Published:Updated:

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

Published:Updated:
'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!
##~##

ரு வீடு எந்த அளவுக்குச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தாலே போதும். கழிப்பறைதான் வியாதிகளின் உற்பத்திக்கூடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'கேப்டன்’ பாணியில் புள்ளிவிவரம் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிராம் மனிதக் கழிவில் ஏறக்குறைய ஒரு கோடி வைரஸ்கள், 10 லட்சம் வகை பாக்டீரியாக்கள், ஆயிரம் ஒட்டுண்ணி முட்டைகள் இருக்கின்றன.  கழிப்பறைத் தூய்மை மூலம் பலவிதமான நோய்களைத் தவிர்க்க முடியும் என்கிறார் கோயமுத்தூர் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை மூத்த உதவிப் பேராசிரியர் ஏ.முரளி.

''தூய்மைக் குறைவான கழிவறைகளால் என்ன விதமான நோய்கள் பரவும்?''

''கழிப்பறை சுத்தமாக இல்லாவிட்டால் புழுத்தொற்றுக்கள் ஏற்படும். சளி, இருமல், மூளைக் காய்ச்சல் போன்றவற்றைப் பரப்பும் ஸ்ட்ரெப்டோகோகஸ் (Streptococcus)  வகை பாக்டீரியா, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகச் செயல் இழப்பு, ரத்தசோகை போன்றவற்றை ஏற்படுத்தும் ஈ.கோலி  (E. coli), வயிற்றுப்போக்குக்குக் காரணமான பேஸிலஸ் (Bacillus)  போன்ற ஏராளமான கிருமிகள் தூய்மையற்ற கழிப்பறைகளில் இருந்து பரவுகின்றன.

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

ஷிஜெல்லோஸிஸ்(Shigellosis), சால்மோனெல்லா (Salmonella) வகை பாக்டீரியா போன்றவை கழிப்பறைக் கோப்பைகளில் அதிக அளவில் இருக்கும். இவை வயிற்றுப்போக்கு, சீதபேதி, குடல் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.ஸ்டாஃபைலோகோக்கஸ் (Staphylococcus) வகை பாக்டீரியா கழிவறையில் உட்காரும் இடங்களில் இருக்கும். தோல் நோய் பரப்பும் ஸ்பெஷலிஸ்டுகள் இவை.  தொடை இடுக்குகளில் வரும் அரிப்புக்குக் காரணமான பூஞ்சைகள் அதிக அளவில் இருப்பதும் கழிவறைகளே!

இவை எல்லாம் சில உதாரணங்கள்தான். இன்னும் ஏராளமான கிருமிகள் அதிகமாக வசிக்கும் இடம் கழிப்பறைகள்தான்.

''கழிவறைத் தூய்மைக்கு என்னென்ன வழிகள்?''

''கழிப்பறைகளை ஆன்டிபாக்டீரியல் மற்றும் தரமான சுத்திகரிப்புக் கரைசல்கள் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.  சுத்தமான கழிப்பறை வழக்கங்களைக் கைக்கொள்வதுதான் கழிவறைத் தொற்றுகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி. சில வீடுகளில் கழிப்பறை இருந்தபோதும் தெருவிலேயே சிறு குழந்தைகளை மலம் கழிக்கவைக்கிறார்கள். இது அந்தக் குழந்தைக்கும் நல்லது அல்ல. சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுக்கும் வழிவகுக்கும். மேலும் இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குக் கழிப்பறையைப் பயன்படுத்தும் குழந்தைகளைவிட வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு இரட்டிப்பு சாத்தியங்கள் இருக்கின்றன.

நாம் எப்படி மற்றவர்களுடைய கழிவுகளைச் சுத்தப்படுத்த விரும்ப மாட்டோமோ அதேபோல மற்றவர்கள் நம் கழிவைத் தூய்மை செய்ய விரும்ப மாட்டார்கள் என்பதையும்

'அந்த' இடத்தின் சுத்தம் அவசியம்!

நினைவில்கொள்ளுங்கள். வீடுகளின் கழிப்பறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருப்பது மிகவும் முக்கியம். அசுத்தக் காற்றை நீங்கள் அதிகமாகச் சுவாசிப்பதை இது குறைக்கும்.

பயன்படுத்திய சானிடரி நாப்கின்களைக் கழிப்பறையில் ஃப்ளஷ் செய்ய வேண்டாம்.

வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்திய ஒவ்வொரு முறைக்குப் பிறகும்  தேவைப்பட்டால், பிரஷ் கொண்டு சுத்தம் செய்வது அவசியம். அது மற்றவர்கள் வேலை என்று எண்ணக் கூடாது. புத்தகங்கள், கைக்கடிகாரங்கள், பைகள் போன்ற எதையும் கழிப்பறைக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். அவற்றில் கழிப்பறைக் கிருமிகள் தொற்றக் கூடும். தப்பித் தவறி அப்படிக் கழிவறைக்குள் எடுத்துச்சென்ற பொருட்களை மறந்தும்கூட உணவருந்தும் மேசையின் மீதோ அல்லது சமையல் அறையிலோ வைக்காதீர்கள்.

தரையிலோ சுவரிலோ அல்லது அமரும் மேடையிலோ சிந்தாதபடி சிறுநீர் கழிப்பதே நல்லது. குழந்தைகளையும் அப்படியே பழக்குங்கள்.

வெஸ்டர்ன் டைப் கழிவறை என்றால், பயன்படுத்திய பிறகு மூடியால் மூட வேண்டும்.

பொதுக் கழிவறைகளின் சுகாதாரத்தை நாம்தான் காக்க வேண்டும்.

பொதுக் கழிப்பறைகளில் புகைபிடிப்பது மற்றும் குப்பைக்கூளங்களைப் போடுவதைத் தவிர்க்கலாம். பொதுக் கழிப்பறைக் கைப்பிடிகளையோ தாள்களையோ தொடும்போது டிஷ்யூ பேப்பர்கொண்டு திறப்பதும் மூடுவதும் நல்லது. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை நன்கு கழுவினாலே பல கிருமித்தொற்றுகளில் இருந்தும் தப்பலாம்.

ட்ரெக்கிங் போவது தற்போது பிரபலமாகி வருகிறது. அதுபோன்ற சமயங்களில் இயற்கை உபாதைகளைத் திறந்த வெளியிலேயே கழித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது நீர் நிலைகளைவிட்டுத் தூரத்தில் கழிப்பது நீர் நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்கும். மேலை நாடுகளில் திறந்த வெளியில் கழிக்கும்போது ஒரு சிறிய குழி ஒன்றைத் தோண்டிக் கழிவுகளை அதில் மூடும் நல்ல வழக்கம் இருக்கிறது. நாமும் அதைப் பின்பற்றலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism