Published:Updated:

தரையில் படுப்பது தவறா?

தரையில் படுப்பது தவறா?

தரையில் படுப்பது தவறா?

தரையில் படுப்பது தவறா?

Published:Updated:
தரையில் படுப்பது தவறா?

எஸ்.ராசாத்தி, கம்பம்.

தரையில் படுப்பது தவறா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் இரண்டு உள்ளங்கைகளிலும் கை விரல்களின் ஓரங்களிலும் பாதங்களில் வருவதுபோல் பித்தவெடிப்பு வந்துள்ளது. கறுத்து சொரசொரப்பாகி எரிச்சலை ஏற்படுத்தி வரும் இப்பிரச்னைக்குத் தீர்வுதேடி தோல் சிகிச்சை நிபுணரைச் சந்தித்தும் பயனில்லை. கையில் பித்தவெடிப்பு வருவதற்கு என்ன காரணம்? எப்படிக் குணப்படுத்துவது?''

டாக்டர் சி.மகாலிங்கம், தோல் சிகிச்சை நிபுணர், கடலூர்.

##~##

''நம் உடலில் எங்கெல்லாம் அழுத்தம் அதிகமாகிறதோ... அங்கெல்லாம் அழையா விருந்தாளியாக வெடிப்பும் வந்துவிடும். பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் எண்ணெய்ப் பசை குறைவதால் தோல்  சுருங்கிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் உதிர்ந்துவிடும். சில சமயங்களில் இந்தத் தோல் உரியாமல் தடித்துப்போவதால், நடக்கும்போது குதிகால் தரையில் வேகமாக இடித்து வெடிப்பு ஏற்படும். நுனிப்பாதத்தில் அதிக அழுத்தம் இறங்கும்போதும், கால் விரல்களைச் சுற்றிலும் வெடிப்பு உண்டாகும். இதேமுறையில்தான் உள்ளங்கை மற்றும் விரல்களிலும் வெடிப்பு ஏற்படுகிறது. உள்ளங்கையை ஊன்றி எழுந்திருப்பதாலும், அதிக பாரத்தைத் தூக்குவதாலும் வெடிப்பு உண்டாகி தொந்தரவை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க, குளித்தவுடன் ஈரம் காய்வதற்குள் கை, கால்களில் தாராளமாக எண்ணெய் தடவிக்கொள்ளலாம். நார்ச்சத்து உள்ள பொருட்களையும் தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிக அளவு எண்ணெய்ப் பசை உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. தினமும் நல்ல தண்ணீரில் கொஞ்சம் உப்புப் போட்டு, டாக்டர் கொடுக்கும் மருந்தினைக் கலக்கி, அதில் 15 நிமிடம் உள்ளங்கை மற்றும் விரல்களை அலசி வெடிப்பினுள் உள்ள அழுக்கினை அகற்றினாலே விரைவில் குணம் கிடைக்கும்.''

தரையில் படுப்பது தவறா?

டெய்சி மேரி, கோவை.

தரையில் படுப்பது தவறா?

''எனக்கு ஆண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர்தான் குழந்தை கவிழ்ந்து படுக்கவே ஆரம்பித்தது. இன்னும் தவழ ஆரம்பிக்கவில்லை. இதனால் குழந்தை உடலில் குறை ஏதும் இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. தயவு செய்து விளக்குங்களேன்...''

டாக்டர் மு.சரவணன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மதுரை.

தரையில் படுப்பது தவறா?

''பொதுவாக 3 முதல் 11 மாதங்களுக்குள் குழந்தை கவிழ்ந்து படுப்பது நிகழல£ம். அதேபோன்று, குழந்தைகளுக்குத் தவழும் திறன் 9 முதல் 12 மாதங்களுக்குள் ஏற்படும். இதில் ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை தவழ ஆரம்பிக்கலாம். வெறும் மாதங்களை மட்டுமே எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது.ஒவ்வொரு மாதமும் குழந்தையின் உடல் எடை மற்றும் உடல் அசைவுகளில் முன்னேற்றத்தைக் கண்காணித்து வர வேண்டும். பொதுவாக 10 மாதக் குழந்தைகள் 8 முதல் 12 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளின் உடல் அசைவுகளில் முன்னேற்றம் பெறுவதற்குப் பெற்றோர்கள் நிறைய மெனக்கெட வேண்டும். தனிமையில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களால் நிறைய நேரம் செலவிடப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் உடல் நல முன்னேற்றத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.  குழந்தைகளைப் பின்புறம் இருந்து கூப்பிட்டுத் திரும்பவைப்பது, தாய்மைக் குரலில் கொஞ்சிப் பேசிச் சிரிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஒன்பது மாதம் முதல் ஒன்றே முக்கால் வயதுக்குள் குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும். அப்போது சற்று தூரத்தில் நின்று அழைப்பது, சத்தம் எழுப்பும் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி உற்சாகப்படுத்துவது போன்ற செயல்கள் நல்ல பலனைத் தரும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகச் சிறந்த ஊட்டச்சத்து. பால் குடிப்பதை மறந்தவுடன் வீட்டில் அன்றாடம் செய்யும் உணவு வகைகளிலேயே ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளைக் கொடுத்துவந்தால் போதும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.''

மல்லிகா, கோவை.

தரையில் படுப்பது தவறா?

''கட்டாந்தரையில் படுத்தால், உடலில் சக்தி குறைந்துவிடும் என்கிறார் என் அம்மா. எனக்கு வெறும் தரையில் படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் சித்தர்கள், யோகிகள் எல்லோருமே தரையில்தான் படுத்தனர். இதற்கு விளக்கம் தர இயலுமா?''

டாக்டர் ஆர்.கணேசன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், உடுமலைப்பேட்டை.

''பொதுவாக மனித உடலானது பல வளைவுகளையும் நெளிவு சுளிவுகளையும் உள்ளடக்கியது. அதிலும் நமது முதுகுத் தண்டுவடம் S வடிவத்தில் அமைந்திருக்கும். நாம் தரையில் படுத்து உறங்கும்  நேரத்தில் அது தன்னை நேராக்கிக் கொள்ள முயற்சி செய்யும். இது நமக்கு அசவுகர்யத்தை அளிக்கும். ஆனால், அதே நேரத்தில் நாம் மெத்தையில் படுக்கும்போது தண்டுவடத்தின் வளைவுகள் ஏற்படுத்தும் வெற்றிடம் மெத்தையால் நிரப்பப்படும். இதனால், ஒரு நிம்மதியான சவுகரியமான உணர்வு ஏற்படும். முதுகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளும்.

பழங்கால மக்கள் தரையில் படுத்து மட்டுமே பழகி இருந்ததால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால், புதிதாக இதை முயற்சி செய்வோருக்கு முதுகுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புதிதாகத் தரையில் படுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.  

சிறு வயது முதல் தரையில் படுத்துப் பழக்கப்பட்டு அது வசதியாகவும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக இதே பழக்கத்தை தொடரலாம். எனினும் பெட் ஷீட் போன்று ஏதாவது ஒரு துணியை விரித்துப் படுப்பது தரையின் குளுமையில் இருந்து பாதுகாப்பதோடு உடலையும் சற்று நேராக வைத்திருக்க உதவும்.''

தரையில் படுப்பது தவறா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism