Published:Updated:

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

Published:Updated:
##~##

றுவைசிகிச்சை மூலம் அகற்றப்படும் பிரமாண்டக் கட்டிகள் செய்திகளில் சமீபத்திய வரவு... கோவையில் அகற்றப்பட்ட ஐந்தரை கிலோ கட்டி! 

'கோவையைச் சேர்ந்த இல்லத்தரசி அவர். வயது 52. சில வருடங்களாகவே அவருக்கு வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. எங்களிடம் சிகிச்சைக்கு வந்தபோதுதான் அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றினோம். இதுவரை அகற்றப்பட்ட வயிற்றுக் கட்டிகளில் இது மிகப் பெரியது' என்கிறார் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த வயிறு மற்றும் லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சை நிபுணர் செந்தில்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, இப்படிக் கட்டிகள் தோன்றுவதற்கான காரணங்கள், அதற்கான சிகிச்சை முறைகள்குறித்து விரிவாகப் பேசுகிறார் செந்தில்குமார்.

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

''வருடத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்கிற  வழக்கம் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிடலாம்.

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

பொதுவாக, குடல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கருப்பை, சினைப்பை என உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கட்டி ஏற்படலாம். வீட்டில் வளர்க்கப்படும் நாயின் உடலில் உள்ள ஒரு வகை உண்ணிகளின் முட்டைகள் சில சமயங்களில் மனிதர்களின் வயிற்றுக்குள் சென்றுவிடும். அது கல்லீரல் வரை சென்று கட்டியாக வளர ஆரம்பித்துவிடும். இதற்கு 'ஹெடாடிட் சிஸ்ட்’ என்று பெயர். மண்ணீரலில் வரும் கட்டிக்கு 'ஸ்ப்ளீனிக் சிஸ்ட்’ என்றும், குடல் பகுதியில் தோன்றும் கட்டியை 'மெசன்ட்ரிக் சிஸ்ட்’ என்றும் கூறுவோம். இந்த 'மெசன்ட்ரிக் சிஸ்ட்’ என்பது பிறக்கும்போதே தோன்றிவிடும். எப்போது வேண்டுமானாலும் வளரத் தொடங்கலாம். வயிற்றின் பின்பகுதிக்கு 'ரெட்ரோ பெரிடோனியல்’ என்று பெயர். அங்கு நரம்பு மற்றும் சதைப் பகுதியில் கட்டி தோன்றலாம்.

கருப்பையில் ஹார்மோன் மாற்றம் காரணமாகக் கட்டிகள் ஏற்படலாம். இந்தக் கட்டிகள் கருப்பையின் உள்சுவர், சுவற்றின் மையப் பகுதி, வெளிப்பகுதி என எங்கு வேண்டுமானாலும் வரலாம். கருப்பையின் உள் சுவற்றில் வரும் கட்டியை 'சப்மியூகஸ்’ கட்டிகள் என்று கூறுவார்கள். கருப்பையின் உள்ளேயோ, மையப் பகுதியிலோ கட்டி ஏற்பட்டால், வயிற்று வலியுடன் கூடிய ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஆனால் சுவற்றின் வெளிப் பகுதியில் கட்டி ஏற்படும்போது அது பெரும்பாலும் எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாது, வளர்ந்துகொண்டே இருக்கும்.

கட்டி பெரிதாகும்போது அது குடல், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை போன்றவற்றில் அழுத்தம்

கட்டி... அறிவோம்... அகற்றுவோம்!

கொடுத்து அந்த உறுப்புகளையும் பாதிக்கும். இப்படி ஏதாவது பாதிப்பு ஏற்படும்போதுதான் மருத்துவப் பரிசோதனைக்கு வருவார்கள். உடனடியாக என்ன பிரச்னை என்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து கண்டறிவோம்.

நீர்க் கட்டி என்றால் அதில் துளையிட்டு, உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றுவோம். இதனால் கட்டி சுருங்கி, தோல் பகுதி மட்டும் இருக்கும். அதை லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிடுவோம். அதுவே திசுக் கட்டியாக இருந்தால் அதை அகற்றுவது சவாலான பணி. திசுக் கட்டிகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மென்மைத்தன்மை அடைந்து சவ்வுபோல மாறிவிடும். இந்தக் கட்டிகளின் அளவைப் பொறுத்து அறுவைசிகிச்சை முறையும் மாறுபடும். குறிப்பிட்ட அளவு வரை லேப்ராஸ்கோபி மூலம் அகற்றலாம். அசாதாரணமான சூழ்நிலையில், திறந்தநிலை அறுவைசிகிச்சை தான் நல்ல தீர்வாக இருக்கும்.

திடீரென உடல் எடை குறைதல், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அல்ட்ரா சவுண்ட் அல்லது என்டோஸ்கோபி பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இதனால், கட்டி சிறியதாக இருக்கும்போதே லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றிவிட முடியும். நாயைத் தொட்டு விளையாடினால் சோப் அல்லது கிருமிநாசினி போட்டுக் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். இது நாய்கள் மூலம் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க உதவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாய்க்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism