Published:Updated:

புதிய முகம்... புதிய பார்வை...

புதிய முகம்... புதிய பார்வை...

புதிய முகம்... புதிய பார்வை...

புதிய முகம்... புதிய பார்வை...

Published:Updated:
##~##

சில சமயங்களில் கற்பனையைவிடவும் நிஜங்கள் சுவாரஸ்யமானவை!

 ''சுகைல்கானுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சு இந்தப் பத்து நாள்லதான் நாங்க நிம்மதியாத் தூங்கறோம். அவனோட எதிர்காலத்தை நினைச்சு ஒவ்வொரு நாளும் நாங்க அனுபவிச்ச அவஸ்தைகளை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. அவன் வயசுப் பசங்க எல்லோரும் துறுதுறுன்னு வளைய வர்றப்ப... பள்ளிக்கூட போர்டுல இருக்கிற எழுத்து சரியா தெரியாமலும், மூச்சுவிட சிரமப்பட்டும் தினம் தினம் ரண வேதனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். 'கூடப்படிக்கிற பசங்க எல்லாரும் என்னைக் கேலி செய்யுறாங்கப்பா’ன்னு அவன் சொல்லி அழுறப்போ நெஞ்சுக்கூட்டை நொறுக்கின மாதிரி துடிச்சுப் போயிருக்கோம். 'அம்மா நான் பள்ளிக்கூடத்துக்குப் போறேன்’னு இந்த ஒரு வாரமா அவன் துள்ளிக் குதிச்சுக்கிட்டு ஓடுற அழகைப் பார்க்குற ஆனந்தத்தை இறைவன் கொடுத்திருக்கிறார்'' வார்த்தைகளை வழிமறித்து உருளுகிறது லியாஸ்கானின் கண்ணீர்த் துளிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய முகம்... புதிய பார்வை...

யார் இந்த சுகைல்கான்... அவனுக்கு என்னதான் பிரச்னை?

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஜம்மாலமுடுகு கிராமத்தைச் சேர்ந்த லியாஸ் கான் என்பவரின் 9 வயது மகன் சுகைல்கான். பிறவியிலேயே இந்தச் சிறுவனின் கண்களுக்கு இடையேயான இடைவெளி அளவுக்கு அதிகமாக இருந்தது. கூடவே, சப்பை மூக்கும் பிளவுப்பட்ட மூக்கு

புதிய முகம்... புதிய பார்வை...

மடல்களுமாக இருந்ததால், பார்வைக் குறைபாடு, சுவாசக் குறைபாடுகளால் அவதிப்பட்டுவந்தான். இதனாலேயே பள்ளிக்கூடப் படிப்பும் தடைபட்டுவந்தது. 'சுகைல்கானின் குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்த முடியாது’ என்று அங்கிருந்த மருத்துவர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், சென்னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில், சமீபத்தில் சுகைல்கானுக்கு வெற்றிகரமாக முகச்சீரமைப்பு செய்திருக்கிறார்கள் சென்னை மருத்துவர்கள்.

சவாலான இந்த முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை குறித்துப் பேசத் தொடங்குகிறார் பல் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜி, ''சாதாரணமாக பெரியவர்களின் கண்களுக்கு இடையேயான இடைவெளி 30 மி.மீ. அளவே இருக்கும். ஆனால், சுகைல்கானின் கண்களுக்கு இடையேயான இடைவெளி 65 மி.மீ. இருந்தது. இது பறவைகளின் பக்கவாட்டுக் கண்களைப் போன்ற நிலை. எனவே, சுகைல்கானுக்கு தெளிவானப் பார்வை கிடைக்கவில்லை. கூடவே, மூக்கின் நடுச்சுவர் இல்லாத காரணத்தால், மூளையும் அதன் இடத்தில் இல்லாமல் சற்று கீழிறங்கி இருந்தது. இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டுமானால், மூளை, கண் மற்றும் மூக்கையும் ஒருசேர சீரமைக்க வேண்டிய நிலை. சிக்கலான இந்த முகச்சீரமைப்பு அறுவைசிகிச்சையை நரம்பியல் மருத்துவர் உதவியுடனும் கண் மருத்துவரது ஆலோசனையுடனும் வெற்றிகரமாக செய்துமுடித்தோம்.

சுகைல்கானுக்குத் தெளிவானப் பார்வை கிடைக்க வேண்டுமானால், மூளையைச் சற்று நகர்த்தி கடினமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. எனவே, முதலில் மண்டை ஓட்டைப் பிரித்தெடுத்து மூளையின் அளவைச் சுருங்கச் செய்வதற்கான ஊசி மருந்தைச் செலுத்தினோம். பின்னர் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்ட மூளையை சற்றே நகர்த்தி வைத்து, கண் எலும்புகளை முற்றிலுமாக நான்கு பக்கங்களிலும் வெட்டி எடுத்து சரியான இடத்தில் கண்கள் அமையுமாறு மாற்றியமைத்தோம். பின்னர் மூளையின் அடிப்பாகத்தில் உள்ள கண் நரம்புகளையும் (Optic nerve) சரியான கோணத்தில் வடிவமைத்து பார்வை கிடைக்கச் செய்தோம். தேவையற்ற மூக்கு எலும்புகளையும் வெட்டி நீக்கினோம். பின்னர் எடுப்பான மூக்குக்கு ஏற்றவகையில், அவனது விலா எலும்பில்  இருந்து எலும்பை வெட்டி எடுத்து நடுவே நகர்த்திவைத்து சீர்செய்தோம்.

இந்த அறுவைசிகிச்சையின்போது முகத்தில் ஏற்படும் தழும்புகளைத் தவிர்ப்பதற்காக சுகைல்கானின் வாய் வழியாகவே பல்வேறு சிகிச்சைகளையும் செய்துமுடித்தோம். அதனால்தான் இப்போது சுகைல்கானின் முகத்தில் தழும்புகள் இல்லை; இப்போது அவன் கருவிழிகளை இயல்பாக அசைக்கிறான். பார்க்கிறான்'' என்றார் மகிழ்ச்சியாக.

புதிய முகமும் தெளிவான பார்வையும் சுகைல்கானின் புதுவாழ்வுக்கு வித்திடட்டும்!

புதிய முகம்... புதிய பார்வை...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism