19 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளதாக புள்ளிவிபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியானக் குழந்தைகள் மரணத்துக்கு இந்தக் குறைப்பிரசவமும் மிகப் பெரிய காரணியாக உள்ளது. 'மிகச் சிறிய வயதில் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு, போதுமான ஊட்டச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளாமை, உடல் நலம் பற்றி கர்ப்பிணிகளுக்குப் போதிய விழிப்பு உணர்வு இன்மை...’ போன்றவையே இதற்கானக் காரணம் என்றும் எச்சரித்துள்ளது லான்செட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

துளித் துளியாய்..

உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது ஆபத்து. 'அஜினோமோட்டோவில் கலந்திருக்கும் மோனோசோடியம்குளுட்டோமேட் (MSG)என்பது ஒற்றைத் தலைவலி, சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை. அதாவது,  உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது. இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம். ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.

அழகு சாதன ஆபத்து!

துளித் துளியாய்..

புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் அழகு சாதனங்களை வாங்கிக் குவிப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!

'பாதரசம் கலந்த சோப்பு, க்ரீம், ஐ லைனர், மஸ்கரா, க்ளென்சிங்’ போன்ற அழகு சாதனங்களால் சிறுநீரகம் பழுதடைவதோடு, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் வகைகளே 61 சதவிகிதம். பாதரசம் சருமத்தில் உள்ள மெலனின் என்கிற நிறமியுடன் சேர்ந்து சருமத்தை மேலும் வெள்ளையாக்க உதவுகிறது. தோல் பளிச்சென ஆனாலும்,  நாளடைவில், சருமம் பாதிக்கப்படும். அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, க்விக் சில்வர், பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பதுபற்றிய எந்த விவரமும் லேபிளில் இருப்பது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

'துப்பாக்கி’த் துள்ளல்!

துளித் துளியாய்..

நடிகர் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி’ படப்பிடிப்பில், உயரமான இடத்தில் இருந்து கதாநாயகன் குதிப்பதுபோன்ற ஒரு காட்சி. காட்சியமைப்பு தத்ரூபமாக வர வேண்டும் என்ற ஆர்வத்தில் 'டூப்’ போடாமல், தானே ரிஸ்க் எடுத்துக் குதித்தார் விஜய். ஆனால், தரையில் கால் பதிக்கும்போது தடுமாறி, முட்டியில் பலத்த அடிபடவே.... தற்போது லண்டன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் விஜய். ''சாதாரண அடிதான்... ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை... கூடிய சீக்கிரத்தில் நலம் பெற்று, படப்பிடிப்பை முடித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறார். முட்டியைப் பாதுகாக்கக்கூடிய 'நீ பேட்’ (Knee Pad) அணிந்திருந்தால் இந்த விபத்தில் இருந்து தப்பித்திருக்க முடியும்'' என்கிறார் படத்தின் இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ்.

விஞ்ஞான விஸ்வரூபம்!

துளித் துளியாய்..

விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்கவே முடியாத நிலையில் இருந்தவர் சுந்தர். மூளை பாதிப்பினால் பேசவும் நடக்கவும் முடியாமல் இருந்த களஞ்சியன் என்ற சிறுவனுக்கு வலிப்பு மற்றும் வாயில் இருந்து எச்சில் வடிவது போன்ற பாதிப்புகளும் இருந்தன. இவர்கள் இருவரையும் ஸ்டெம்செல் சிகிச்சை முறை மூலம் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீட்டுள்ளனர் லக்ஷா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள். சுந்தர், களஞ்சியன் இருவருடைய இடுப்பு எலும்பில் இருந்தும் எலும்பு மஜ்ஜையை எடுத்து ஸ்மார்ட்பிரெப் அல்ட்ராசென்ட்ரிஃப்யூஜ் (SmartPReP Ultracentrifuge) என்ற கருவியைப் பயன்படுத்தி ஸ்டெம்செல்கள் தயார் செய்யப்பட்டன. இதை முதுகுத்தண்டு வழியாக அவர்களுக்குச் செலுத்தினர். ''தற்போது சுந்தரால் நன்றாக நடக்க முடிகிறது; களஞ்சியனுக்கு வலிப்பு நோயும் எச்சில் வடிவதும் குணமாகி, நல்ல முன்னேற்றம் தெரிகிறது'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism