பிரீமியம் ஸ்டோரி
துளித் துளியாய்...

இரண்டே ரூபாயில்  ரத்தப் பரிசோதனை...

மிகக் குறைந்த கட்டணத்தில், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் குளுகோமீட்டரை பிட்ஸ் பிலானி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்னர். இந்தப் பரிசோதனை முறைபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் கடைசிக் கட்ட ஆய்வில் இருக்கிறது. இந்தக் கருவி சந்தைக்கு வந்தால் ரத்தத்தின் சர்க்கரை அளவை இரண்டே ரூபாயில் கண்டறிந்துவிட முடியும். இந்தக் கருவியைக்கொண்டு 1,000 முறை ரத்தப் பரிசோதனை செய்ய முடியும். பத்தே விநாடிகளில் பரிசோதனை முடிவுகள் கிடைத்துவிடுமாம். இந்தப் புதிய குளுகோமீட்டர் டிசம்பருக்குள் தயாராகிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வார்த்துள்ளனர்.

ஆபரேஜன் நோ! நோ!

'அப்பென்டிக்ஸ்’ என்னும் குடல்வால் அழற்சிக்குப் புதிய மருந்து ஒன்றைக் கண்டறிந்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அறுவைசிகிச்சை இல்லாமல், குடல்வால் பிரச்னையை நோய்முறி மருந்துகளைக்கொண்டே குணப்படுத்திவிடலாம் என்பது ஸ்வீடன், கோதன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹான்சனின் கண்டுபிடிப்பு. மோசமான நிலையில் உள்ளோரைத் தவிர, 80 சதவீதம் நோயாளிகளை மருந்து மூலமாகவே குணப்படுத்த முடியுமாம்!

அசத்துது பாரு அலர்ட்!

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண்கள் தங்களின் நேரத்தை மற்றவர்களுக்குப் பயன்பெறும் விதத்தில் செலவிட ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 'அலர்ட்’. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முதல் உதவிப் பணியில் கல்லூரி மாணவிகள், ஹோம் மேக்கர்ஸ் முதல் பெரிய நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வரை, சுமார் 20,000 நபர்கள் உதவிப் பயிற்சி பெற்றுள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி, அலர்ட் தொடங்கி ஆறாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், ஆண்டு விழாவைப் புதுமையான முறையில் கொண்டாடினர் இந்தக் குழு உறுப்பினர்கள். அன்றைய தினம், இந்தக் குழுவில் உள்ள அனைத்துத் தன்னார்வலர்களும் சென்னையில் பல்வேறு இடங்களில்

துளித் துளியாய்...

108 ஆம்புலன்ஸுடன் பயணம் செய்து, பலருக்கும் உதவினார்கள்.

மார்பகப் புற்றுநோயைப் போக்க 'மாமோ’

ஐந்து ஆண்டுகளாகத் திருச்சியில் செயல்பட்டுவரும் சாந்தா மார்பகப் புற்று நோய் அறக்கட்டளைக்கு 50 லட்ச ரூபாயில் 'மாமோ பஸ்’ ஒன்று இங்கிலாந்தில் இருந்து வந்து இறங்கி இருக்கிறது.

''திருச்சியைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் இந்த 'மாமோ பஸ்’ போய்ப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கான 'மாமோகிராஃப்’ பரிசோதனையைச் செய்ய உதவும். மிகக் குறைந்த கட்டணமாக

துளித் துளியாய்...

500 மட்டுமே வசூலிக்கின்றனர். இந்த 'மாமோ பஸ்’ சேவை தென் தமிழகத்திலேயே முதன்முதலாகத் திருச்சியில்தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக 2020-க்குள் 'மார்பகப் புற்றுநோயே இல்லாத பெண்கள்’ மாவட்டமாக திருச்சியை உருவாக்க வேண்டும்.'' என்பதே  குறிக்கோள்!

துளித் துளியாய்...

நிமிர்ந்த நடைக்கு இனி... நோ தடை!

பிறந்ததில் இருந்து கடுமையான முதுகுத் தண்டுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி நீனா. ரோபாடிக் தொழில்நுட்பம் மூலமாக அறுவைசிகிச்சை செய்து நீனாவின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள். இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த மருத்துவர் சஜன் ஹெக்டே, ''ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியால் எந்த அறுவை சிகிச்சையையும் மிகத் துல்லியமாக எளிய வழியில் செய்து குணமாக்கிவிட முடியும். சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு         10 நாட்களே ஆன நிலையில், இதுவரை         12 அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு இருக்கின்றன.  ஆசியாவிலேயே மூளை நரம்பு அறுவைசிகிச்சையில் ரோபாடிக் தொழில்நுட்பம் இங்கு மட்டுமே கையாளப்படுகிறது'' என்றார் பெருமிதம் பொங்க!

துளித் துளியாய்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு