Published:Updated:

உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!

உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!

உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!

உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!

Published:Updated:
உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!
##~##

சாப்பிடும்போது திடீரெனப் புரையேறினால், ''யாரோ நினைக்கிறார்கள்...'' என்று அருகில் இருக்கும் பிரியமானவர்கள் செல்லமாக நம் தலையில் தட்டுவார்கள். சாதாரண நிகழ்வுபோலத் தோன்றும் இந்தப் புரையேறுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும் தெரியுமா? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவலையே வேண்டாம். புரையேறுவது ஏன் ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் அதிகமாக ஏற்படும்? சிகிச்சை எப்போது தேவைப்படும்? புரையேறுதல் வராமல் தவிர்ப்பது எப்படி?’ என்று எல்லாம் தெரிந்துகொள்ளலாம். திருநெல்வேலி அரசுப் பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் அலெக்ஸ் எட்வர்ட்ஸ் பகிர்ந்துகொள்கிறார்...

'மனிதனின் குரல்வளை மூடி, வால்வு போன்ற அற்புதமான ஒரு படைப்பு. உணவு உண்ணும்போதோ, எதையாவது குடிக்கும்போதோ முன்னும் பின்னுமாக நகர்ந்து உணவுத் துணுக்குகளோ அல்லது திரவத் துளிகளோ மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குள் புகுந்துவிடாதபடி அதுதான் பாதுகாக்கிறது. எதையும் சாப்பிடாத / குடிக்காதபோது தன்னுடைய இயல்பான நிலைக்குத் திரும்பி, காற்றை நுரையீரலுக்குள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கும்.

எச்சில், உணவுத் துகள்கள், குடிக்கும் பானத்தின் திவலைகள், வயிற்றில் இருந்து மேல் எழும்பித் தொண்டைக்கே வந்த பொருட்கள்... இவற்றில் ஏதாவது உணவுக் குழாய்க்குள் போவதற்குப் பதிலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றால் புரையேறுதல் நடக்கிறது.

உங்களை யாரும் நினைக்க வேண்டாம்!

இது ஆஸ்பிரேஷன் நிமோனியா என்ற சிக்கலுக்கு வழிவகுத்து, நுரையீரலைப் பாதித்து, நுரையீரல் வீக்கத்தையும் நோய்த் தொற்றையும் ஏற்படுத்தக்கூடும். குரல்வளை மூடி வீங்குவதை எபிகிளாட்டிடிஸ் என்போம். இது உயிருக்கே ஆபத்தானது. ஏற்கெனவே சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் கூடுதல் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. உணவை விழுங்குவதில் சிரமம் உள்ள சில நோயாளிகளுக்கு அடிக்கடி புரையேறுதல் ஏற்படக்கூடும். அதிக அளவில் மது அருந்துவது, மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது அல்லது மயக்க மருந்து அளிக்கப்படுவது போன்றவை சுய நினைவை இழக்க அல்லது குறைக்கச் செய்யும் நிலைக்குக் காரணமானவை. இவற்றாலும் புரையேறலாம். கர்ப்பிணிகள், அதிக பருமன் கொண்டவர்கள், வயிறு நிறையச் சாப்பிட்டவர்கள் ஆகியோருக்குப் புரையேறும் வாய்ப்பு அதிகம். பக்கவாதம் வந்தவர்களுக்கும் தலையில் காயம்பட்டவர்களுக்கும் அடிக்கடி புரையேறும். நீரில் மூழ்கும்போது தண்ணீர் நுரையீரலுக்குள் போவதாலும் இது நிகழும். மயங்கிய நிலையில் இருப்பவர்கள் வாந்தி எடுக்கும்போது அது நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. குழாய் மூலம் உணவு புகட்டப்படும் நோயாளிகளுக்கும் புரையேறும் ஆபத்து அதிகம்.

குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகச் சிறியனவாக இருக்கும். எனவே கடலை, பட்டாணி போன்ற உணவுப் பொருட்கள் மூச்சுக் குழாய்க்குள் எளிதில் சென்றுவிட வாய்ப்பு உருவாகும். அப்போது புரையேறி மூச்சுத்திணறலும் தொடரும். ஆக்சிஜன் சப்ளை முற்றாகத் துண்டிக்கப்பட்டு, சில நிகழ்வுகளில், ஓரிரு நிமிடங்களிலேயே மரணம்கூட சம்பவிக்கும்.

மருத்துவமனையில் பிராங்கோஸ்கோபியின் மூலம் நுரையீரலுக்குள் சென்ற பொருளை அப்புறப்படுத்துவார்கள். ஆக்சிஜன் அளிக்கும் செயற்கைச் சுவாச சிகிச்சையும் மேற்கொள்வார்கள்.

புரையேறாமல் தடுக்கச் சில வழிகள் :

• பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ... உணவைச் சாப்பிடக் கூடாது.

•  படுத்துக்கொண்டோ, சாய்வான நிலையிலோ... சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ கூடாது.

•  நிறுத்தி நிதானமாக, நன்கு மென்று உணவை விழுங்க வேண்டும்.

•  படுக்கும்போது தலையணையை 30 முதல் 45 டிகிரி கோணம் உயர்வாக இருக்க வேண்டும்.

•  குழாய் மூலம் உணவு அளிக்கப்படும் நோயாளிகளின் உணவூட்டும் குழாயை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

•  புரையேறியவரை முன்னோக்கி வளைந்து நிற்கச் சொல்லி அவரது தோள்களுக்கு இடையில் சில தடவை தட்டலாம். அப்போது மூச்சுக் குழாய்க்குள் சென்றது வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

•  மார்பு எலும்புகளுக்குக் கீழாக வயிற்றின் முன்புறம் அழுத்தம் கொடுப்பதன் மூலமும் புரையேறக் காரணமான பொருள் வெளிவரச் செய்யலாம். தொடர்ந்து பிரச்னை இருந்தால், மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்வது அவசியம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism