Published:Updated:

அழகா...? ஆபத்தா...?

அழகா...? ஆபத்தா...?

அழகா...? ஆபத்தா...?

அழகா...? ஆபத்தா...?

Published:Updated:
அழகா...? ஆபத்தா...?
##~##

லக உருண்டை சுற்றும் வேகத்தைவிட வேகமாக, மாறிக்கொண்டே இருக்கிறது நம் நாகரிகம். புத்தம்புதிய ஆடைகளையும் பொத்தல் இட்டு அணிவது சென்ற தலைமுறையின் நாகரீகம் என்றால், உடல் முழுக்கத் துளையிட்டு வளையங்கள் ஊஞ்சலாட டெரர்ர்ர்ர்ர்ர் கிளப்புவது இன்றைய நாகரிகம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு காதில் கடுக்கன், புருவத்தில் அரை வளையம், ஒரு மூக்கில் மூக்குத்தி, வாய்க்கு அடியில் உள்ள தாடைப் பகுதியிலும் நாக்கிலும் சின்னக் கடுக்கன் எனத் தேடித் தேடிக் குத்திக்கொள்கிறார்கள். தொப்புளையும்கூட விட்டுவைப்பது இல்லை. உடலை ரணமாக்கும் இதுபோன்ற கலாசாரங்களால், என்னென்ன பிரச்சனைகள் - பின்விளைவுகள் ஏற்படும்? தோல் நோய் சிறப்பு மருத்துவரான மைதிலி பேசுகிறார்.

'திடீர் திடீர் என எந்த மாற்றங்கள் செய்தாலும் நம் உடல் அனுமதிக்காது. காது குத்தும்போது மெல்லிய சதைப் பகுதியின் நடுவே குத்தாமல், கைத் தவறுதலாக மேலாகவோ இல்லை சற்றுக் கீழாகவோ குத்திவிட்டால், நாளடைவில் அந்த இடம் பெரிதாகிக் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், தோலில் காயம் ஏற்பட்டால், 'சோன்ட்ரிடிஸ்’ (Chondritis) என்ற கிருமித் தாக்குதலால் காது சிவந்துபோய் வலி ஏற்பட்டுக் காய்ச்சல் வரலாம்.

அழகா...? ஆபத்தா...?

புருவத்தில் உள்ள முடியின் வேர்ப் பகுதியில் வளையத்தைக் குத்துவதால், முடி கொட்டலாம். தவிர ஒவ்வாமை ஏற்பட்டால், கண்ணுக்கும் அது பரவ வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சிலர் தங்கள் நாக்கிலும் ஸ்டட் குத்திக்கொள்கின்றனர். இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை அழித்துவிடும். உணவின் சுவையே தெரியாமல் போவதோடு, நாளடைவில் நாக்கும் மரத்துப்போகும். இயல்பான பேச்சும் குளறுபடியாகும். குத்திய இடத்தில், பூஞ்சைக் காளான் தாக்கி கேண்டிடியாசிஸ் (Candidiasis) பாதிப்பு ஏற்பட்டு, வாய் முழுவதும் புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இதேபோல, வாய்க்குக் கீழே ஸ்டட்டைக் குத்திக்கொள்வதால் மியூகோசில் (Mucocele)  என்ற நீர் நிரம்பிய சிறு கட்டி உண்டாகி துன்பம் தருவதோடு, உமிழ் நீர்ச் சுரப்பும் தடைபடும். குத்திய இடத்தில்

அழகா...? ஆபத்தா...?

குடியேறும் தொற்றுக் கிருமிகள், பல்லுக்கும் பரவி வலி கொடுக்கும்.

நாகரிகம் என்ற பெயரில், இப்படி உடலில் துளையிட்டு வளையங்களைக் குத்திக்கொள்வதால், அந்த இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதுடன், பின்னாட்களில் கிலாய்டு (Keloid)  என்ற தடிமான தழும்புகள் உண்டாகும். தொற்று நீக்கம் செய்யப்படாத ஊசியால் குத்திக்கொண்டால், 'ஹெபடைடிஸ்’ (Hepatitis)  வைரஸ் கிருமித் தாக்குதலால் அரிப்பு, புண், சீழ் வடிதல் என அடுத்தடுத்த பிரச்னைகள் உருவாகும். வெள்ளி, தங்கம் போன்ற உலோக ஆபரணங்களை நமது சருமம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், நிக்கல் போன்ற உலோகங்களை ஏற்றுக்கொள்ளாது. நிக்கல் அணிந்தால் தோலில் அரிப்பு ஏற்பட்டு, புண், சீழ் எனப் பிரச்னைகள்தான் ஏற்படும்'' என்கிறார் மைதிலி. நரம்பியல் சிறப்பு மருத்துவரான வே.முருகன், 'நம்முடைய பின்னங்காதில் தொடங்கி முகம் முழுக்க வேர்போல நரம்புகள் பரவி இருக்கின்றன. அனுபவம் இல்லாதவர்கள் தவறுதலாக இந்த நரம்புகளில் குத்திவிட்டால், முதலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அடுத்ததாக ஒரு பக்கத் தலைவலி உண்டாகும். மூளைக் காய்ச்சல் வரலாம். பாதிக்கப்பட்டது முக்கிய நரம்பு எனில், மூளையின் குறிப்பிட்ட செயல்பாடும் நின்றுவிடும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற விபரீதமான விஷயங்களைத் தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறப்புக் கவனத்துடன் இருக்க வேண்டும்'' என்கிறார். அவசியமான எச்சரிக்கை!

 நன்மையும் உண்டு!

அக்குபிரஷர் மருத்துவர் வெற்றிவேல், கூறுகையில், ''எல்லா விஷயங்களையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டியது இல்லை. மனிதனின் உடல் முழுவதும் 450 அழுத்த நிலைகள் இருக்கின்றன. ஒவ்வோர் இடத்திலும் தொடு உணர்ச்சி மூலம் பல்வேறு பலன்களை உடலுக்குக் கொடுக்க முடியும். மூளைக்கு அருகில் இருப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதால்தான் காது குத்திக்கொள்கிறோம். காதின் பின் பகுதி வழியாக நரம்புகள் வந்து முகம் மற்றும் அனைத்துப் பகுதிக்கும் உணர்ச்சிகள் பரவும். பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகச் செயல்படவைக்கும். மூக்குத்தி அணிவதால், முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள்போல் சில நரம்புகள் நாசித் துவாரத்தில் இறங்கிக் கீழே வரும். மூக்கு துவாரத்தின் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். தங்க மூக்குத்தி அணிவதால், உடல் உஷ்ணம் குறையும். அதனால்தான் காது, மூக்குப் பகுதியில் துளையிடுவதைக் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்றனர்.''

அழகா...? ஆபத்தா...?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism