Published:Updated:

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

Published:Updated:
##~##

பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவர். காது மற்றும் அதைச் சுற்றி உள்ள தலைப் பகுதியில் அவருக்கு அதிகமான வலி இருந்திருக்கிறது. காது-மூக்கு-தொண்டை நிபுணரிடம் சென்றார். அப்புறம் பல் நிபுணரிடமும் சென்றார். ஆனாலும், வலி குணமாகவில்லை. கடைசியில் மூளை நரம்பு மண்டல மருத்துவர் ஒருவர் அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அப்போது, மூளைக்குச் செல்லும் நரம்பு அருகில் கட்டி இருந்தது தெரியவந்து இருக்கிறது. அந்தக் கட்டிதான் பிரச்னைக்குக் காரணம் என்பதை அறிந்தவர்கள், சிறிய அறுவைசிகிச்சை மூலம் அந்தக் கட்டியை அகற்றிவிட்டார்கள். இப்போது காதை ஒட்டிய தலைவலி போயே போச்! 

கன்னம், தாடை மற்றும் தலையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீராத வலியால் அவதிபட்டார் சல்மான் கான். மருந்து - மாத்திரைகள், எலெக்ட்ரிக் ஷாக்... எந்தச் சிகிச்சைக்கும் பலன் இல்லை. சமீபத்தில், அமெரிக்கா சென்ற அவருக்கு, தலையில் சிறிய துவாரம் போட்டு, எட்டு மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

சாதாரணத் தலைவலிக்கு இவ்வளவு பெரிய அறுவைசிகிச்சையா? - இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு விவரிக்கிறார் மூளை, நரம்பு மண்டல அறுவைசிகிச்சை நிபுணரான சவுண்டப்பன்.

'உடலின் அனைத்து உணர்ச்சிகளையும் உணரும் மூளைக்கு உணர்ச்சி கிடையாது. மூளையின் சவ்வுகள், ரத்தக் குழாய்கள், நரம்புகள்தான் உணர்வுகளைக் கடத்துகின்றன. தலையின்

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த - கண்காணிக்க 12 ஜோடி நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள்தான் கண் அசைவு மற்றும் திறந்து மூடுதல், பேசுதல், நாக்கு - தாடை அசைவு என அனைத்துக்கும் பொறுப்பு. ஐந்தாவது நரம்பு ஜோடி, தாடை அசைவு மற்றும் உணவு மெல்லுதலுக்குப் பொறுப்பு. சல்மான் கானுக்குத் தலைவலியைத் தந்ததும் இந்த நரம்புதான். அதாவது, குறிப்பிட்ட இந்த நரம்பின் அருகில் உள்ள ரத்தக் குழாயானது நரம்பின் மீது அழுத்தம் கொடுத்து இருக்கிறது. இதனால், அந்த நரம்பில் சிறிய தழும்பும் ஏற்பட்டுவிட்டது. எனவே, அந்த இடத்தில் மட்டும் மூளைக்கு, மாறுபட்ட தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது. விளைவு... சின்ன வலியைக்கூட உயிர்போகும் வலியாக உணர்ந்திருக்கிறார். இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானவர்களது முகத்தில் காற்று படும்போதும், முகம் கழுவும்போதும், சாப்பிடும்போதும்கூட அதிகமான வலி ஏற்படும்.

சமீபத்தில் இப்படி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய பின் தலையில் சிறிய வழி ஏற்படுத்தி நரம்புப் பகுதியில் ரத்தக் குழாய் அழுத்தத்தைத் தடுத்தோம். அதாவது, அமெரிக்காவில் சல்மான் கானுக்கு செய்யப்பட்ட அதே மாதிரியான அறுவைசிகிச்சையை இங்கே சென்னையிலேயே வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். அறுவைசிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்ததும் அந்த நபர் தனது முகத்தைக் கையால் அழுத்திப் பார்த்தார்; 'எங்கே மீண்டும் வலி வந்துவிடுமோ?’ என்கிற பயத்தில். 'வலி ஏற்படவில்லை’ என்றதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது'' என்கிற சவுண்டப்பன் சில முக்கியமான பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

தலையில் நீர் கோத்தல் (ஹைட்ரோசிபேலஸ்)

நம்முடைய மூளையில், 'செரிபரோ ஸ்பைனல் ப்ளூயிட்’ என்ற மூளைத் தண்டுவட நீர் சுரக்கிறது. இது

தலைவலியைத் தள்ளிவைப்போம்!

மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றி இருக்கும். சிலருக்கு இந்தத் திரவ சுற்றுப்பாதையில் அடைப்பு ஏற்படலாம் போது, மூளையின் உள் அறையில் நீர் தேங்கும். பெரும்பாலும் மண்டைக் குழி மூடாத குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். இதனால் தலை வீங்கும். பெரியவர்களுக்குத் மண்டை ஓடு விரிவடையாது என்பதால், மூளையில் நீரின் அழுத்தம் அதிகரித்துத் தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும். இவர்களால் படுக்க முடியாது; தூங்கி எழுந்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்; வாந்தி ஏற்படும். வாந்திக்குப் பிறகு தலைவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

மூளைக்கட்டி

மூளையில் தோன்றும் சாதாரண மற்றும் புற்றுக் கட்டிகளாலும் தலைவலி வரலாம். இந்தக் கட்டிகள் வளர்ச்சி காரணமாக மூளையில் அழுத்தம் ஏற்படும். இவை நேரடியாக மூளைத் திசுக்களை அழித்துவிடுகின்றன. மூளைக் கட்டிக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தக் கட்டிகள் மூளைத் திசு, மூளைச் சவ்வு, நரம்பு அல்லது மூளைச் சுரப்பிகள் என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இவற்றை அறுவைசிகிச்சை மூலம் அகற்றலாம். கண் பார்வை மங்குதல், இரண்டு இரண்டாகத் தெரிதல், கை-கால் வலிப்பு, நினைவாற்றல் குறைவு, ஒரு பக்கம் கை-கால் செயல்படாமை போன்றவை இதன் அறிகுறிகள்.

இத்தகைய பிரச்னைகள் வந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். தவிர, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம், மூளைக்குச் செல்லும் நல்ல ரத்தமானது நேரடியாகச் சிரையில் கலப்பது என வேறு சில காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் தலை வலி விஷயத்தில் ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், எதிர்காலம்பற்றிய தலைவலி இல்லாமல் இருக்கலாம்!

தலைவலியைத் தள்ளிவைப்போம்!
தலைவலியைத் தள்ளிவைப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism