Published:Updated:

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

Published:Updated:
முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

என். ராஜன், கோயம்புத்தூர்.

''எனக்கு வயது 28. கடந்த பல வருடங்களாக முகத்தில் பருக்கள் வந்து, அதனால் வடுக்கள் ஏற்பட்டு, முகம் முழுவதும் சிறு சிறு குழிகளும் தழும்புகளுமாக உள்ளன. இதனால் முகமே விகாரமாக மாறிவிட்டது. இதை லேசர் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியுமா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?
முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர்.

''பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் முகப்பரு வருவது இயல்பான விஷயம். ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்களினாலும் பரம்பரை மரபணுக்களாலும் முகப்பருக்கள் தோன்றும். எண்ணெய் கலந்த களிம்பு வகைகளைப் பயன்படுத்துவதாலும், ஆயில் மசாஜ் செய்வதும்கூட முகப்பருக்கள் வருவதற்கான ஒரு காரணம். பால் கலந்த எண்ணெய் உணவுகளை அதிகமாக உண்பதாலும் சிலருக்கு முகப்பருக்கள் வரும். எனவே முடிந்த அளவுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முகத்தில் தோன்றும் பருக்களை சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது முற்றிப்போய் வடுக்களும் குழிகளும் ஏற்படும். முகப்பருக்களைப் போக்கும் மருந்துகளைச் சரியான விகிதத்தில் பயன்படுத்தி பருக்களின் வீரியத்தைக் குறைக்கலாம். வடுக்கள், குழிகள் மற்றும் தழும்புகளை லேசர், மைக்ரோ தெர்மோ ஆபரேஷன், தெர்மோ ரோலர் ஆபரேஷன் போன்ற சிகிச்சைகள் மூலம் ஓரளவுக்கு மட்டுமே சரிசெய்ய முடியும். மாத்திரை, களிம்பு உள்ளிட்ட மருந்துகளை சுயமாய் எடுத்துக்கொண்டால், தோலில் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே, தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகி, முகப்பரு எதனால் வந்தது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறுவதே சிறந்த வழி.''

வே. குப்புசாமி, மதுரை.

'' 'மாடிப்படிகளில் அடிக்கடி ஏறி இறங்கினால், மூட்டு வலியும் மூட்டு சவ்வும் விரைவில் தேய்ந்துவிடும்’ என்கிறார்கள் சிலர். ஆனால், 'படிகளில் ஏறி இறங்குவது நல்ல பயிற்சி’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் எது சரி? 48 வயதான நான் தினமும் நான்கு மாடிகள் ஏறி இறங்குகிறேன்? இது நல்லதா, கெட்டதா?''

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

டாக்டர் பார்த்தசாரதி, எலும்பு சிகிச்சை நிபுணர்.

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

''மாடிப்படிகளில் ஏறி இறங்குவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய பயிற்சிதான். ஆனால், 40 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வயதின் காரணமாக மூட்டு எலும்புகள் தேய்மானத்துக்கு உள்ளாகும். லேசான தேய்மானம் இருப்பினும் அவ்வப்போது ஏறி இறங்குவது நல்லது. இது உடற்பயிற்சி மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகளையும் நலமாக வைக்கும். ஆனால், மாடிப்படிகளில் ஏறி இறங்குவதையே ஒரு உடற்பயிற்சியாக செய்யக் கூடாது. அதேபோல 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும், படிக்கட்டுகள் ஏறி பழக்கமே இல்லாதவர்கள் திடீரென்று மாடிப்படிகளில் பல முறை ஏறி இறங்கினால், 'அக்யூட்டு’ மூட்டுவலியானது ஏற்படும். மூட்டுக்குப் போதிய அசைவு இல்லாமல் போனாலும் மூட்டு வலி வரும். சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூட்டு வலி வராமல் தடுக்கலாம். வயதானவர்களுக்கு மூட்டு எலும்பு தேய்மானம் ஏற்படுவது சகஜம்தான். அவர்கள், ஐஸ் கட்டிகளைத் துணியில் சுற்றி வலி உள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்கலாம். வலி அதிகமாக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.''

ம.நாகவள்ளி, உடுமலைப்பேட்டை.

''மியூசிக் தெரபி, குழந்தையின் அறிவுத் திறனை நேர்த்தியாக்க உதவும் என்கிறார்களே... உண்மையா?''

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

மைதிலி, உளவியல் மற்றும் மியூசிக் தெரபிஸ்ட்

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

''பொதுவாக இசையைக் கேட்டு ரசிக்கும் திறனைக் கருவில் இருக்கும் குழந்தை 100-வது நாளில் இருந்தே பெற்றுவிடுகிறது. எனவே, தாய் கருவுற்ற 19-வது வாரத்தில் இருந்து மியூசிக் தெரபியை ஆரம்பிக்கலாம். இந்த தெரபி முறையில் மொத்தம் மூன்று அமர்வுகள் இருக்கின்றன. பின்பு வீட்டில் இருந்தே தாய் இசை கேட்கும்படியாக குறுந்தகடுகள் அளிக்கப்படும். அம்மா இசை கேட்கும்போது, அம்மாவின் உடலின் அதிர்வு அலைகளுக்கு ஏற்ப கருவில் இருக்கும் குழந்தை அசையும். குழந்தை உருவான 19-வது வாரத்தில் இருந்தே அதனுடைய 'நரம்பியல் வலையமைப்பு’(Neural network) சிறந்த முறையில் நிலைப்பாடு தன்மை அடைய இசை உதவி செய்யும். இதனால், எளிதில் கிரகித்துக்கொள்ளும் அறிவுத் திறன், எண் மற்றும் எழுத்துக்களைக் கையாளும் திறன், மொழித் திறன், நுண்கலை ஆற்றல், திட்டமிட்டு வேலை செய்யும் திறன் ஆகியவையும் மேம்படும். மியூசிக் தெரபி சுகப்பிரசவத்துக்கு உதவியாக இருப்பதோடு, குறைப்பிரசவம் நிகழ்வதையும் குறைக்கும்.'

ராதா, குரோம்பேட்டை.

''மூன்று மாதங்களுக்கு முன்பு கை விரலில் நகச்சுத்தி வந்து, 15 நாட்கள் மிகவும் வேதனைப்பட்டேன். நகச்சுத்தி வந்த விரலில் எலுமிச்சம்பழத்தைத் தொப்பிபோல் வைத்துக்கொண்டே அன்றாட வேலைகளைச் சமாளித்தேன். தற்போது சுண்டு விரலிலும் நகச்சுத்தி வந்திருக்கிறது. நகச்சுத்தி ஏன் வருகிறது? இதற்கான சிகிச்சை முறை என்ன?''

டாக்டர் விஜயகுமார், தோல் நோய் சிகிச்சை நிபுணர்

முகப்பருவுக்கு லேசர் சிகிச்சையா?

''நகச்சுத்தி என்பது பாக்டீரியா (Bacteria), பூஞ்சை (Fungal)  தொற்றால் வருகிறது. நகத்தின் வேர் பகுதிக்கும் நகத்தின் மடிப்புக்கும் இடையே வீக்கம் ஏற்பட்டு சீழ் வந்து கிருமித்தொற்றும் ஏற்படும். இதனால், விரலில் வீக்கத்துடன் கூடிய வலி, சீழ் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

நகத்தை அசுத்தமாக வைத்திருத்தல், தரம் இல்லாத உபகரணங்களைப் பயன்படுத்தி மேனிக்யூர் செய்வது, நகத்தில் அடிபடுதல், அதிக நேரம் ஈரத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால், நகச் சுத்தி வருகிறது. துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது எனப் பெண்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகளிலேயே அதிக நேரம் இருப்பதால், நகச்சுத்திப் பிரச்னை இவர்களுக்கு அதிகமாக வருகிறது. நல்ல சுகாதாரமான முறையில் நகத்தைப் பராமரித்தால் நகச்சுத்தி வராது.

சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் ஒருவிரலில் இருந்து மற்றொரு விரலுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகமாகும்.  நகச்சுத்தி வந்தால், அது எதனால் வந்தது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஆன்டி ஃபங்கல் (Anti Fungal)  மற்றும் ஆன்டி பாக்டீரியல் (Anti Bacterial) போன்ற எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம். அடிக்கடி நகச்சுத்திப் பிரச்னை வந்தால், தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது அல்லது ரப்பர் கையுறையை அணிந்துகொண்டு வேலை செய்யலாம்.

பொதுவாக, பச்சைக் காய்கறிகள், கீரைகள், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நோய்த் தொற்றுக்கான வாய்ப்பும் குறையும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism