Published:Updated:

நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?

நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?

நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?

நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?

Published:Updated:
நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?
##~##

'தட்டினா 32 பல்லும் விழுந்துடும்’ என்று சிலர் கோபமாகச் சொல்வார்கள். இனி வரும்காலங்களில் அப்படிச் சொல்ல முடியாது. காரணம், மனிதனுக்கு முளைக்கும் பற்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 28 முதல் 30 ஆகக் குறைந்துவிடும். எதிர்காலத்தில் ஞானப்பல் (தாடையின் கடைசியில் உள்ள 'விஸ்டம் டூத்’) என்பது தோன்றாமலேயே மறையப்போகிறது’ என்று எச்சரிக்கிறார்கள் பல் மருத்துவத் துறை ஆய்வாளர்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயன்படுத்தாத உறுப்புகள் நாளடைவில் மறைந்துவிடும் என்பதுதான் பரிணாம வளர்ச்சி சொல்லிக் கொடுத்திருக்கும் உண்மை. மாறிவரும் இன்றைய உணவுப்பழக்கத்தில் எதையும் கடித்து உண்ணும் பழக்கம் வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. இதனாலேயே சமீபகாலமாக 17 வயதைத் தொடும் இளைஞர்களுக்குத் தாடை எலும்புகள் குறுகி, ஞானப்பல் முளைப்பதே இல்லை என்கின்றனர் பல் மருத்துவர்கள். சமீபத்தில் சென்னையில் இளைஞர்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 35 சதகிகிதம் பேருக்கு ஞானப்பல் முளைக்கவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுக்க இதுதான் நிலை. நாகரிக வாழ்க்கை முறையில் மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் ஒழுங்கற்ற பல்வரிசை, எளிதில் சொத்தை விழுவது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மேலும், ஞானப்பற்களின் வேலையை அதற்கு முன் உள்ள கடைவாய்ப் பற்கள் செய்வதினால் அவை எளிதில் 'பல் கூச்சம்’ போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது.

நாளைய சந்ததிக்கு ஞானப்பல் இருக்குமா?

இதுகுறித்துப் பேசும் ஈரோட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் பி.பிரபு, ''மனிதனுக்கு 17 முதல் 25 வயதுக்குள் ஞானப்பல் முளைக்க வேண்டும். உணவினை நன்றாகக் கடித்து உண்பதற்குப் பயன்படும் பற்கள்தான் நம் முகப் பொலிவுக்கும், வார்த்தை உச்சரிப்புகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றன. உணவினை நன்கு மென்று உட்கொண்டாலே செரிமானம் அடையும். நம் முன்னோர்கள் உணவினை நன்கு மென்று உண்பார்கள். கரும்பு, முறுக்கு, தட்டை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற நன்கு கடித்து உண்ணக்கூடிய உணவுகளையே சாப்பிட்டார்கள். ஆனால், இப்போது நம் குழந்தைகளுக்கு முறுக்கு, தட்டுவடை போன்ற திண்பண்டங்களுக்குப் பதிலாக பிஸ்கட், கேக், சாக்லேட் போன்றவற்றைக் கொடுக்கிறோம். இதனால் பற்களுக்கும் தாடை எலும்புகளுக்கும் அதிகமான வேலை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் தாடை எலும்பு குறுகி, ஞானப்பல் தேவை இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்து அவசியம். எனவே, குழந்தைகளுக்குப் பால், ராகி, பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற கால்சியம் சத்துள்ள உணவு வகைகளையும், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் - சி சத்துள்ள பழ வகைகளையும் உட்கொள்ள கொடுக்க வேண்டும். நன்கு கடித்து சாப்பிடும் உணவுப் பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் ஞானப்பல் என்பது மறைந்து போகக்கூடிய உறுப்பாக மாறாமல் இருக்கும்!'' என்கிறார் அக்கறையோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism