Published:Updated:

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

Published:Updated:
##~##

''பக்கவாதம் என்கிற இந்த வியாதி என்னைப் படுக்கையில் விழவைத்திருக்கா விட்டால், இன்றைக்கும் எத்தனையோ படங்களை என்னால் இயக்கி இருக்க முடியும்!'' - மரணம் நெருங்கிய நாளில் இயக்குநர் ஸ்ரீதர் சொன்ன வேதனை இது. பக்கவாதம் ஒருவரை அடியோடு முடக்கிப்போடும் வியாதி. பக்கவாதம் ஏற்பட்டால் உடம்பின் ஒரு பக்கச் செயல்பாடு அப்படியே நின்றுபோகும். பக்கவாதம் ஏற்படக் காரணம், மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான். வலது, இடது என்று மூளையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை, இடது பக்க மூளைதான் கண்காணிக்கிறது. உடலின் இடதுபக்கச் செயல்பாட்டை, வலது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. 

ரத்தத்தின் மூலம்தான் ஆக்சிஜன் மற்றும் குளுகோஸ் மூளையின் செல்களுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படும்போது, மூளையின் சில பகுதிகளுக்குச் செல்லும் ரத்தமும் தடைபடுகிறது. இதனால் மூளையின் திசுக்கள் செயல் இழந்துவிடுகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

நமது நாட்டில் பல லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் கே.சுப்பிரமணியனிடம் பேசினோம்.

'பக்கவாதம் என்பது வயதான வர்களுக்கு வரும் நோய். 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பக்கவாதம்

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உயர் ரத்த அழுத்தம், ரத்தத் தில் கொழுப்பு அளவு அதிகமாக இருத்தல், புகைபிடித்தல், சர்க்கரை நோய், மரபியல்ரீதியான தன்மை, வயது அதிகரித்தல் போன்றவை பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இதயத்தின் சீரற்றத் துடிப்பு, இதய வால்வு பிரச்னை, தலைக் காயம், மூளையில் நோய்த் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் ஏற்படலாம்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தக் கசிவு எனப் பக்கவாதத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வருவது, இஸ்கிமிக் ஸ்ட்ரோக் (Ischemic stroke). மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அதிக அளவில் கொழுப்பு படிந்து ரத்தம் கட்டிக்கொள்வதால் ஏற்படும். சில சமயங்களில் இதயத்தில் இருந்தும் ரத்தம் கட்டியாகி, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் கசிவு காரணமாக மூளைக்குப் போதுமான ரத்தம் செல்லாததை ஹெமராஜிக் ஸ்ட்ரோக் (Hemorrhagic stroke) என்போம்.

மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும்போது வழக்கமானச் செயல்பாடுகளில் நம்மால் ஈடுபட முடியாது. அதனால், மூளைத் திசுக்கள் பாதிக்கப்படும். பாதிப்பின் வீரியத்தைப் பொருத்து அறிகுறிகளும் மாறுபடும். சிறிய அளவிலான பாதிப்புகள் எந்தவிதமான அறிகுறியையும் ஏற்படுத்தாது. ஆனால், மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதை 'சைலன்ட் ஸ்ட்ரோக்’ என்பார்கள்.

1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் முகம், கை அல்லது காலில் திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது தளர்வு, முழுமையாகவோ அல்லது அவ்வப்போதோ தன் செயல் இயக்கத்தில் மாறுபாடு, பாதிக்கப்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம்.

2. திடீரெனப் பேசுவது அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் குழப்பம்.

3. கண்ணின் பார்வையில் தடுமாற்றம். சில சமயங்களில் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல் அல்லது பார்வை தெரியாமலே போய்விடுதல்.

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

4. நடப்பதில் பிரச்னை, மயக்கம், நிலைத் தடுமாற்றம், விழுங்குவதில் பிரச்னை.

5. திடீரெனத் தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி.

மேற்கண்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதுதான் அவசியம்.

பக்கவாதம் தவிர்ப்பில் ஆஸ்பிரின் மாத்திரை முக்கியப் பங்கு வகித்தாலும், ஒருவருக்குப் மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிக்கு மாத்திரையை விழுங்குவதிலும் சிரமம் இருக்கும் என்பதால் ஆஸ்பிரின் கொடுக்கக் கூடாது. அவருக்கு எந்த வகையான பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய அவரது மூளையை சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படும்.

ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு த்ராம்போலைசிஸ் தெரபி என்ற சிகிச்சை முறை உள்ளது. பொதுவாகப் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட வரை ஒன்றரை மணி நேரத்துக்குள் மருத்துவ மனைக்குக் கொண்டுவர வேண்டும். அங்கே மூன்று மணி நேரத்துக்குள்ளாக இந்தச் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இந்தச் சிகிச்சையை அளிப்பதன் மூலம் மூன்று - நான்கு மாதத்துக்குள் ஓரளவுக்கு தற்சார்புடன் வாழ முடியும்.

மூளையில் ரத்தக் கசிவு காரணமாக ஸ்ட்ரோக் ஏற்பட்டிருந்தால், அதற்கு வேறு மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும். சிறிய அளவில் ரத்தக் கசிவு இருந்தால், அதை மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

சிகிச்சைக்குப் பின்னர்,  பிசியோதெரபி பயிற்சிகளாலும் பக்கவாதப் பிரச்னையில் இருந்து மீள முடியும்.'

பக்கவாதம் வராமல் தவிர்க்க:

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்.

அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!

2. மது குடிக்காதீர்கள் - புகை பிடிக்காதீர்கள்.

புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையானது ரத்தக் குழாய் சுவற்றைத் தாக்குகிறது. ரத்தம் உறைதலை விரைவாக்குகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதயம் அதிகமாகச் செயல்படும்படி தூண்டுகிறது. மது அருந்துவதும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

3. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

சர்க்கரை நோயானது உடலின் எல்லா பகுதியிலும் உள்ள சின்ன ரத்தக் குழாய் முதல் பெரிய ரத்தக் குழாய் வரையிலும் பாதிக்கும். இது அடைப்பு மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்திவிடலாம்.

4. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்

உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். சமச்சீரான உணவுக்குப் பழங்கள், சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரியுங்கள்.

5. தொடர் மருத்துவப் பரிசோதனை

பக்கவாதம் வருவதற்கான அபாயத்துக்கு உட்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.

தக்கபடி கவனித்தால் பக்கவாதம் தவிர்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism