Published:Updated:

எலி கிலி!

என்னதான் வழி?

எலி கிலி!

என்னதான் வழி?

Published:Updated:
##~##

ரசுத் துறையின் அவலத்தையும் எலிக் கொடூரத்தையும் ஒருசேர உணர்த்திப் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் நிகழ்ந்த குழந்தை ஹரிணியின் மரணம். 

ஒருகாலத்தில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் இறந்துபோவதற்குக் காரணமான பிளேக் நோயைப் பரப்பும் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டவை எலிகள். 'பிளேக் தற்போது ஒடுக்கப்பட்டுவிட்டாலும் எலிகளால் 70-க்கும் மேற்பட்ட வியாதிகளைப் பரப்ப முடியும்’ என்பதுதான் உண்மை. விளைநிலங்களிலும் தானியக் கிடங்குகளிலும் தானியங்களைத் தின்று தீர்த்து அழிப்பதில் எலிகளின் பங்கு மிக அதிகம். உலக அளவில் ஆண்டு ஒன்றுக்கு 33 மில்லியன் டன் உணவு தானியங்களை எலிகள் அழிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. தானியங்களைத் தின்று

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலி கிலி!

அழிப்பதோடு மட்டும் அல்லாமல், காலம் காலமாக மனிதனின் ஆரோக்கியத்துக்கும் சவால் விட்டுகொண்டே இருக்கின்றன எலிகள். பண்ணைகள், விளைநிலங்கள், வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களைத் தாண்டி மருத்துவ மனைகளிலும் எலிகள் தங்கள் இருப்பிடத்தை விஸ்தரித்திருப்பதுதான் வேதனை!

எலிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய் பரவும் விதங்கள், எலிகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழி முறைகள் போன்றவற்றைப் பற்றிக் கோவை மருத்துவரும் பேராசிரியருமான எஸ்.சுஜித்குமார் விவரித்தார்.

'மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் வசிக்கும் பழக்கம் எலிகளுக்கு இருக்கிறது. தரையில் வளைகள் தோண்டியும் வீடுகளில் மறைவான இடங்களிலும் எலிகள் வசிக்கும். ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், குப்பை கூளங்கள், பூங்காக்கள் இவற்றின் அருகே வசிப்பவர்களுக்கு எலிகளினால் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும்.

எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோஸிஸ், எலியின் சிறுநீரில் உள்ள ஒரு வகையான பாக்டீரியாவினால் பரவுவது. இது கல்லீரலையும் சிறுநீரகத் தையும் பாதிக்கும். அத்துடன்

எலி கிலி!

இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாய்களையும் பாதிக்கும். உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் உயிர் இழப்புக்கும் காரணமாகிவிடும். எலியின் சிறுநீர் கலந்த நீரைக் குடிப்பதாலோ அல்லது உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவதாலோ மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் பரவுகிறது. தண்ணீர் அல்லது மண்ணில் எலியின் சிறுநீர்க் கிருமிகள் கலந்திருந்து அது நம் தோல் மீது பட்டாலும் நோய் பரவும். காய்ச்சல், கடுமையான உடல்வலி, மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

ஹாண்டா வைரஸ் என்பது கடுமையான சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றை அளிக்கக் கூடியது. எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலமாக நமது சிறுநீரகத்தைப் பாதிக்கும். மிக அதிகமான இதயத்துடிப்பு, மூச்சிரைப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள். பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர், மலம் போன்றவற்றின் துகள்கள் கலந்த காற்றைச் சுவாசித்தாலும் இந்நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் ஃப்ளூ காய்ச்சல் போலத் தோன்றினாலும் சரியாக நோயை இனங்கண்டு உடனடியாகச் சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். எலியின் உமிழ்நீரில் இருந்து லிம்ஃபோசைடிக் கோரியோமெனிஞ்சிடிஸ் என்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் காய்ச்சல், பசியின்மை, உடல் வலி, தலைவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உச்சகட்டமாக மூளை பாதித்தல், மூளைக் காய்ச்சல் போன்றவைகூட ஏற்படலாம்.

எலியின் கெட்ட குணங்களில் ஒன்று. வாய்க்கு அகப்பட்டதை எல்லாம் கடிப்பது. எலி கடித்துவிட்டால் உடனடியாக டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வது அவசியம். எலி கடித்தால் எலிக்கடிக் காய்ச்சல் வரும். சில சமயங்களில், எலிகளின் பல் பதிவால் காயங்கள் உண்டாகி அதன் மூலம் ரணஜன்னி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார் சுஜித்குமார்!

 எப்படிப் பரவுகிறது?

கழுவுவதற்காக வைத்திருக்கும் சமையல் பாத்திரங்கள் மேல் எலிகள் சிறுநீர் கழிப்பது சகஜம். அந்தப் பாத்திரங்களைச் சரியாகக் கழுவாமல் பயன்படுத்தும்போது உணவின் மூலம் நமது உடலுக்குள் கிருமிகள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. எலிகளின் கழிவுகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலமும் நேரடியாக எலிகளின் கழிவுகளின் மீது நமது உடல் படுவதாலும், எலிகள் கடிப்பதாலும் வியாதிகள் வரலாம்.

எலிகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன வழிகள்?

எலிகளை முற்றாக ஒழிப்பதுதான் சிறந்த வழி. குடி இருக்கும் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் எலிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலி ஒழிப்புக்கு என எலிப் பொறிகள், எலி விஷம் போன்றவை சந்தையில் கிடைக்கின்றன. நாம் புழங்கும் இடத்தைக் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாகப் பார்த்துக்கொள்வது நல்லது. குப்பைகூளங்கள், ஓட்டை உடைசல்கள் போன்றவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும். கார் ஷெட், பரண் போன்றவற்றில் தேவையற்ற பொருட்களைக் குவித்துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். எலியின் கழிவுகள் மற்றும் இறந்த எலி போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். துடைப்பம் கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு முன்னர் தகுந்த கிருமிநாசினிகளை ஸ்ப்ரே செய்வதன் மூலம் காற்றில் கிருமிகள் கலப்பதைத் தவிர்க்கலாம். கையுறை அணிந்துகொண்டு இறந்த எலிகளை அப்புறப்படுத்துவது நல்லது.

எலி கிலி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism