Published:Updated:

மெளனம் பேசுங்கள்!

மெளனம் பேசுங்கள்!

மெளனம் பேசுங்கள்!

மெளனம் பேசுங்கள்!

Published:Updated:
##~##

சிந்தையை அடக்கி சும்மா இருத்தல் சுகம் என்றார்கள் பெரியவர்கள். சிலர் சிந்தையை அடக்க முடியாவிட்டாலும் நாவையாவது அடக்க முடியுமா என்று வாரம் அல்லது மாதம் ஒரு நாள் மௌன விரதம் கடைப்பிடிப்பார்கள். ஒருவர் மௌன விரதம் அனுஷ்டிப்பதால் நன்மைகள் உண்டா? நிச்சயம் உண்டு என்கிறார்கள் மௌன விரதம் கடைப்பிடிப்பவர்கள். இன்னொரு புறம் எந்த ஒரு விஷயமானாலும் அதை மனசுக்குள் பூட்டிவைக்கக் கூடாது. அவ்வப்போது கொட்டிவிட வேண்டும். எல்லோரிடம் இப்படிப் பேச முடியாவிட்டாலும் மிக நெருக்கமான நண்பர் அல்லது உறவுகளிடம் மனசுக்குள் இருப்பதை வெளிப்படுத்துவதன் மூலம் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வராது என்கிறார்கள் மறு தரப்பினர். இதில் எது உண்மை? 

சென்னை மனநல மருத்துவர் எம். திருநாவுக்கரசு விளக்கமாகப் பேசினார். ''இன்றைய அவசர உலகில் நின்று நிதானமாகப் பேசக்கூட யாருக்கும் நேரம் இல்லை. இன்றைய இளைய தலைமுறை மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு மௌனமாய்த் தவம் கிடக்கிறது. பாட்டைக் கேட்டபடி ஏகாந்த நிலையில் மூழ்கித் திளைக்கிறது. பேச்செல்லாம், மெசேஜ் பரிமாற்றமாய்ப் போனதன் விளைவு, வாய்விட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதனால், மருத்துவ உலகம் சொல்லும் ஆலோசனையே, 'வாய்விட்டுப் பேசுங்கள்... நோய் விட்டுப்போகும்’ என்பதுதான். சோகமோ, துக்கமோ மனதிலேயே பூட்டிவைப்பதால், ஒரு கட்டத்தில், அது வெடித்துப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆழ் மனதில் அமுங்கிக்கிடக்கும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மனமும் லேசாகும். முடிவெடுப்பதற்கான தெளிவும் பிறக்கும். 'வாய்விட்டு சிரியுங்கள்... பேசுங்கள்... அழுங்கள்’ என்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெளனம் பேசுங்கள்!

அதேபோல், பேச்சுக்கு எதிரான, மௌனத்தின் வாயிலாகவும் பல்வேறு பிரச்னைகள் நோய்களைத் தீர்க்க

மெளனம் பேசுங்கள்!

அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.  புலன்களை அடக்கினால் மனம் அடங்கும். மனதை அடக்க மௌனம் பேருதவியாக இருக்கும். பேச்சு, மௌனம் இரண்டுமே அளவோடு சம நிலையில் இருந்தால் உடல் மற்றும் மனதில் சோர்வு என்பதே இருக்காது.

மௌனம், மௌன விரதம் இரண்டும் வெவ்வேறு. பேசாமல் இருந்தால், கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்தால், அது மௌனம். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற மனதில் உறுதியோடு நினைத்துக்கொண்டு, அந்த வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது மௌன விரதம். இது மனத்தையும் உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாப்பதுடன், காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் விதைக்கும்.

மௌனம் மனதில் ஏற்படும் சஞ்சலம், கோபம், வஞ்சகம், பொறாமை என அனைத்துக் கெட்ட குணங்களையும் நம்மைவிட்டு விலக்கிவிடக்கூடியது. ஈகை, பொறுமை, மன்னிப்பு போன்ற நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் குடிகொள்ள உதவி செய்யும். தவ நிலைக்கு நம்மை அழைத்துச் சென்று ஆன்மிக ஞானத்தைத் தோற்றுவிக்கும். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், 'ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளே... இறைவனை உயிராக உணர்கிற மனிதன் பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கின்றான் என்பதே.

புலன்களையும் மனதையும் ஒருநிலைப்படுத்துவதுதான் தியானம். தியானம் மௌனத்தில்தான் துவங்குகிறது. சுற்றுப்புற ஒலிகளைக் காது உள்வாங்கிக்கொண்டாலும், மூளை அதைக் கிரகிக்காது. ஆனால், கண்கள் வெளிவட்டாரத்தில் நடக்கும் செயல்கள், சம்பவங்கள், புலம்பல்களை மூளைக்குக் கொண்டுசென்று மனம் விஸ்வரூபம் எடுக்கச் செய்வதில் பார்வைக்குப் பெரும் பங்கு உண்டு. அதனால்தான் தியானத்தின்போது கண்களை லேசாக மூடிக்கொள்கிறோம். இதனால், சுவாசத்தை மட்டும் உணர்ந்து மனம் ஒரு புள்ளியில் கரைந்துபோகிறது. உள்ளும் புறமும் சம நிலையில் மனதைச் சீராய்வைக்கிறது.  

மெளனம் பேசுங்கள்!

சரி... எப்போதெல்லாம் மௌனம் காக்கலாம்?

புத்திசாலிகள் மற்றவர்களைப் பேசவிட்டு, மௌனம் சாதித்து, தேவையானபோது மட்டும் பேசுகிறார்கள். ஆனால், அதிகம் பேசுபவர்கள், சில சமயம் ஆபத்தில் மாட்டிக்கொள்வார்கள். ஒருவரிடம் பெறப்பட்ட கோப வார்த்தைகளை மற்றொருவரிடம் காண்பித்து வடிகால் தேடுகிறோம். இது உணர்வுகளின் தாக்குதல். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அறிவுபூர்வமாய் யோசிக்கப் போதிய அவகாசம் கொடுக்கவும் மௌனம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, கணவன் மனைவியின் பிரச்னைக்குரிய உரையாடலின்போது, கடைசியில் 'செத்துத் தொலை’ என்ற ஒரு வார்த்தையை எதேச்சையாய்ப் பிரயோகிக்கும்போது, உறவையே இழக்க நேரிடலாம். அந்த இடத்தில் வெளியேறும் வார்த்தைகளை கொஞ்சம் தாமதப்படுத்த இந்த மௌனம் உதவுகிறது. மௌனத்தைக் கடைப்பிடிக்க நிதானம் அவசியம். இதனால் உணர்ச்சிச் சிதறல்கள் இருக்காது. பொதுவாகவே எதிர் மறையான ஆவேசம் வரும்போது மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வம்பு பேசுபவர்களிடமும், வாயைக் கிளறி வேடிக்கை பார்ப்பவர்களிடமும் வீண் பேச்சுப் பேசாமல், அந்த இடத்தைவிட்டு மௌனமாய்க் கடந்து வந்துவிட்டால்... மனம் ரணமாகாமல் இருக்கும். மௌன விரதம் என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்காமல், நம் சௌகர்யம், சந்தர்ப்பம் சூழ்நிலையைப் பொறுத்து, மாதம் ஒரு நாள் மௌனமாக இருக்கலாம். எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் மௌன விரதம் இருக்கலாம்.

மனதை சஞ்சலம் இல்லாமல் வைத்திருக்க மௌனம் மட்டும் போதாது. தியானமும் அவசியம். தியானம் செய்ய முடியாதவர்கள் தினமும் காலை வேளையில் 10 நிமிடங்கள் மௌனம் கடைப்பிடிக்கலாம். அப்போது பேப்பர் படிப்பது, டி.வி. பார்ப்பது, வெளி நபர்கள் பேசுவதைக் கேட்பது போன்ற எதிலும் கவனத்தைச் செலுத்தக் கூடாது.  நல்ல சூழலில் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தி, தியானத்தில் ஈடுபடுபவதுபோல் மௌனத்தில் ஈடுபடுங்கள். பேச்சு மட்டும் அல்லாமல்... மனமும் மௌனமானால்தான் மௌனத்தின் பலன் நம் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்'' என்கிறார் திருநாவுக்கரசு.

மௌனம் ஒரு மாபெரும் தவம்!

மெளனம் பேசுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism