Published:Updated:

முடிசூட நீங்கள் தயாரா?

முடிசூட நீங்கள் தயாரா?

முடிசூட நீங்கள் தயாரா?

முடிசூட நீங்கள் தயாரா?

Published:Updated:
##~##

முடி என்ற சொல்லுக்கு கிரீடம், கேசம் என்று இரு அர்த்தங்கள். ஒரு மன்னனுக்கு கிரீடம் எந்த அளவு அழகு சேர்க்குமோ, அந்த அளவுக்கு ஒரு மனிதனுக்கு அழகைக் கொடுப்பது கேசம். ஆனால், நம்மில் பலருக்கு அதில்தான் பிரச்னையே! 

'முடி கொட்டுதே’, 'வழுக்கை விழுதே’, 'பூச்சிவெட்டு வந்துடுச்சே’ எனக் கேசத்தை நினைத்து சோகத்துக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சில காலங்களுக்கு முன்பு வரை, ஆண்களுக்கு மட்டும்தான் வழுக்கைப் பிரச்னை இருந்தது. அதுவும் 50 வயதைக் கடந்த பிறகுதான் வரும். ஆனால், இன்றோ 25 வயதைக் கடப்பதற்குள் வழுக்கை விழுந்துவிடுகிறது. தற்போது கணிசமானப் பெண்களுக்கும் வழுக்கை விழுகிறது'' என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறார் தோல் நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரத்னவேல்.  

''பொதுவாக மனிதனுக்கு உடல் முழுவதும் 5 லட்சம் முடிகள் இருக்கும். தலையில் மட்டும் ஒரு

முடிசூட நீங்கள் தயாரா?

லட்சம் முடிகள் இருக்கும். முன்னந்தலையில் மட்டும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான முடிகள் இருக்கும். 70 சதவிகித முடிகள் வளர்ந்துகொண்டே இருக்கும். 20 முதல் 25 சதவிகித முடிகள் தூங்கிக்கொண்டே இருக்கும். ஐந்து சதவிகித முடிகள்தான் உதிரும். இந்த ஐந்து சதவிகித முடிகளில் தினமும் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் முடி உதிர்ந்தே ஆக வேண்டும். இப்படி முடி உதிர்வதும் முளைப்பதும் இயல்பானது. விலங்குகளில் கரடிக்கு மட்டும் முடி வளர்ந்துகொண்டே இருக்கும். உதிராது. மனிதனுக்கு

முடிசூட நீங்கள் தயாரா?

முடியே உதிராமல் போனால் கரடியாக வேண்டியதுதான். ஆனால், 70 சதவிகித முடிக்கு மேல் உதிர்ந்து, முடி முளைக்காமல் போனால் அது பிரச்னைதான்.

பெரும்பாலும் மூன்று வகைகளில் முடி உதிரும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடி முழுமையாகக் கொட்டுவது (பூச்சிவெட்டு), பரவலாக முடி கொட்டுவது, பின்னந்தலையிலோ, முன்னந்தலையிலோ தொடங்கி முடி கொட்டுவது (வழுக்கை).

பூச்சிவெட்டு ஒரு தற்காலிகப் பிரச்னை. இரண்டு காரணங்களால் பூச்சிவெட்டு வருகிறது. 1. மன அழுத்தம். தலையே சூடாகும் அளவுக்கு அதீத சிந்தனை ஆட்கொள்ளும்போது உடலுக்குள் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு பூச்சிவெட்டு வரலாம். 2. நம் தலை முடியின் வேர்ப் பகுதியில் உள்ள அணுக்களுக்கும் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. இதற்கு ஸ்டீராய்டு மருந்தை தலையில் தடவுவதன் மூலம் ஐந்தே மாதங்களில் பூச்சிவெட்டை மறையச் செய்து, நன்றாக முடி முளைக்கவைத்துவிடலாம்.

முடிசூட நீங்கள் தயாரா?
முடிசூட நீங்கள் தயாரா?

பரவலாக முடி கொட்டுவதற்கும் உதிர்ந்த முடி முளைக்காமல் போவதற்கும் பல காரணங்கள் உண்டு. ரத்த சோகை, ஹார்மோன் கோளாறுகள், புரதம், கால்சியம் போன்ற சத்துக் குறைபாடுகள், பொடுகு, தலையில் வரும் புண், பரம்பரையாக வரக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மருந்துகள்... இப்படி. இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, பேரீச்சம்பழம், கீரை, பருப்பு வகைகள், கறிவேப்பிலை போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, அடிக்கடி தலைக்கு குளித்து முடியைச் சுத்தமாக வைத்திருப்பது, பொடுகு, பேன் வராமல் முடியைப் பாதுகாத்துக்கொள்வது என வாழ்க்கை முறையிலும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வழுக்கை என்பது தனி வகை. மனிதனுக்கு ஆண்மையை உண்டுபண்ணும் ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகும்போது அது உடைந்து உபப் பொருள் உருவாக ஆரம்பிக்கும். இந்த உபப் பொருள் தலையில் உள்ள முடியின் வேர்ப் பகுதியை அரித்து ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிடும். ஆண்கள் மற்றும் ஒருசில பெண்களுக்கும் வழுக்கை வருவதற்கான முக்கியக் காரணம் இதுதான். ஆண்களுக்கு வரும் வழுக்கையை ஆன்ட்ரோ ஜெனடிக் அலோபேஷியா (Andro Genetic Alobecia) என்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருந்துகள் மற்றும் பிரத்யேகத் தைலங்கள் மூலம் இதைச் சரிசெய்துவிடலாம். ஆனால், பலரும் நினைப்பதுபோல, வழுக்கை ஒரு பரம்பரை வியாதி அல்ல'' என்ற ரத்னவேல், ''பொதுவாகவே நிம்மதியான மனநிலை, நல்ல உறக்கம், உடல் சூட்டைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது ஆகியவை முடி வளர்ச்சிக்கு முக்கியம்'' என்கிறார்.

''சரி, வழுக்கைத் தலையில், முடிகளை நட்டுவைத்து வளர்க்கும் சிகிச்சை முறை பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்'' என்றோம்.

''ஒருவருக்கு எவ்வளவுதான் வழுக்கை இருந்தாலும், பின்னந்தலை பக்கவாட்டில் நிச்சயம் முடி இருக்கும். அந்தப் பக்கவாட்டு முடியை வேரோடு பிடுங்கி எடுத்து எந்த இடத்தில் முடி தேவையோ, அங்கு பதியம் போடுவதுபோல் நட்டுவிடலாம்.

முடிசூட நீங்கள் தயாரா?

கொத்தாக எடுத்து நடுவது அல்லது ஒவ்வொரு முடியாக எடுத்து நடுவது என இரண்டு முறைகளில் சிகிச்சை தரப்படுகிறது.

முடிசூட நீங்கள் தயாரா?

இந்தச் சிகிச்சையில், ஒருவரது தலையில் மூன்று ஆயிரம் முதல் நான்கு ஆயிரம் எண்ணிக்கையிலான முடிகளை நட்டுவைக்க முடியும். முடியை நட்ட பின் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மருந்துகள் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், நட்ட முடிகள் உதிர்ந்துவிடும். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தலைக்கு ஹேர் ஆயில் பயன்படுத்துவதுபோல் வாழ்நாள் முழுவதும் மருந்து தேய்க்க வேண்டியதிருக்கும். முடியை நட்ட ஒரு மாதத்தில் அத்தனை முடியும் உதிர்ந்து, ஐந்தாவது மாதம் முதல் வளர ஆரம்பிக்கும். ஒரு முறை ஆயிரம் முடிகளை நடுவதற்கு 20,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகும்.  நிஜ முடியைப் போல் செயற்கை பிளாஸ்டிக் முடியையும் நடலாம். ஒரு முடியை நட 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை செலவாகும்'' என்கிறார் ரத்னவேல்.

பார்லரில் உண்டா பரிகாரம்?

''ஒரு பெண்ணை அழகாகவும் இளமையாகவும் காட்டுவதற்கு முடியும் ஒரு காரணம். மண்டைத் தோல் தெரியும் அளவுக்கு முடி இல்லாமல் வரும் பெண்கள் கிளிப்ஸ் மூலம் முடியை இணைத்துக்கொள்ளலாம். தலை முடியின் தரம், நிறம், தன்மை, எந்த அளவு நீளம் தேவை என்பதைப் பொருத்து நாங்களே இந்த கிளிப்ஸ் வகை முடிக் கற்றைகளைத் தயார் செய்து விற்கிறோம். இந்த முடிக்கற்றைகள் இயற்கையான முடி அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சிந்தடிக் வகை முடிகளாலும் தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் விலையிலேயே இவை கிடைக்கின்றன. இதைத் தவிர, ஃபைபர் பவுடர் ஸ்ப்ரே இருக்கிறது. தலையில் தோல் தெரியும் இடத்தில் இந்த ஸ்ப்ரேயைத் தெளித்தால் அப்படியே முடிபோல நீள, நீளமாக ஒட்டிக்கொள்ளும். ஒரு நாள் முழுவதும் தலையில் முடி இருப்பது போன்ற தோற்றம் தரும். ஆனால், வழுக்கைத் தலையில் இந்த ஸ்ப்ரே ஒட்டாது. ஓரளவாவது முடி இருக்க வேண்டும்'' என்கிறார் அழகுக் கலை நிபுணர் வீணா.

 'விக்’ இப்ப 'வீக்’ இல்லை!

முடி இழந்தவர்களுக்கு 'முடி சூட்டும்’ வாய்ப்பாக விளங்குவது 'விக்’!

ஒருவரது முக அமைப்பு மற்றும் முடியின் நிறத்துக்கு ஏற்ற வகையில், பாந்தமாகப் பொருந்திக்கொள்ளும் அளவிலான விக் வகைகள் சந்தையில் குவிந்துகிடக்கின்றன. தலைக்கு 'விக்’ அணிந்து சென்றால், வித்தியாசமாகப் பார்த்த காலம் உண்டு. ஆனால், இன்று ஒருவரின் தலையில் இருக்கும் முடி இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை எளிதில் கண்டு பிடிக்கமுடியாத வகையில் நவீனத் தொழில்நுட்பங்களால் 'வீக்’காக இருந்த 'விக்’ இன்று ஸ்டாராங்காகிவிட்டது. தவிர, இது உடலுக்குப் பாதுகாப்பான வழியும்கூட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism