Published:Updated:

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

Published:Updated:
இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

யற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடுவது உண்மையில் பலன் அளிக்கிறதா? - அமெரிக்காவில் இருந்து உலகை நோக்கி வீசப்பட்டு இருக்கும் புதிய சந்தேகம் இது. 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள்பற்றி ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ரசாயன உரம் இட்டு வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் அதிகமான இறைச்சி கிடைப்பதற்காக ஊக்க மருந்துகள் கொடுத்து வளர்க்கப்பட்ட பிராணிகள் ஆகியவற்றை ஆராய்ந்தார்கள். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் ஓரளவுக்குத்தான் ஆரோக்கியப் பலன்கள் உள்ளன என்று அவர்கள் அறிவிக்க, கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

சரி... என்ன சொல்கிறது இந்த ஆராய்ச்சியின் முடிவு?

''செயற்கை உரங்கள், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தி விளைவித்த பொருட்களைக் காட்டிலும், இயற்கை முறையில் தயாராகும் பொருட்களின் உற்பத்தி அளவு 30 சதவிகிதம் குறைவு. ஆனால், இயற்கை மற்றும் செயற்கை இரு முறைகளிலும் விளைபொருட்களில்  ஊட்டச்சத்தைப் பொருத்தவரை பெரிய மாற்றம் இல்லை. இயற்கை முறையில் தயாராகும் உணவில் பூச்சிகொல்லிகள் அபாயம் துளிகூட இல்லாததே மிகப் பெரிய பயன். ஊட்டச் சத்துக்களின் அடிப்படையில் பெரிய வேறுபாடு இல்லை என்பதால், எதை வாங்குவது என்பதை வாடிக்கையாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான டினா ப்ராவடா கூறியுள்ளார்.

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

மேற்படி மாறுபட்ட கருத்துகள் குறித்து  உணவியல் நிபுணர் ஷைனி சந்திரனிடம் கேட்டோம். 'இந்த

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

ஆய்வில் ஈடுபட்டவர்களின் நம்பகத்தன்மை பற்றியே கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இவர்களுக்குப் புகையிலை அபிவிருத்தி நிறுவனம் ஒன்று நிதி உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள் வெளிவரும்போது, அவர்களின் பின்னணியையும் தெரிந்துகொண்ட பிறகே முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

இயற்கை முறை உணவுகளில் உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் ரசாயன உரம், பூச்சி கொல்லிகள், கால்நடைகளுக்கு ஹார்மோன் மருந்து அளிப்பது போன்ற பிரச்னைகள் இல்லை என்றுதான் கூறுகிறோம். இந்த ஆய்வில் செயற்கை உரம் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள ஆன்டிபயாடிக் அளவு, செயற்கை நிறமேற்றிகளின் அளவு, விளைச்சலை அதிகப்படுத்தக் கொடுக்கப்பட்ட ரசாயனத்தின் அளவு எவ்வளவு என்பனபற்றி எந்த இடத்திலும் தகவல்கள் இல்லை.

செயற்கை உரங்களும் பூச்சிகொல்லிகளும் வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை எல்லாக்

இயற்கை உணவில் ஆரோக்கியம் இல்லையா?

கேடுகளையும் உருவாக்கக்கூடியன என்பது குழந்தைகளுக்குக்கூடத் தெரிந்த உண்மை. சில ரசாயனங்களின் பயன்பாடு சாப்பிட்ட உடனேயே பாதிப்பை ஏற்படுத்தும். சில ரசாயனங்கள் பல வருடங்கள் கழித்தும்கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆய்வைப் பொருட்படுத்தவே தேவை இல்லை' என்றார் தெளிவாக.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் இந்த ஆய்வுகுறித்துப் பேசினோம். ஆவேசம் பொங்கக் கொட்டித் தீர்த்தார் நம்மாழ்வார். ''இயற்கையில் விளைந்த பொருளால் நன்மை இல்லை என்று சொன்னால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். விஷத்தைத் தெளித்து வளர்க்கப்படும் ஒரு தாவரம் தரும் பலன்களில் எப்படி விஷம் இல்லாமல் இருக்கும்? இந்த மாதிரியான ஆய்வுகளுக்குப் பின், பெரிய அரசியல் இருக்கிறது. உலகம் முழுவதும் இயற்கை வேளாண்மைக்கும் இயற்கை விளைபொருட்களுக்கும் ஆதரவாக மக்கள் திரண்டுவரும் நிலையில், அதைக் குலைக்கப் பெரிய நிறுவனங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றே இது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்' என்றவரிடம், ''இயற்கை முறையில் விளைந்த பொருளை அடையாளம் காண்பது எப்படி?'' என்று கேட்டோம்.

''வெளித் தோற்றத்தைப் பார்த்து வேறுபாட்டைக் கண்டறிவது கடினம். சாப்பிட்டுப் பார்த்தால்தான் வேறுபாடு தெரியும். பொதுவாகப் பளபளப்பாக, பூச்சி கடிக்க£த காய்கறி பழங்களைப் பார்த்தால், அதை வாங்காதீர்கள். நீங்கள் வாங்கும் காய்கறிகளில் ஒரு சிலவற்றைப் பூச்சி கடித்திருந்தால், அது நல்ல காய்கறி என்று தெரிந்துகொள்ளுங்கள்' என்றார் சுருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism